topic_image


Hi Friends,

I am Sudha, I am conceived. I would like to know what veg and non-veg foods can I take in this time. Can I take fish in this time.

Thanks
Sudha K


ஹாய் சுதா
ஆகஸ்டு 4, 2008 - 7:53am - வழங்கியவர் menaga

வாழ்த்துக்கள்.உங்களுக்கு இது எத்தனை மாதம்?நானும் 8 மாதம் கர்ப்பம்.அதனால் எனக்கு தெரிந்தவற்றை சொல்கிரேன்.உங்க பதிவை பார்த்ததும் பதில் போடமல் இருக்க முடியல்லை.
தினமும் பச்சை காய்கறிகள்,பழம்,முட்டை,மாமிசம்
,மீன் சாப்பிடுங்க.மீன் தாரளமாக சாப்பிடலாம்.பச்சை நிறமுள்ள காய்(எ.டு:
கீரை,பீன்ஸ்,வெள்ளரிக்காய்,பச்ச
ை பட்டாணி...)சாப்பிடுங்க.இதில் போலிக் சத்து இருக்கு.இரவில் தினமும் பாலில் பேரிச்சைபழம் போட்டு குடிங்க.இதில் இரும்பு சத்து இருக்கு.அப்ப அப்ப பசிக்கும் போது பால் பழம் சாப்பிடுங்க.மாலை 4 மணிக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுங்க.ஆப்பிளுக்கு ஒரு பழமொழி இருக்கு (eat a apple daily keep a doctor away ).பாலில் இரத்ததில் அணுக்களை அதிகரிக்கும் சத்து நிறைய இருக்கு.இரத்ததில் அணுக்கள் குறைந்தால் டெலிவரி அப்போ கஷ்டம்.
கறியில் கொழப்பு இல்லாமல் சாப்பிடவும்,முக்கியமான் ஒன்று இந்த சமயத்தில் சுகரை கண்ட்ரோலில் வைத்திருக்கணும் இல்லாவிட்டால் பிறக்கும் குழந்தைக்கும் வந்துடும்.அதனால் சாததின் அளவை குறைக்கவும்.கொஞ்சம் சாதம்,கோதுமை,ராகி என்று தின்மும் மாற்றி மாற்றி சாப்பிடவும்.ஆசைப்ப்ட்டதை சாப்பிடவும்.
நான் இப்படிதான் பின்பற்றுகிரேன்.மற்ற தோழிகளும் வந்து சொல்வாங்க.மனசை ரிலாக்சாக வைத்திருக்கவும்.எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.காரம்,உப்பு,இனிப்பு,எண
்ணெய் குறைவாக சேர்க்கவும்

Hi Menaga
ஆகஸ்டு 4, 2008 - 8:52am - வழங்கியவர் sudha.k

Thanks a lot for your quick reply. I am 45 days due. I am very happy to see your reply.

Menaga, one question. I am getting stomach ache everyday early morning, after waking up. Can you let me know why I am getting stomach ache.

Can you let me know how to type in Tamil, like you did.

Thanks
Sudha K

ஹாய் சுதா!
ஆகஸ்டு 4, 2008 - 8:56am - வழங்கியவர் MarliyaNoohu

இந்த திரட்டை போய் பாருங்க இதில்; உணவுவகளலெல்லாம் இருக்கு..பிஷ் தாராளமா சாப்டலாம் கருவாட்டை தவிர்க்கவும் சிலருக்கு அதூ அலர்ஜியாகும்..

http://www.arusuvai.com/tamil/
forum/no/1816

அதோட மேனுவும் சொல்லி இருக்காங்க பார்த்துகங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

சுதா!!
ஆகஸ்டு 4, 2008 - 9:10am - வழங்கியவர் menaga

உங்களுக்கு வயித்து வலி எதனால் என்று தெரியல.ஒரு 3 மாதம் வரை உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கவும்.அதற்கு குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளவும்.வயிற்றில் தொப்புளை சுற்றி விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெய் சுற்றி தடவும்.எதற்க்கும் டாக்டரை கன்சல்ட் பண்ணுவது நல்லது.தமிழில் டைப் செய்ய கீழே எழத்துதவி என்று இருக்கு.அதில் டைப் செய்து copy&paste செய்யவும்.பின் உங்களூக்கு பழகிவிடும்

ஹாய்
ஆகஸ்டு 4, 2008 - 11:03am - வழங்கியவர் sudha.k

ஹாய் தோழிகளே,

உங்கள் குறிப்புகளுக்கு நன்றி. எனக்கு உடலில் அதிகம் சுடு இருந்தால் வயிறு வலிக்குமோ.தினமும் காலை எழுந்திருக்கும் போதே பசிக்கிறது கூடவே அடி வயிறும் சற்று வலிக்கிறது. இதனால் ஏதேனும் பிரச்சனை உன்டா கூறுங்கலென். எனக்கு பயமாக இருக்கிறது. என் குழந்தைக்காக ஒரு வருடமாக காத்திருந்தேன்.இப்பொழுது தான் நானும் என் கணவரும் மிக சந்தோசமாக இருக்கிறோம்.

அன்புடன்,
சுதா.

சுதா
ஆகஸ்டு 4, 2008 - 11:38am - வழங்கியவர் MarliyaNoohu

அதிக அழைச்சல் வேணாம்..வயிறு வலி சிலருக்கு இருக்கும் எதற்க்கும் டாக்டரிடம் சென்சல் செய்துகங்க அவர் ஒன்னும் இல்லைனா இது சாதாரனமான வலிதான் பயம் தேவை இல்லை..

நைட் ஏதாவது சாபிட்ட பின் தூங்குங்க பசித்தால் வயிறு வலிக்கும்

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் சுதா
ஆகஸ்டு 4, 2008 - 1:07pm - வழங்கியவர் menaga

உங்களுக்கு எந்த நேரத்தில் பசி எடுத்தாலும் பால் குடிங்க.எனக்கும் அப்படித்தான் ,நானும் பால் தான் குடிப்பேன்.3 மாதம் வரை நல்லா ரெஸ்ட் எடுங்க.கடினமான் எந்த வேலையும் வெயிட் தூக்காதீங்க.தினமும் வாக்கிங் போங்க.அடிவயிறு வலித்தால் எண்ணெய் தடவுங்க.ஒன்னும் பயப்படாதீங்க.நானும் குழந்தைக்காக 2வருடம் காத்திருந்தேன்.try to best consult ur doctor for stomach ache.god is great. dont worry

Hai Friends
ஆகஸ்டு 4, 2008 - 2:13pm - வழங்கியவர் sudha.k

Thank you very much for your tips.My dear friends Menaga & Marliyanoohu.
But my Docter appointment date is 8/12/08.

Thanks,
sudha

சுதா
ஆகஸ்டு 5, 2008 - 2:52am - வழங்கியவர் menaga

முதலில் நீங்க எங்கே வசிக்கிறீங்க என்று சொல்லவும்.அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று காண்பிக்கவும்.அதான் நல்லது.நமக்கும் மனசு நிம்மதிய இருக்கும்.உங்க டாக்டர் அப்பாயின்மெந்ட் இருந்தாலும் போன் பண்ணி கேட்டு பாருங்க சீக்கிரமாக.

For pregnant ladies
ஆகஸ்டு 5, 2008 - 4:11am - வழங்கியவர் suria

வாழ்த்துக்கள்,
அடி வயிறு வலிப்பதாக கூறியுள்ளீர், அதற்க்காக பயம் வேண்டாம், சிலருக்கு இப்படி இருபதுண்டு. மனதை அமைதியாக வைத்து இருக்கவும். உங்கள் டெலிவெரி நார்மல் டெலிவெரியாக இருக்க சில குறிப்புகள். முதல் முன்று மாதம் இரவு படுக்கும் முன் பாலில் 10 காய்ந்த திரட்சை சேர்த்து குடிக்கவும், கணவருடன் அதிகம் சேர வேண்டாம், குங்குமபூ 9ஆம் மாசம் முதல் பாலில் சேர்த்து குடிக்கவும். பிஸ்கட், ச்சாக்குலேட், சிப்புஸ் சாப்பிடுவதை தவிர்க்கவும், முன்று மாதம் பின் உணவில் அதிகம் நெய் கலந்து சாப்பிடவும், ஆறஞ்சு பழசாறு தினமும் குடிக்கவும், மீண் நிறய சபிடலாம் (மடவை மீண் வேண்டாம் அது குளுமை). 5 ஆம் மாதம் முதல் காலை மற்றும் மாலை நடை அவசியம் (10- 20 நிமிடம்). 7 முதல் 9 ஆம் மாதம் வரை கணவருடன் அதிகம் சேர வேண்டும். 8 ஆம் மாதம் முதல் காலை தரையில் நன்ங்கு அமர்ந்து இடது மற்றும் வலது புறம் 10 முறை இடுப்பை சற்று மெதுவாக வலைத்து திருப்பி பார்க்கவும். இத்தனையும் சேய்தா கண்டிப்பாக normal delivery தான்.
with love,
suria

ஹாய் மேனகா & சூர்யா
ஆகஸ்டு 5, 2008 - 2:57pm - வழங்கியவர் sudha.k

நான் அமெரிக்காவில் இருக்கிறேன். அதனால் தான் மேனகா.தண்ணிர் நிறைய குடித்தால் வலி தெரியவில்லை.
சூர்யா நீங்கள் கூரியது என்னக்கும் மற்ற நம் தோழிகளுக்கும் உதவியாக இருக்கும். மிகவும் நன்றி.
Appointment date is Aug-12.

அன்புடன்,
சுதா.

சுதா
ஆகஸ்டு 6, 2008 - 7:35am - வழங்கியவர் MarliyaNoohu

சுதா வீண் பயம் வேனாம் பசித்தாலும் வயிறு கொக்கி போட்டது போல இழுக்கும்..சாப்டா போகிடும் நீங்க தண்னீர் குடிச்சா போயிடுதுன்னு சொல்லுறீங்க சோ நீர் கடுப்பாக கூட இருக்கலாம் அதிகமா தண்ணீர் குடிங்க..இந்த டைமில் அதிகம் பசிக்கும் சிலருக்கு பால் பிடிக்கும்,சிலருக்கு வீவா ,ஹார்லிக்ஸ்,சிலருக்கு பிஸ்கட்ஸ் இப்படி எது உங்களுக்கு இஸ்டமோ அதை எப்போழுதும் கைவசம் வைத்துகங்க இரவில் அன் டைமில் பால் வேண்டாம் அப்படி பழகினா கஸ்டமாகிடும் பாலை காய்சுவதற்க்குள் பசி பொறுக்க முடியாது சோ இரவு நேரத்தில் ஹார்லிக்ஸ்,வீவா இப்படி குடிக்குறதா இருந்தா பிலாக்ஸில் தண்ணீரில் கரைத்து வைத்துகங்க கெடாது பாலோட கரைத்தால்தான் கெட்டு போகும்..இல்லைனா ஹாட் வாட்டர் பிலாக்ஸில் ரெடியா வைத்துகங்க அதோட ஒரு கிளாஸ்,ஸ்பூன் வைத்துட்டா பசிக்கும் டம் நீங்களாகவே கரைத்து குடிச்சுக்கலாம்..இல்லை பிஸ்கட் விரும்பினா மேரி இப்படி டிசைட் செய்யுங்க அது தெகட்டாது அதோட தண்ணீரில் முக்கி சாப்டுங்க பசி ஈஸியா அடங்கும்..வாய்க்கும் நல்லா இருக்கும்..வெருமனே சாப்டா புகைச்சல் வரும்...அதோட உங்களுக்கு அதிக பெயின் எனில் தாமத்திக்காமல் உடனே டாக்டரை அனுகவும் அந்த ரீசனை சொல்ல விரும்பல ஏன்னா இது உங்களுக்கு சாதாராணமா வரும் வலியாகவே இருக்கனும்னு இறைவனிடம் வேண்டி கொள்கீறேன்..எதுக்கும் டாக்டரிடம் போங்க இல்லை அட்லீஸ்ட் ஒரு போனாவது பண்ணி கேட்டுகங்க ஆமா முக்கியமான கேள்வி ஸ்கேன் எடுத்து இருக்கீங்களா?இதுவரை?
அதன் ரிப்போர் என்ன?

அன்புடன்,
மர்ழியாநூஹு

ஹாய் Dear மர்ழியா
ஆகஸ்டு 6, 2008 - 10:50am - வழங்கியவர் sudha.k

46 நாட்கள் தான் ஆகிறது. அதனால் முதல் முறையாக 12 ஆம் தேதி தான் செக்கப்புக்கு போகிறேன். காலை எழுந்திருக்கும் பொது தான் லைட்டா வலிக்கும். ஒரு டம்லர் தண்ணிர் குடித்துவிட்டால் பிறகு எப்போழுதும் வலி இல்லை. இதுவரை ஸ்கேன் எடுத்தது இல்லை.எனக்கு age 22தான் நான் உங்களை அக்கா என கூப்பிடலாமா?

அன்புடன்,
சுதா.

ஹாய் சுதா!!
ஆகஸ்டு 6, 2008 - 11:31am - வழங்கியவர் menaga

அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னிங்க.ஒ.கே..மர்ழி சொன்ன மதிரி உங்களுக்கு நீர் கடுப்பாக கூட இருக்காலாம்.பயப்பட தேவையில்லை.அதற்கு தண்ணீர் நிறைய குடிக்கவும்.பசிக்கும்போது உங்களுக்கு எது பிடிக்குதோ அதை சாபிடுங்கள்.வலிக்கும் போது எண்ணெய் தடவுங்க.அப்பயிந்மெண்ட் பொய்ட்டு வந்து பதில் சொல்லுங்க.வேர எதவது சந்தேகம் இருந்தா கேளுங்க.

Hai Friends
ஆகஸ்டு 6, 2008 - 1:29pm - வழங்கியவர் sudha.k

மேனகா, சூர்யா & மர்ழியா நீங்கள் அனைவரும் எங்கு இருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?

சுதா உங்க இஸ்டம்
ஆகஸ்டு 6, 2008 - 11:48pm - வழங்கியவர் MarliyaNoohu

உங்களை விட 4 வயது மூத்தவள் சோ மார்ழியானே அழைக்கலாமே?இல்லை அக்கான்னு கூப்பிடுறது உங்க இஸ்டம் எப்படி வேணாலும் அழைக்கலாம் மேடம் மட்டும்தாம் பிடிக்காத வார்த்தை...ஒரு டம்லருன்னு குடிக்காம நிரைய குடிங்க..ஆமாம் எனக்கும் 3 மாசம் ஆகுது இன்னும் ஸ்கேன் எடுக்கல அடுத்தமாசம்தான் எடுப்பாங்கலாம்..நான் ஸ்கேன் எப்படா எடுப்பாங்கன்னு நாளை என்னிட்டு இருகேன் இதில் ஒரு சைட்டின் முகவரி கொடுத்து இருகேன் மேனு உங்கள்ளுக்கும்தான்..கன்ஸீவ் ந்னு தெரிஞ்சதும் கூகிலில் தேடி எடுத்தேன் சூப்பர் சைட் இது வீக் பை வீ பேபி எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம் இதுவரை பார்த்துட்டு இருகேன் இதில் அதோட பல ச்ந்தேகத்திற்க்கு பதில் இருக்கும் சோ பார்த்துட்டு சொல்லுங்க இருவரும்
இப்ப ஓரளவு ஒழுங்கா இருகேன் சோ மயக்கம் வரும் முன் வெஜ் பிரியாணி செய்யனும் பை..

http://www.babycenter.com/
bigStory.htm?id=5228345

அன்புடன்,
மர்ழியாநூஹு

கவலை விடுங்க சுதா
ஆகஸ்டு 7, 2008 - 2:21am - வழங்கியவர் Thanisha

ஹை சுதா,

எனக்கும் உங்களைப் போன்றுதான் வயிற்று வலி இருந்தது. நானும் அப்போ டாக்டரிடம் காட்டினேன். ஆனால் குழந்தை பெறும் வரை வலி (10 மாதமும்) இருக்கத்தான் செய்தது. அதனால் கவலைப்படாதீங்க. செக்கப் போகும் போது டாக்டரிடம் சொல்லுங்க. மர்லியா கொடுத்திருக்கும் வெப்சைட் ரொம்ப நல்லாயிருக்கும். நான் குழந்தை உண்டாயிருக்கும் போது பேபிசெண்டர்.காம் தான் பார்த்து கொண்டிருப்பேன். ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். நம்ம குழந்தை எப்படி எல்லாம் இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்.

hai
ஆகஸ்டு 7, 2008 - 3:12am - வழங்கியவர் suria

ஹாய் சுதா,
நலமா? என் ஊர் கடலூர் பக்கத்தில் ஒரு கிராமம், தர்போது வசிக்குமிடம் தென் கொரியா(south korea).eat well & take rest.
with love,
suria

சுதா ,சூர்யா,மர்ழி!!
ஆகஸ்டு 7, 2008 - 7:10am - வழங்கியவர் menaga

நான் பிரான்சில் இருக்கேன்பா.சொந்த ஊர் பாண்டிச்சேரி.
மர்ழி ரொம்ப நன்றிப்பா.நீங்க கொடுத்த வெப்சைட் ரொம்ப நல்லா இருக்கு.
சூர்யா எப்படி இருக்கிங்க,இதான் முதல் தடவை உங்களிடம் பேசுவது.கடலூரில் எங்கே இருக்கிங்க.பாண்டி பக்கத்தில் தான் கடலூர் அதனால் கேட்டேன்.

ஹாய் மேனகா, சூர்யா, மர்ழி, தனிஷா !!
ஆகஸ்டு 7, 2008 - 11:45am - வழங்கியவர் sudha.k

சூர்யா, மேனகா, மர்ழி, தனிஷா நீங்கள் அனைவரும் நலமா? நான் நலம். என் ஊர் திருச்சி. அமெரிக்கா வந்து 8மாதம் ஆகிறது. மர்ழி சொன்ன சைட்டை பார்தேன். நல்லா இருக்கிறது..மர்ழி வெஜ் பிரியாணி செய்துடிங்கலா.சாப்பிடாச்சா.நான
் தீபாவளிக்கு இந்தியா செல்கிறேன்.போன வருடம் தலைதிபாவளி கொண்டாடவில்லை. இந்த முறை ஊருக்கு செல்கிறேன்.ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.சூர்யா உங்களுக்கு கொரியன் மொழி தெரியுமா?ஒரு கேள்வி
An neong ha sae yo?

சுதா...
ஆகஸ்டு 7, 2008 - 1:05pm - வழங்கியவர் இலா

மர்லி வீட்டுல பிரியாணியா... மர்லி.. சொல்லவே இல்லை...

இந்த சைட் இல்லாம ஒரு புத்தகம் இருக்கு என் நண்பர்களெல்லாம் கன்சீவ் ஆனது தெரிந்த முதல் உடனே வாங்கியது என்று சொல்வார்கள்...
"What to expect when you Expect" -->> you get this in india also...

உங்களுக்கு புக் எப்படி இருக்கும்ன்னு தெரியனுமின்னா ... பார்ன்ஸ் அண்ட் நோபிள் போய் படித்து பாருங்க... நார்மலா எல்லா ஊர் பொது நூலகத்திலும் பார்த்து இருக்கேன்... நீங்க படிக்கிறதில்லாம உங்க கணவரையும் படிக்க சொல்லுங்க... சோ அவங்களுக்கும் புரியும் நீங்க ஏன் எப்படி இருக்கீங்க... உங்களுக்குள்ள இவ்வளவு மாறுதல் நடக்குதுன்னு... உங்க அப்பாயின்மென்ட் எப்ப இருந்தாலும்... ஏதாவது டவுட் இருந்தா உங்க டாக்டரை போன் செய்து கேக்கலாம்... Because they are obligated to answer and help you even though you have not even met them once. எதாவது வலி இருந்தா இங்க டைலனால் மட்டும் எடுத்துக்க சொல்லுவாங்க...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

ஹாய் இலா
ஆகஸ்டு 7, 2008 - 1:39pm - வழங்கியவர் sudha.k

இலா நிங்க நலமா? இங்கு எந்த இடத்தில் இருக்குறிர்கள்? நான் LA வில் இருக்கிறேன். அந்த புத்தகத்தை பார்த்துட்டு சொல்றேன். Thank you.

சுதா..
ஆகஸ்டு 7, 2008 - 1:56pm - வழங்கியவர் இலா

நான் நலமே , பாஸ்டனில் இருக்கிறேன்... அட்லான்டிக் பெருங்கடல் சமீபத்தில்...

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

ஹாய் மேனகா, சுதா
ஆகஸ்டு 7, 2008 - 8:18pm - வழங்கியவர் suria

ஹாய் மேனகா, எனது சொந்த ஊரும் பாண்டிச்சேரிதான் (near employment exchange), ஹஸ் ஊருதான் கடலூர். நீங்கள் பாண்டியில் எங்கு வசித்தீர். சுதா 네 안녕하세요 (yes, Annyong haseyo) உங்களுக்கு கொரியன் மொழி தெரியுமா? நான் ஓரளவு புரிந்து கொல்லுவேன், கொஞ்சம் பேசூவேன். 안녕히 가세요 Annyonghi kasayo (Good bye).
with love,
suria

எதுவுமே சாப்பிட பிடிக்கல.. உங்கள் ஆலோசனை தேவை
ஆகஸ்டு 8, 2008 - 8:45am - வழங்கியவர் sangeethasivakumar

அன்புத் தோழிகளுக்கு வணக்கம்.

நான் தற்போது 12 வாரம் கர்ப்பம். எனக்கு எதுவுமே சாப்பிட பிடிக்கல. பழங்கள் ஓரளவுக்கு சாப்பிட முடியுது. மத்தபடி சாதம்,சப்பாத்தி,கலவை சாதம்,காய்கறி எதுவுமே சாப்பிட முடியல..பசி நேரத்துல கூட சாப்பாட்ட பார்த்தா பிடிக்கல...

சாம்பார் சாப்பிட்டே 3 மாதம் ஆகப்போகுது...

பொதுவா நான் நல்லா சாப்பிடற ஆள்தான். ஆனா இப்ப ஒண்ணுமே சாப்பிட முடியல. சாப்பிடாம ஜூஸ் குடிச்சாலும் ரொம்ப டயர்ட் ஆ இருக்கு :-(

எனக்கு ஏற்கனவே ஒரு தடவை டின்சி பண்ணியாச்சு. கல்யாணம் ஆகி 2 வருடம் ஆகப்போகுது...3 மாசமா நான் காய்கறியே எடுதுக்கல..

இன்னைக்கு கால்லையில சாப்பாத்தி சாப்பிட்டேன்.அப்புறம் வண்டியில வர்றப்ப மாதுளை சாப்பிட்டேன்....ஆபிஸ் வந்த உடனேயே வாந்தி எடுத்தாச்சு..அப்புறம் ஒண்ணுமே சாப்பிட முடியல. :-(

இந்த பாப்பாவ நான் நல்லபடியா பெத்துக்கணும்.. எனக்கு நல்லா சாப்பிடறதுக்கு வழி சொல்லுங்களேன்.

ஹலோ சுதா,
ஆகஸ்டு 8, 2008 - 10:26am - வழங்கியவர் ManiSara

ஹலோ சுதா,
வாழ்த்துக்கள். எப்படியிருக்கீங்க? என் பெயர். மணி.

எனக்கு ஆரம்பத்தில் அப்படிதான் இருந்ததது. டாக்டரிடம் கேட்டதற்கு வயிறு விரிவடைவதால் முதல் 5 மாதத்திற்கு வலி இருக்கும். அதனால் பயப்படவேண்டாம் என்று கூறினார். முதல் மூன்று மாதங்களுக்கு நன்றாக ஓய்வு எடுக்கவும்.முதல் மூன்று மதங்களுக்கு உணவும் ஒரே தடவையில் எடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொள்ளவும்.
உழைப்பின்றி ஊதியமில்லை
மணி

Hai Friends
ஆகஸ்டு 8, 2008 - 11:13am - வழங்கியவர் sudha.k

Hai mani thanks for your tips.மேனகா,தனிஷா,சூர்யா,மர்ழி, மணிசாரா,இலா அனைவரும் நலமா? சூர்யா எனக்கும் கொரியன் மொழி தெரியாது. ஆனால் இங்கு என் தோழி இருந்தால் அவள் ஒருசில வார்த்தைகள் சொல்லிகொடுத்தால் அது தான்.How are you?, Good bye இரண்டுக்கும் ஒரே வார்த்தையாம்.அப்படியா?

Hai Friends
ஆகஸ்டு 8, 2008 - 11:17am - வழங்கியவர் sudha.k

Hai mani thanks for your tips.மேனகா,தனிஷா,சூர்யா,மர்ழி, மணிசாரா,இலா அனைவரும் நலமா?நான் நலம்.அடிக்கடி எனக்கு பசிக்கிறது.ஏன்? சூர்யா எனக்கும் கொரியன் மொழி தெரியாது. ஆனால் இங்கு என் தோழி இருந்தால் அவள் ஒருசில வார்த்தைகள் சொல்லிகொடுத்தால் அது தான்.How are you?, Good bye இரண்டுக்கும் ஒரே வார்த்தையாம்.அப்படியா?

சுதா... அது நல்லதுதானே...
ஆகஸ்டு 8, 2008 - 12:49pm - வழங்கியவர் இலா

கர்ப்பமாக இருப்பவக்ர்களுக்கு சிலருக்கு அடிக்கடி பசிக்கும்.. 3 தடவை சாப்பிடாமல் அதனை 6 முறை சாப்பிடுங்க.. ஒவ்வொரு மீலுக்கும் இடையில் ஒரு 3 மணி நேரம் இடைவெளி விட்டு சாப்பிடுங்க... அப்படி செய்வதால் ஹார்ட்ப்ர்ன் எனப்படும் நெஞ்செரிச்சலும் இருக்காது...
எனக்கு தெரிஞ்ச சில மினி மீல்ஸ்
பசிக்கும் போது ஒரு 4 ஆல்மன்ட்ஸும் இல்லைனா வால்நட்ஸும் ஒரு சின்ன ஆப்பிளும் சாப்பிடுங்க... நட்ஸ் சாப்பிட்டா நல்லது கூட... பச்சைபயிறு ஊரவைத்து லேசா தாளிச்சு குட்டி குட்டி ஜிப்லாக் பேகில் வச்சுக்கோங்க... கேரட் துருவியதும்+வெள்ளரிக்காய் வெட்டியது இதில் சேர்த்து லெமன் பிழிந்து சாப்பிடுங்க... இங்க கிடைக்கிற யோகர்ட் குட்டி டப்பில் 90 காலரிகள் தான்.. தாராளமா இதெல்லாம் பண்ணலாம்... பிடிக்குமென்றால் ப்ரெட் டோஸ்ட் ( டீ ரஸ்க் கூட)பீனட் பட்டர் /ஜெல்லி சான்ட்விச் ... கேரட் வித் பீனட் பட்டர் ஒரு டீ ஸ்பூன்... இதெல்லாம் கர்பிணிகளுக்கு மட்டுமில்லாம.. எல்லாருமே இப்படி சாப்பிடாலாம்...
நேத்து கூட மர்லியை கிண்டல் பண்ணினேன்..

I am only as strong as the coffee I drink, the hairspray I use and the friends I have

ஹாய் சுதா,சூர்யா,சங்கீதா!!
ஆகஸ்டு 8, 2008 - 12:54pm - வழங்கியவர் menaga

சுதா நான் நலம்.நீங்க எப்படி இருகிங்க.இப்பொ வலி எப்படி இருக்கு?.ஒரு அட்வைஸ் தீபாவளிக்கு ஊர்க்கு போவதாக சொன்னிங்க.இந்த மாதிரி சமயத்தில் வேணாம்.எதுக்கும் உங்க டாக்டரிடம் போலாமா என்று கேளுங்க.அது உங்களுக்கும் உங்க பேபிக்கும் நல்லது.தப்பா எடுத்துக்காதீங்க,உங்க நல்லதுக்காக சொன்னேன்.பேபி பிறந்த பிறகு போய் வாருங்கள்.

சூர்யா நலமா?நான் நலம்.என் அம்மா வீடு அரியாங்குப்பம்,ஹஸ் வீடு லப்போர்த்வீதி.அப்போ நீங்க தட்டாஞ்சாவடியா?
ஹாய் சங்கீதா,வாழ்த்துக்கள்.ஒரு 3 மாதம் வரை வாந்தி வரும்.வாந்தி வந்தாலும் நீங்க எதாவது சாப்பிடனும்.அது உங்க பேபிக்குத்தான் நல்லது.காய்கறி கொஞ்ச கொஞ்சமாக சேஇத்து சாப்பிடவும்.சாப்பாட்டை பார்த்தா பிடிக்காது தான் ஆனால் என்ன செய்வது .ஜூஸ் குடிங்க,பழம்,சாலட் வகைகள் என்று சாப்பிடுங்க.நீங்க நல்லா சாப்பிடுங்க உங்க பாப்பாவை நல்ல படிய பெத்தெடுப்பிங்க.ஆல் தி பெஸ்ட்.

47 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »