topic_image


hi friends,
can any of you tell me what techniques do western ladies use to remove hair over legs & others areas? razor, cream everything causes fast regrowth of hair in a day or two also which consumes so much of time. i dont think turmeric will work out due to the color it imparts on skin..any ideas?


விஜி ப்ரவீண்
ஆகஸ்டு 2, 2008 - 5:20am - வழங்கியவர் T S JAYANTHI

என் நாத்தனார் ANNIE FRENCH உபயோகிக்கிறாள் மாதம் இருமுறை. ஏதும் பிரச்னை இல்லை என்று சொல்கிறாள்.
பொழுது போகவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். தமிழ் தெரியுமா? தெரிந்தால் இங்கு வந்துஎங்களுடன் கலந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

to remove unwanted hair
ஆகஸ்டு 6, 2008 - 2:15pm - வழங்கியவர் viji praveen

மிக்க நன்றீ திருமதி ஜெயந்தி நான் இத்தனை நாள் தமிழில் எப்படி type செய்வது என்று தெரியாமல் ஆங்கிலதில் எழுதி வந்தேன், மண்ணிகவும்.
நானும் தற்போது cream தான் உபயோகிக்கிறேன், வாரம் இரு முறையாவது உபயொகிக்கவேண்டி உள்ளது ஆதனால்தான் கேட்டு இருந்தேன்.
என் எழுத்தில் பிழை இருக்கலாம், சற்று பொருத்துக்கொள்ளுங்கள்

விஜி ப்ரவீன்... உங்களுக்காக
ஆகஸ்டு 6, 2008 - 2:53pm - வழங்கியவர் இலா

இங்க வால்மார்ட்ல கூட இந்தமாதிரி ஹேர் ரிமூவிங் கிரீம் எல்லாம் கிடைக்குது வேக்ஸ் கூட இருக்கு .. உங்களுக்கு எப்படி எது ஒத்து போகுமோ அதனை டிரையல் அன்ட் எரர் முறையில் கண்டுபிடித்து உபயோகியுங்க... வேக்ஸ் செய்தால் அதிக நாளுக்கு முடி வளராமல் இருக்கும்...

I am sure you would have seen brands like NAIR or VEET , Sally hansen etc.

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

ஹேர் ரிமூவிங் - சில முறைகள்
ஆகஸ்டு 6, 2008 - 6:22pm - வழங்கியவர் DEVA

ஹாய் விஜி, ஹேர் ரிமூவ் பண்ண நிறைய வழிமுறைகள் இருக்கு. உங்களுக்காக இங்கே எல்லா முறைகளும், அதில் உள்ள குறை, நிறைகளையும் சொல்றேன். முதலில், ஹேர் ரிமூவிங் க்ரீம். இதனை உபயோகப்படுத்துவது எளிது. நிறைய பேர் உபயோகப்படுத்தறதுக்கான காரணமும் அதுதான். ஆனால் அதில் இருக்கற குறைகள் - உடனடியா ஹேர் வளர ஆரம்பிச்சுடும், க்ரீமின் ஸ்மெல் (இப்போ நிறைய க்ரீம் ஸ்மெல் ப்ரீ- Scented னு வருது. ஆனாலும் உபயோகிக்கும்போது லேசா ஸ்மெல் இருக்கு), முடி திக்காக வளர ஆரம்பிப்பது, மேலும் புதுசா வளர்ந்த சின்ன சின்ன ஹேர் மேல அப்ளை பண்ணா சரியா ரிமூவ் செய்யாது. மேலும் இரண்டொரு நாள் மட்டுமே சருமம் வழ வழப்பாக இருக்கும். அடுத்து ரேசர். இதுவும் ஹேர் ரிமூவிங் க்ரீமின் ரிசல்ட்தான் கொடுக்கும். க்ரீமைவிட இன்னும் அதிகமாக இரண்டொரு நாளிலேயே முடி வளர்ந்துவிடும். மேலும் அடிக்கடி உபயோகப்படுத்த வேண்டியிருக்கும். இதனால் ஸ்கின்னும் பாதிக்கப்படும். இப்போது க்ரேப் ப்ரூட், அலோவேரா ஜெல் தடவிய ரேசர்கள் விற்கிறார்கள். இது ஓரளவுக்கு ஸ்கின்னின் மென்மை பாதிக்கப்படாமல் காக்கும். இப்படி ரேசர் உபயோகிக்கும்போது, லேடீஸ் ரேசருடன், லேடீஸ் ஜெல், ஆப்டர் ஷேவ் போன்றவற்றையும் அதனுடன் வாங்கி உபயோகப்படுத்துவது நல்லது. அடுத்து த்ரெட்டிங், த்ரெட்டிங் என்றதும் புருவத்திற்கு மட்டும்தான் என்று நினைத்து விடாதீர்கள். நீங்களே த்ரெட்டிங் செய்து கொள்ளப் பழகிவிட்டால் அப்பர் லிப், காலுக்கும் செய்து கொள்ளலாம். ஆனால் அண்டர் ஆர்ம்ஸ், கைகளுக்கு முடியாது. இந்த மூன்று முறைகளிலும் உள்ள அட்வாண்டேஜ் முடி உள்ளுக்குள் வளருவது (Hair Internal Growth) இருக்காது. இப்போது Veet , Nair ல் இதுபோல் ஹேர் உள்ளுக்குள் வளருவதை தடுக்க உதவும் க்ரீம்கள் வந்துவிட்டன. அதைவிட சிறந்த வழி எப்போது ஹேர் ரிமூவ் செய்தாலும் உடனடியாக அந்த இடத்தை கழுவிவிட்டு, மாய்ச்சுரைசிங் க்ரீம் அல்லது பேபி ஆயில் போட்டு மசாஜ் செய்து விடுவதுதான்.

அடுத்ததாக வேக்சிங். இது கொஞ்சம் ஸ்டிக்கியாக (பிசுபிசுப்பாக) இருந்தாலும் ஹேர் ப்ரீ சருமத்திற்கு நல்ல சாய்ஸ். இதில் முடி வளருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும். புதிதாக வளரும் முடியும் முரடாக இல்லாமல் மென்மையாக இருக்கும். இதில் Internal growth இருக்கும். மேலே சொன்ன க்ரீம் மசாஜ் செய்தால் தவிர்க்கலாம். இதனை உடம்பில் எல்லா இடத்துக்கும் உபயோகப்படுத்தலாம்.ஹார் வேக்ஸ், கோல்ட் வேக்ஸ் என்று இரண்டு வகை உள்ளது. ஹாட் வேக்ஸ் உபயோகப்படுத்தும்போது அதிக சூடு இல்லாமல் சரியான சூடாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஸ்கின்னுக்கு எரிச்சல், சிவந்து போய்விடுதல் போன்ற விளைவுகள் ஏற்படலாம். வேக்சிங் நல்ல பலன் தர உபயோகிக்கும் முன்பு சருமத்தில் கொஞ்சம் பவுடர் தடவிவிட்டு பிறகு உபயோகிக்க வேண்டும். எளிதாக இருக்கும். வலியும் அவ்வளவாக இருக்காது.வேக்சிங் பொதுவாக 15 நாளைக்கு ஒரு முறை உபயோகித்தால் போதும்.சின்ன சின்ன புதிதாக வளர்ந்த ஹேருக்கு வேக்சிங் சரியாக வராது. அடிக்கடி முகத்திற்கு உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முகத்தில் உள்ள ஸ்கின் லூசாகிவிடும். முகத்திற்கு த்ரெட்டிங்தான் பெஸ்ட். இதனை அந்தரங்க இடங்கள் அனைத்துக்குமே உபயோகப்படுத்தலாம். இதில் பிரெசிலியன் வேக்சிங்,பேண்டி லைனர் வேக்சிங்னு நிறைய வகை வெளிநாடுகளில் ப்யூட்டி சலோனில் செய்கிறார்கள். அதனை வீட்டிலேயே நாம் செய்து கொள்ளலாம். வலியை தாங்கிக் கொள்ள முடிந்தால் ட்ரை பண்ணலாம். வேக்சிங் செய்த பிறகு சருமம் மிகவும் வழ வழப்பாக இருக்கும். முடி வளர்ந்தாலும் ஸ்கின் ஸ்மூத்தாக இருக்கும்.

அடுத்ததாக என்னோட பெஸ்ட் சாய்ஸ் எபிலேட்டர்தான்.எபிலேட்டர் என்பது ஒரு சின்ன ரேசர் மாதிரி இருக்கும். கரண்ட் தேவை.அதில் உள்ள ரோலர் முடியை வேருடன் எடுத்து விடும். அப்படியே வேக்சிங் செய்வது போலவே இருக்கும். Braun Silk Epil, Philips பிராண்டுகள் நன்றாக இருக்கும். சருமமும் அப்படியே வேக்சிங் பண்ண மாதிரி வழவழப்பாக இருக்கும். இதிலும் Internal growth இருக்கும். இதை உபயோகிக்கும் முன்பாக சருமத்தில் பவுடர் போட வேண்டும். சின்ன சின்ன ஹேரையும் எடுத்துடும். முடி வளருவது குறைந்துவிடும். முதல் முறை மட்டுமே வலிக்கும். வேக்சிங் போன்று பிசு பிசுப்பு கிடையாது. நீளமான ஒயர் இருப்பதால் பிளக்கை மாட்டிவிட்டு (பேட்டரி சார்ஜர் உள்ள வகைகளும் இருக்கிறது) தேவையான இடத்தில் உபயோகிப்பது எளிது. உடம்பின் எல்லா பாகங்களுக்குமே உபயோகப்படுத்தலாம். ட்ராவல் கிட்டோடு வருவதால் எங்கேயும் எடுத்துட்டு போகலாம். ஒரு முறை வாங்கினால் வாழ்நாள் முழுதும் உபயோகப்படுத்தலாம். விலை கொஞ்சம்தான் அதிகம். 2000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. ப்யூட்டி பார்லர் போக வேண்டிய தேவையில்லை. வேக்சிங், க்ரீம் போன்று துணி, டிஸ்போசபிள் ஸ்ட்ரிப் என்று எதுவும் தேவையில்லை.

உடம்பில் முடி எடுக்கும் முன்பு பொதுவாக ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் குளித்துவிட்டு உடனே ஹேர் ரிமூவ் செய்யாதீர்கள். சருமம் ஈரப்பதமாக இருக்கும்போது முடியை எடுத்தால் சருமம் பாதிக்கப்படும். அதே போல் மாய்ச்சுரைசிங் க்ரீம் உபயோகித்தப் பிறகு ஹேர் ரிமூவ் செய்யாதீர்கள். பீரியட்ஸ் நேரத்தில் ஹேர் ரிமூவிங் செய்யாதீர்கள். கருவுற்றிருக்கும் போது ஹேர் ரீமூவிங் அடிக்கடி செய்யாதீர்கள். ஆனால் பீரீயட்சுக்கு முன்னாடி செய்து கொள்வது நல்லது. நமக்கு ஸ்கின் சம்பந்தமான தொற்று நோய்கள் வராமல் இருக்கும். இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

thank you deva
ஆகஸ்டு 6, 2008 - 9:05pm - வழங்கியவர் swastika

thank you deva

ஹலோ தேவா
ஆகஸ்டு 7, 2008 - 3:22am - வழங்கியவர் Thanisha

எனக்கு இதுவரை பரு வந்தது கிடையாது. இப்போது நான் ஓலே டே க்ரீம் மற்றும் நைட் க்ரீம் யூஸ் பண்ணுகிறேன். சோப் ஹிமாலயாஸ் யூஸ் பண்ணுகிறேன். இந்தியாவில் டவ் யூஸ் பண்ணி கொண்டிருந்தேன், தற்பொழுது எனக்கு அடிக்கடி பரு வருகிறது. நான் மற்ற எந்த மேக்கப் சாதனமும் உபயோகிப்பதில்லை. ஒரு சில நேரம் காம்பாக்ட் பவுடர் யூஸ்பண்ணுவேன். எனக்கு பரு வர என்ன காரணம் கூறுங்கள்.

மேலும் இங்கு, நிவ்யா, மேபலின் போன்ற பிராண்டுகள்தான் பெரும்பாலும் கிடைக்கிறது. இந்த பிராண்டுகளைப் பற்றி தெரிந்தால் கூறவும். நான் மா நிறம். எனக்கு எந்த மாதிரி பெளடேஷன்,லிப்ஸ்டிக், காம்பாக்ட் பவுடர் வாங்க வேண்டும் என்பதை (நான் குறிப்பிட்ட பிராண்டில்) கூறவும் உங்கள் பதிலுக்காக் காத்திருக்கிறேன்.

ஹலோ தேவா
ஆகஸ்டு 7, 2008 - 3:41am - வழங்கியவர் Thanisha

எனக்கு இதுவரை பரு வந்தது கிடையாது. இப்போது நான் ஓலே டே க்ரீம் மற்றும் நைட் க்ரீம் யூஸ் பண்ணுகிறேன். சோப் ஹிமாலயாஸ் யூஸ் பண்ணுகிறேன். இந்தியாவில் டவ் யூஸ் பண்ணி கொண்டிருந்தேன், தற்பொழுது எனக்கு அடிக்கடி பரு வருகிறது. நான் மற்ற எந்த மேக்கப் சாதனமும் உபயோகிப்பதில்லை. ஒரு சில நேரம் காம்பாக்ட் பவுடர் யூஸ்பண்ணுவேன். எனக்கு பரு வர என்ன காரணம் கூறுங்கள்.

மேலும் இங்கு, நிவ்யா, மேபலின் போன்ற பிராண்டுகள்தான் பெரும்பாலும் கிடைக்கிறது. இந்த பிராண்டுகளைப் பற்றி தெரிந்தால் கூறவும். நான் மா நிறம். எனக்கு எந்த மாதிரி பெளடேஷன்,லிப்ஸ்டிக், காம்பாக்ட் பவுடர் வாங்க வேண்டும் என்பதை (நான் குறிப்பிட்ட பிராண்டில்) கூறவும் உங்கள் பதிலுக்காக் காத்திருக்கிறேன்.

மேக்கப் ஷேடுகள்
ஆகஸ்டு 7, 2008 - 7:47pm - வழங்கியவர் DEVA

ஹாய் தனிஷா, நீங்க கேட்ட கேள்வியிலேயே உங்களுக்கான பதிலும் இருக்கிறது. நீங்கள் உபயோகிக்கும் Olay க்ரீம்தான் பருவுக்கு காரணம். ஏனென்றால் அவை ஆய்லி சருமத்துக்கு பெஸ்ட் சாய்ஸ் இல்லை. மேலும் நீங்கள் இரு முறை வேறு உபயோகப்படுத்துவதால் முகத்தில் பருக்கள் வருகின்றன. Olay மட்டுமில்லை நிவியாவும் கூட இப்படி பருக்களை வர வழைக்கும். அதற்கு காரணம் அவற்றில் இருக்கும் அதிகமான மாய்ஸ்சுரைசிங். ஒரு முறை உபயோகிப்பது ஓக்கே. ட்ரை சருமம் உள்ளவர்களுக்கு Olay, Nivea நல்ல சாய்ஸ். அப்படி உங்களுக்கு Olay தான் பிடிக்கின்றது என்றால பரு வராமல் இருக்க முகத்தில் உள்ள எண்ணெய்ப்பசையை நீக்க வாரம் இரு முறை முகத்தை ஸ்க்ரப் செய்யுங்கள். பிறகு பேஸ் பேக் போடுங்கள். முகம் கழுவ மட்டும் Clearsil Face wash உபயோகியுங்கள். எனது கீழ்க்கண்ட பதிவில் மேக்கப் புராடக்ட்ஸ் பற்றி சொல்லி இருக்கின்றேன். பாருங்கள்.
http://www.arusuvai.com/tamil/
forum/no/3747

உங்கள் சருமம் என்ன நிறம், அதன் தன்மை( Normal, dry or oily) பற்றி சொன்னீர்கள் என்றால் என்னால் ஷேடு பற்றி தெளிவாக சொல்ல முடியும். இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

ஹலோ
ஆகஸ்டு 8, 2008 - 8:16am - வழங்கியவர் arunkavi

ஹலோ தேவா,
என் பெயர் கவிதா,நான் இப்பொழுதுதான் முதன்முறையாக உங்களிடம் பேசுகிறேன்.
நீங்கள் சொன்ன ஹேர் ரிமூவிங் முறைகள்,மேக்கப் முறைகள் மிகவும் உதவியாக உள்ளது.எனக்கு ஒரு சந்தேகம் .நீங்கள் சொன்ன எபிலேட்டர் பிரெண்டில் நிறைய வெரைட்டி உள்ளது.நீங்கள் எந்த வெரைட்டி நன்றாக இருக்கும் என்று சொன்னால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.மற்றுமொரு சந்தேகம்.நான் இப்பொழுது எழுத்துதவியை கொண்டுதான் டைப் செய்கிறேன்.எனக்கு எந்த சாப்ட்வேர் டவுண்லோட் செய்ய வேண்டும் என்று சொன்னால் உதவியாக இருக்கும்.
நன்றி,
கவிதா.

ஹலோ தேவா
ஆகஸ்டு 9, 2008 - 1:00am - வழங்கியவர் Thanisha

அன்புள்ள தேவா,

நீங்கள் நலமா? உங்க பையன் எப்படி இருக்கான். உங்களுக்கு மிக்க நன்றி, இப்போதுதான் உங்கள் பதிலை பார்த்தேன். தாமதத்திற்கு மன்னித்து விடுங்கள். எனக்கு அறுசுவை ஓபன் ஆகவில்லை அதனால்தான்.

மேலும் என்னுடைய சருமம் நார்மல்தான்.நான் மாநிறம். ஊரில் பேர் அன் லவ்லி யூஸ் பண்ணிக் கொண்டு இருந்தேன்.இங்கு வந்துதான் ஓலே. ஆப்ரிகாட் ஸ்கரப்பர், ப்ரூட் பேக் (ஸ்டீவ்ஸ்) வைத்து இருக்கிறேன். இதை வாரம் இருமுறை போடலாமா?

உங்களுடைய மேக்கப் புராடக்ஸ், வீட்டிலேயே பேஷியல், பார்ட்டி மேக்கப், ஈஸி மேக்கப், பயனுள்ள குறிப்பு இப்படி ஒன்று விடாமல் படித்து விட்டேன் தேவா. எல்லாமே மிகவும் அருமை. ஆனால் இங்கு ரெவ்லான், கிடைப்பதில்லை. லோரியல் ஹேர் கலரிங்தான் ஜாஸ்தி கிடைக்கிறது. மேக்கப் புராடக்ஸில் நிவ்யா, மேபலின், மேலும் நிறைய வித்தியசமான பிராண்ட் கிடைக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பிராண்ட் கிடைக்கவில்லை.

Clearsil Face wash நான் வாங்கி கொள்கிறேன். இதை தினமும் ஒருமுறை உபயோகித்தால் போதுமா? என்னிடம் எஸ்கினால் க்ளீனிங் சொலியூஷன் (பப்பாயா) உள்ளது. இதை தினமும் உபயோகப்படுத்தலாமா? என்று கூறுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள். மிக்க நன்றி தேவா

ஹாய் தேவா பதிலுக்கு காத்திருக்கிறேன்
ஆகஸ்டு 11, 2008 - 1:08am - வழங்கியவர் Thanisha

உங்களுக்கு மிக்க நன்றி தேவசேனா,
அன்புள்ள தேவா,

நீங்கள் நலமா? உங்க பையன் எப்படி இருக்கான். உங்களுக்கு மிக்க நன்றி, இப்போதுதான் உங்கள் பதிலை பார்த்தேன். தாமதத்திற்கு மன்னித்து விடுங்கள். எனக்கு அறுசுவை ஓபன் ஆகவில்லை அதனால்தான்.

மேலும் என்னுடைய சருமம் நார்மல்தான்.நான் மாநிறம். ஊரில் பேர் அன் லவ்லி யூஸ் பண்ணிக் கொண்டு இருந்தேன்.இங்கு வந்துதான் ஓலே. ஆப்ரிகாட் ஸ்கரப்பர், ப்ரூட் பேக் (ஸ்டீவ்ஸ்) வைத்து இருக்கிறேன். இதை வாரம் இருமுறை போடலாமா?

உங்களுடைய மேக்கப் புராடக்ஸ், வீட்டிலேயே பேஷியல், பார்ட்டி மேக்கப், ஈஸி மேக்கப், பயனுள்ள குறிப்பு இப்படி ஒன்று விடாமல் படித்து விட்டேன் தேவா. எல்லாமே மிகவும் அருமை. ஆனால் இங்கு ரெவ்லான், கிடைப்பதில்லை. லோரியல் ஹேர் கலரிங்தான் ஜாஸ்தி கிடைக்கிறது. மேக்கப் புராடக்ஸில் நிவ்யா, மேபலின், மேலும் நிறைய வித்தியசமான பிராண்ட் கிடைக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட பிராண்ட் கிடைக்கவில்லை.

Clearsil Face wash நான் வாங்கி கொள்கிறேன். இதை தினமும் ஒருமுறை உபயோகித்தால் போதுமா? என்னிடம் எஸ்கினால் க்ளீனிங் சொலியூஷன் (பப்பாயா) உள்ளது. இதை தினமும் உபயோகப்படுத்தலாமா? என்று கூறுங்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள். மிக்க நன்றி தேவா

தமிழ் எழுத்துதவி & எபிலேட்டர்
ஆகஸ்டு 12, 2008 - 6:40pm - வழங்கியவர் DEVA

ஹாய் கவிதா, எப்படி இருக்கீங்க? சாரி என்னால உடனே பதில் அடிக்க முடியல. நீங்க கீழ்க்கண்ட லின்கில் சென்று இரண்டாவதாக இருக்கும் சாப்ட்வேரை டவுண்லோடு பண்ணுங்க. அப்புறம் கீபோர்டில் Alt+2 பிரஸ் செய்து தமிழில் அடிக்கலாம். மீண்டும் Alt+2 பிரஸ் செய்து இங்கிலீஷில் அடிக்கலாம். இப்படி மாற்றி மாற்றி அடிக்க வசதியா இருக்கும்.

http://thamizha.com/modules/
mydownloads/viewcat.php?cid=3

எனது பதிவிலேயே எபிலேட்டர் பிராண்டு பற்றிக் கொடுத்திருக்கேன். Braun Silk Epil ல் மசாஜர் சேர்ந்து ஒரு மாடல் இருக்கு. அதில் ஹேர் எடுத்தா வலிக்காது.

ஸ்க்ரப்பர், பேஸ்வாஷ் உபயோகம்
ஆகஸ்டு 12, 2008 - 7:15pm - வழங்கியவர் DEVA

ஹாய் தனிஷா, தாமதமான பதிலுக்கு சாரி. நீங்கள் சாதாரணமான சருமம் என்று குறிப்பிட்டிருக்கின்றீர்கள். எனவே ஸ்க்ரப்பை அதிகபட்சமாக வாரம் ஒரு முறையோ அல்லது 15 நாளைக்கு ஒரு முறையோ உபயோகித்தால் போதும். பேர் அண்ட் லவ்லி கிடைத்தால் அதையே வாங்கி உபயோகியுங்கள். என் முகத்துக்கு பேர் அண்ட் லவ்லி, பேபி லோஷன் தவிர வேறு எந்த லோஷன், க்ரீம் உபயோகித்தாலும் ஒத்துக் கொள்ளாது. ஆலிவ் ஆயில் கூட எனக்கு அலர்ஜி உண்டாக்கும். நான் அதனால் பல முறை டெஸ்ட் செய்துதான் பாடி லோஷனிலிருந்து எல்லாமே தேர்ந்தெடுப்பேன். வெளிநாட்டில் பல பிராண்டுகள் இருக்கிறதே, அதுவும் தரமானதாக இருக்கிறதே என்று வாங்கினோமானால் அது நமது சருமத்துக்கு ஒத்துக் கொள்ளுமா என்று பார்க்க வேண்டும். நீங்கள் இருக்கும் நாட்டிலும் பேர் அண்ட் லவ்லி கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

நான் இன்னும் ஹேர் கலரிங் உபயோகித்ததில்லை. ஆனால் இங்கே இருக்கும் சலோனில் இண்டியன் ஹேருக்கு என்னென்ன கலர் நன்றாக இருக்கும் என்று ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். அப்படியே கொஞ்சம் ஹேட் ஸ்டைல் டெக்னிக்கும் சொன்னாள். நமது முடிக்கு கருப்பான ஹேர் கலரிங் போடாமல் கொஞ்சம் டார்க் பிரவுன் ஷேட் வாங்கினால் இயற்கையாக இருக்கும். மாடர்ன் லுக் வர இடையிடையே ஒரு இழையில் டார்க் வயலட் கொடுத்தால் ( மொத்த தலைக்கும் சேர்த்து ஒரு 10 இழைக்கு மட்டும்) வெயிலில் செல்லும்போதும், நைட் பார்ட்டி வெளிச்சத்திலும் முடி பளப்பளப்பாகத் தெரியும்.

க்ளியர்சில் பேஸ் வாஷை தினமும் காலை , மாலை இரு வேளை உபயோகிக்கலாம். அது பருத்தொல்லை இருந்தால் மட்டும் உபயோகியுங்கள். பேபி லிக்விட் சோப்பை தினமும் முகம் கழுவ உபயோகிக்கலாம். அது மிகவும் மைல்டாக இருப்பதால் சருமத்திற்கு நல்லது. நிவியாவில் மேக்கப் சாதனங்கள் அனைவருக்கும் ஒத்துக் கொள்ளும் நிறங்களில் கிடைப்பது கிடையாது. கடைக்கு செல்லும்போது மேபலின் ஷேடுகளை தங்களுக்காக பார்த்துவிட்டு பிறகு விரிவாக எழுதுகிறேன். இப்போதைக்கு, எந்த லிப்ஸ்டிக் வாங்குவதாக இருந்தாலும் Berry, Wine, Chocolate, Mauve நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். இந்திய சருமத்திற்கு மற்றும் எல்லாவித மேக்கப்புக்கும், உடுப்புகளுக்கும் பொருந்தும். லிப் கிளாஸ் உபயோகியுங்கள். லிப்ஸை எடுப்பாக காட்டும். லிப் பென்சில் இல்லாமல் லிப்ஸ்டிக் போட்டால் அழகாக இருக்காது. எஸ்கினாலை தினமும் மேக்கப் ரிமூவ் செய்ய அல்லது முகத்தை க்ளீன் செய்ய சாயங்காலமோ அல்லது குளிக்கும் முன்போ உபயோகியுங்கள்.

ஹாய் தேவா
ஆகஸ்டு 13, 2008 - 1:32am - வழங்கியவர் Thanisha

ரொம்ப நன்றி தேவா, உங்க பதிலுக்காக காத்துக்கொண்டு இருந்தேன். முந்தைய நாள் நீங்கள் கட்டிக்கு குறிப்பு சொல்லியிருந்தீர்கள். என்னுடைய பதிவை பார்க்கவில்லையே என்றுதான் மீண்டும் அனுப்பினேன்.பருவுக்கு க்ளியர்சில் பேஸ் வாஷை வாங்கி விட்டேன்.

நீங்கள் சொல்வது சரிதான் தேவா. வெளிநாட்டில் பொருள் நல்ல தரமானதாக இருக்குமே என்றுதான் ஓலே வாங்கினேன். இங்கு பேர் அண்ட் லவ்லி தாரளமாக கிடைக்கிறது வாங்கி கொள்கிறேன்.

உங்களுக்கு மிகவும் பொருமை அதிகம் தேவா. ஒரு பியூட்டிஷியன் கூட இந்த அளவுக்கு சொல்லுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உங்களுடைய் பேஸ்பேக் அம்மாவை தயாரித்து கொடுத்த அனுப்ப சொல்லியிருக்கேன். 20 தேதிக்குள் வந்து விடும்.மேலும் உங்களுடய சுக்குகாபி என்வீட்டில். என்னவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ரொம்ப நன்றி தேவா.

//பெண்ணியம்,பெண் உரிமை என்று பேசுவது தேவையில்லை. கணவருக்காக, குடும்பத்துக்காக எதையும் விட்டுக் கொடுப்பது தவறில்லை.பெண்கள் வேலை பார்க்காவிட்டால் இந்த சமூகம் தப்பாக பேசாது.ஆனால் நம்மை கல்யாணம் செய்துக்கொண்ட ஒரே காரணத்துக்காக காலம் முழுதும் வேலை பார்த்து நம்மைக் காபாற்ற வேண்டிய கட்டாயம் ஆணுக்கு இருக்கிறது.ஆண்,பெண் இருவரிலும் கெட்டவர்கள் இருக்கிறார்கள்.ஆண்கள் மட்டும் தான் அப்படி என்று சொல்லிவிட முடியாது.
இந்த ஒரு உறவுக்குள் தான் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை.சிலர் பிரெண்ட்ஸ் தான் முக்கியம் என்று சொல்வார்கள்.ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் நட்புக்கும் ஒரு எல்லை இருக்கிறது.அவரவர்க்கு திருமணம் ஆகிய பிறகு அவர் வீட்டு விஷயம் நமக்கும்,நம்ம வீட்டு விஷயம் அவருக்கும் தெரியாது.
எல்லாவற்றையும் சொல்லவும் முடியாது.
இன்பம்,துன்பம் இரண்டிலும் நம்முடன் இருக்கும் அவருக்காக வாழ்வதுதான் உண்மையான பெண்ணியம் என்பது எனது கருத்து.
என் கணவர் சில சமயம் சொல்வார்,என்ன இது கிராமத்தில் இருந்து வந்த பட்டிகாட்டு பெண் மாதிரி எனக்காக சமைத்துக் கொண்டே இருக்குற.நீ Engineer படித்திருப்பதால் உனக்கு அவ்வளவா சமைக்க வராதுன்னு ஸ்டைலா சொல்வேன்னு நினைச்சேன்.இப்படி இருக்கன்னு சில சமயம் திட்டக்கூட செய்வார்.படிப்பு அறிவை வளர்க்க.அதை விட்டுவிட்டு அதனால் பெருமையாக இருப்பது கூடாது.
சமையல்கூட அவருக்காக அன்புடன் செய்தால் நிச்சயம் நன்றாகதான் இருக்கும்.///

தேவா உங்களுடைய இந்த பதிவை படித்த பிறகு உங்கள் மேல் உள்ள மரியாதை பன்மடங்கு கூடி விட்டது. எவ்ளோ படிச்சிருக்கீங்க நீங்க, ஆனாலும் எவ்வளோ தன்னடக்க்தோடு பேசுறீங்க. ஒரு பெண்ணுக்குள் இருக்கும் இந்த தன்மைதான் அவளுடைய குடும்பத்தை சீர்தூக்கி நிறுத்துகிறது.you are realy great Deva. your Hubby is very lucky.

ஓகே தேவா உங்களுடைய மணப்பெண் அலங்காரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். என் பெரியம்மா பெண்ணிற்கு அக்டோபரில் திருமணம் எனவே அவளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.மிக்க நன்றி தேவா

தமிழ் எழுத்துதவி
ஆகஸ்டு 14, 2008 - 12:47pm - வழங்கியவர் arunkavi

ஹலோ தேவா,
ரொம்ப நன்றி.இன்று epilatoru ம் வந்துவிட்டது.உபயோகித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.தேவா நான் எக்கலப்பை சாப்ட்வேர் டவுண்லோடு செய்து விட்டேன்.ஆனால் எழுத்துதவியை போல் இல்லையே லெட்டர்ஸ் மாறுகிறது.கொஞ்சம் சொல்லுங்க தேவா.
நன்றி,
கவிதா.

viji praveen நன்றி
ஆகஸ்டு 17, 2008 - 9:38am - வழங்கியவர் viji praveen

viji praveen
நன்றி தேவா, மிக்க நன்றி.. என் உடல்நலக்குறைவால் கடந்த பத்து நாட்க்களாக என்னால் பதில் அளிக்க முடியாமல் போனது.. உங்கள் கருதுகள் அனைத்தும் மிக்க உதவியாக இருக்கிறது.பயன்பதுதிவிட்டு பதிலளிக்கிறேன்..

ஹேர் ரிமூவிங்
செப்டம்பர் 16, 2008 - 5:22pm - வழங்கியவர் ManiSara

ஹலோ தேவா மேடம்,
நலமா? உங்கள் குட்டிப்பையன் நலமா?

நீங்கள் கூறிய ஹேர் ரிமூவிங் முறையை படித்துப்பார்த்தேன்.
நீங்கள் கூறிய எபிலேடர் ஹேர் ரிமூவிங் முறையில் செய்தால் நாளடைவில் முடியின் வள்ர்ச்சி நின்றுவிடுமா? எனக்கு ஹேர் ரிமூவர் க்ரீம்கள் ஒத்துக்கொள்ளவில்லை. அப்படியே ஹேர் ரிமூவிங் க்ரிம் போட்டால் தோல் கருப்பாக மாறி மீண்டும் பழைய நிலையை அடைய ரொம்ப நாள்கள் எடுத்துக்கொள்கிறது. அதனால் எனக்கு தகுந்த வழிமுறைகளை கூறவும்.

அடுத்தாக என் முகத்தில் நிறைய கரும் புள்ளிகள் உள்ளன. அதை எப்படி நீக்குவது?

அன்புடன்,
மணி.

ஹேர் ரிமூவிங்
செப்டம்பர் 17, 2008 - 12:08am - வழங்கியவர் DEVA

இன்று வேலை மிகவும் அதிகம். நடுவில் வந்து இந்தப் பதிவினை போடுகிறேன். மணிசாரா, நீங்கள் ஹேர் ரிமூவிங் க்ரீம் உபயோகிப்பது உங்கள் சருமத்திற்கு ஒவ்வாமை ஏற்படுத்துகிறது என்று நினைக்கிறேன். வேக்சிங் ஒத்துக்கொள்கிறதா?எபிலேட்டர் நான் சொன்னபடியே பெஸ்ட் சாய்ஸ்தான். அதை உபயோகிக்க ஆரம்பித்தால் முடி வளர்ச்சி குறைந்துவிடும். மேலும் முடி வளர்ந்தாலும் நாம் க்ரீமெல்லாம் உபயோகிக்க ஆரம்பிக்கும் முன் எப்படி நம் உடம்பில் மென்மையான முடிகள் இருந்தனவோ அப்படியே மாற்றிவிடும். உங்களுக்கு இவ்வளவு இண்வெஸ்ட் செய்து வாங்கி சரியில்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் இருந்தால் கடையில் ( இந்தியாவில் எளிது) மாடலுக்கு வைத்திருக்கும் எபிலேட்டரை வாங்கி ஒரு முறை உபயோகித்துப் பாருங்கள். மறக்காமல் டெட்டால் சானிட்டைசர் இருந்தால் கொண்டு சென்று அதனை டிஷ்யூவில் ஒற்றி மாடலுக்கு வைத்திருக்கும் எபிலேட்டரின் ஹெட்டை துடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.வெளிநாடு என்றால் பர்பாமென்ஸ் சரியில்லை என்று பில்லை வைத்திருந்து ரிடர்ன் செய்து விடுங்கள்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க எனது பயனளிக்கும் குறிப்புகள் என்ற பதிவில் ஒரு பொடி தயாரிக்கும் முறையினைப் பற்றி சொல்லி இருக்கின்றேன். அந்தப் பொடியை உபயோகித்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும். அதனை தயாரிக்க நேரம் இல்லாவிட்டால் கடலைமாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தயிரில் குழைத்து முகத்தில் இடுங்கள் ( எண்ணெய்ப்பசை சருமமாக இருந்தால் பன்னீரீல் குழைத்து). காயும் வரை ஊறவைத்து பிறகு கழுவுங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். க்ரீம்களில் Fadeout என்ற க்ரீம் வெளிநாடுகளில் கிடைக்கும். அதனை உபயோகியுங்கள். ஆனால் இந்த க்ரீம் ஆய்லி சருமத்திற்கு உகந்தது இல்லை. மேலும் Palmers Cocoa Butter ம் நல்ல பலன் தரும்.

தமிழ் எழுத்துதவி
செப்டம்பர் 17, 2008 - 12:11am - வழங்கியவர் DEVA

கவிதா, தாமதமான பதிலுக்கு சாரி. எனக்கு அந்த லிங்கை தேடி எடுத்து ஸ்டெப் பை ஸ்டெப்பாக சொல்ல நேரமில்லாமல் போய்விட்டது. இப்போது பாண்ட் ஓக்கே ஆயிடுச்சா?? முடிந்தால் விரைவில் நாளைக்குள் அனுப்புகிறேன்.

ஹாய் தேவா
செப்டம்பர் 17, 2008 - 6:43am - வழங்கியவர் thalika

ஹாய் தேவா ரொம்ப ரொம்ப தெளிவான பதில்...இப்படி தேவான்னு ஒரு ஆள் இல்லாட்டால் இங்குள்ள பலருக்கும் இப்படியெல்லாம் ஒன்று இருக்குன்னு தெரியாம இருந்திருப்போம்(பேன்:-))

தளிகா ..
செப்டம்பர் 17, 2008 - 5:12pm - வழங்கியவர் இலா

தளிகா .. என்ன வந்து வந்து எட்டி பாத்துட்டு போறீங்களா.. ரீமா எப்படி இருக்கா??? உடம்பு பரவாயில்லையா அவளுக்கும் .. வேலை அதிகம் செய்ததால் உங்களுக்கும்?? உண்மை தான் அழகு குறிப்பு கேள்வின்னா தேவசேனா தான்..

ரீமா குறும்பெல்லாம் எப்படி இருக்கு.. ஸ்கூலுக்கு போட்டாச்சா?

"The challenge is not to manage time, but to manage ourselves." --Steven Covey

hair removing
செப்டம்பர் 18, 2008 - 5:24pm - வழங்கியவர் Anithasrinithi

வணக்கம் தேவா மேடம். நான் இப்பதான் அருசுவைக்கு வரேன். ப்ரெக்னன்ட் ஆக இருகும்பொது எபிலேட்டர் யூஸ் பண்ணீயும் ஹைர் ரிமூவ் பண்ணக் கூடாதா?எனக்கு பதில் சொல்லுஙலேன் யாராவது please...

எபிலேட்டர் - பிரெக்னண்ட் சமயத்தில்
செப்டம்பர் 18, 2008 - 11:18pm - வழங்கியவர் DEVA

ஹாய் அனிதா, ஹேர் ரிமூவிங் செய்ய அந்த சமயம் சரியில்லை என்று சொல்வார்கள். ஹார்மோனல் சேஞ்ச் மற்றும் ஹேர் ரிமூவ் செய்யும்போது வரும் வலி போன்றவையே இதற்கு காரணமாக இருக்கலாம். முதல் முறையாக இந்த சமயத்தில் எபிலேட்டர் உபயோகிக்க வேண்டாம். நிறைய உபயோகித்து பழகி இருந்தால் நிச்சயம் உபயோகிக்கலாம். வலி இருக்காது. முடிகளும் சிறிய அளவில் மென்மையாகத்தான் இருக்கும். வேக்சிங், த்ரெட்டிங் அந்த சமயத்தில் வேண்டாம். அது எப்போதுமே வலி தரக்கூடியது. தாங்கக்கூடியதாக இருந்தாலும் அந்த அதிர்ச்சி தவிர்ப்பது நலம். அந்த சமயத்தில் ஹேர் க்ரீம் உபயோகிப்பது ஓக்கே. அதுவும் கூட அந்தரங்கமான இடங்களுக்கு வேண்டாம். அந்த இடங்களுக்கு லேடிஸ் ஷேவர் வாங்கி உபயோகியுங்கள்.

தளிகா, எப்படி இருக்கீங்க? இன்னும் கொஞ்சம் விளக்கமா எல்லாவற்றையும் எழுதணும்னு கூட ஆசைதான். ஆனால் கொஞ்சம் தயக்கமா இருக்கு. இனி அதை பொருட்படுத்தாம தெளிவா எழுதணும்னு இருக்கேன். யாராவது எதாவது நினைச்சாலும் கொஞ்சம் பேருக்கு நல்லா புரிஞ்சாக்கூட அவங்களுக்கு உதவும்தானே. பார்ப்போம். இலா, உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி. எல்லார்கூடவும் அடிக்கடி பேச முடியலியே, உடனே பதில் போட முடியலியேன்னு வருத்தமா இருக்கு. வேலை இந்த வாரம் ரொம்ப அதிகம். நேரம் கிடைக்கும்போது வந்து அரட்டையை போடறேன்.

தேவா மேடம் வணக்கம்
செப்டம்பர் 19, 2008 - 5:07am - வழங்கியவர் tamizhi

தேவா மேடம் வணக்கம்
வேக்ஸிங் வீட்டிலேயே தயாரிக்கும் முறையை சொல்லிக்கொடுக்கிறீர்களா?
தமிழி அன்புடன்.

வீட்டிலேயே வேக்சிங்
செப்டம்பர் 19, 2008 - 5:57am - வழங்கியவர் DEVA

நிச்சயம் எழுதுகிறேன். ஆனால் உபயோகிக்கும்போது மிகவும் கவனம் தேவை. ஏனென்றால் வீட்டில் தயாரிக்கும் ஹாட் வேக்சை அதிக சூட்டில் உடம்பில் போட்டுவிடக்கூடாது. அதே சமயம் மிகவும் குளிர்ந்தாலும் சரியாக வராது. கோல்ட் வேக்ஸ் தயாரிப்பதற்கு சரியான பக்குவம் தெரிந்திருக்க வேண்டும். இரண்டுக்குமே தேவையான பொருட்கள் சீனி ( பாகு எடுக்க ), எலுமிச்சை சாறு ( பாகை அதே நிலையில் வைக்க), ஒரு பாத்திரம் முதலியவை மட்டுமே. சரியான அளவு, காலநிலையை மீண்டும் ஒரு முறை செய்து பார்த்துவிட்டு எழுதுகிறேன். அதை ட்ரை செய்து ரொம்ப வருஷம் இருக்கும். அப்போதெல்லாம் My Fair Lady Cold wax தான் அதிகம் பேர் வாங்குவார்கள். இப்போது ரெடிமேட் வேக்சிங் ஸ்ட்ரிப். செய்வது கொஞ்சம் Messy Job.

தேவா மேடம் நன்றி
செப்டம்பர் 19, 2008 - 6:15am - வழங்கியவர் tamizhi

தேவா மேடம் நன்றி
உடன் பதிலுக்கு நன்றி.
நீங்கள் பிரான்சில் தான் இருக்கிறீர்களா? எந்த இடம்?
அன்புடன் தமிழி.

ரொம்ப
செப்டம்பர் 19, 2008 - 6:15pm - வழங்கியவர் Anithasrinithi

ரொம்ப நன்றி தேவா மேடம் உடனே எனக்கு பதில் சொன்னதர்க்கு

தேவா மேடம்
செப்டம்பர் 20, 2008 - 4:17am - வழங்கியவர் LAKSHMI PRIYA

தேவா மேடம் ரொம்ப நன்றி.என்னை யாரென்று தெரிகிறதா?

வந்துட்டாய்யா வந்துட்டாய்யா
செப்டம்பர் 22, 2008 - 12:05am - வழங்கியவர் DEVA

உங்களைத் தெரியாமலா? ஆனால் என்னைவிட வயசு அதிகமானவங்க என்னை மேடம்னு சொல்றதை கடுமையா ஆட்சேபிக்கிறேன். உங்க சேவையை இங்கேயும் தொடர வந்துட்டீங்களா?? ஏதோ இங்கேதான் கொஞ்சமாவது மரியாதை(????) இருக்கு. அதையும் காலி பண்ண வந்தாச்சா??

சரி சரி , இங்கே நீங்க எனக்கு ஜூனியர்தான். ராகிங் செய்யலாம். நீங்க உருளைக்கிழங்கை வேக வெச்சு அப்புறம் வறுக்கும்போதும் நிறைய தண்ணீர் ஊத்தி வறுவலை ஸ்பெஷல் குழம்பா பண்ணிடுவீங்களாமே. அந்த ரெசிப்பியை கொஞ்சம் எல்லாருக்கும் சொல்றதுதானே. நீங்க முதல் முதலில் வெச்ச கஞ்சி ( சாதத்தைதான் சொல்றேன்), ரசம் ( பிரவுன் வாட்டர்) சாப்பிட்டு இன்னமும் உயிரோடு இருக்கற அந்த ஜீவனை என்னைக்காவது பாராட்டி இருக்கீங்களா? மனசு நோகக்கூடதுன்னு நல்லா இருக்குன்னு சொல்லப்போக இன்னும் இன்னும்னு அள்ளி வெச்சு திணிச்சீங்களே அது பாவம் இல்லியா?இப்ப நல்லா சமைக்கறதால இந்த பிளாஷ்பேக்லாம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லைனு நினைச்சுடக்கூடாது. அடிக்கடி வாங்க. உங்களை ரேக்கிங் செய்யறதுக்கு இதை விட்டா எனக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது.

தேவா மேடம்
செப்டம்பர் 22, 2008 - 3:11am - வழங்கியவர் LAKSHMI PRIYA

தேவா மேடம் இங்கு நீங்க எனக்கு சீனியர்.உங்களை ராகிங்கெல்லாம் செய்ய மாட்டேன்.
ஆனால் என் மானத்தை ஏன் இப்படி வாங்குறீங்க?(என் சமையலை பற்றி என் வீட்டுகாரர்கிட்ட கேளுங்க மேடம்)போதும்மா இனி எல்லாத்தையும் படிக்கிறதோட சரி.உன்னை disturb பண்ணலை.continue மேம்..........................

36 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »