topic_image


ஸ்னேகிதிகளே..அரட்டைக்கு அனைவரும் இங்கு வாருங்கள்.11 ம் பதிப்பு தாண்டி,12 ல் வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
இந்த ஹையா..ஜாலி..அரட்டை அடிக்கலாம் பகுதியில் மட்டும் தானே ஜாலியாக பேசி சந்தோஷமாக இருக்கலாம்.வாங்கப்ப
அ..வாங்க..சந்தோஷமாக பேசி,சிரித்து,மற்றவர்களையும் சிரிக்க வைத்து,சந்தோஷப் படுத்துங்கள்.
அன்பு ஸ்னேகிதி,
ஸாதிகா


தோழிகள் யாரும் இல்லயா?
ஆகஸ்டு 12, 2008 - 4:36am - வழங்கியவர் சரண்ய...

புது ட்ரெட் ஆரம்பம் ஆகிடுத்து அரட்டைக்கு தோழிகள் யாரும் இல்லயா?

thanks shadiqa
ஆகஸ்டு 12, 2008 - 4:36am - வழங்கியவர் சரண்ய...

நல்ல வேளை சாதிகா அக்கா புது த்ரெட் ஆரம்பிச்சிங்க 11ம் பதிப்புல பதிவுகள் பார்க்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது அருசுவை ரொம்ப slow ஆகிடுச்சி

ஸ்னேகிதிகளே,
ஆகஸ்டு 12, 2008 - 4:44am - வழங்கியவர் shadiqah

ஸ்னேகிதிகளே,
அரட்டைக்கு இங்கு வாருங்கள்.11 வது பாகம் 90 ஐ தாண்டி விட்டது.இங்கு அரட்டைக்கு வாருங்கள்.ஸாதிகா ஆரம்பித்த பாகம்.மர்ழி வந்து கிண்டல் பண்ணும் முன் சீக்கிரம் திரட்டை நிரப்புங்கள்.சரண்யா லைனில் இருக்கின்றீர்களா?
ஸாதிகா

சாதிகா
ஆகஸ்டு 12, 2008 - 4:52am - வழங்கியவர் சரண்ய...

சாதிகா அக்கா வேலையெல்லாம் முடிந்ததா? மர்ழி மயக்கம் தெளிந்து வருவதற்குள் புது த்ரெட் ஆரம்பிச்சுட்டிங்க சந்தோசம் அப்படியே அத எப்படி ஆரம்பம் செய்யரதுன்னு எனக்கு சொல்லுங்களேன் pls

சாதிகா
ஆகஸ்டு 12, 2008 - 4:57am - வழங்கியவர் சரண்ய...

சாதிகா அக்கா என்னோட குட்டி பாப்பா தூங்கி எழுந்துட்டா அவள கவனிக்கனும். நான் கிளம்பறேன் bye என்னோட email id sme_saran@yahoo.co.in

ஸ்னேகிதிகளே
ஆகஸ்டு 12, 2008 - 5:35am - வழங்கியவர் shadiqah

ஸ்னேகிதிகளே,பயோடேட்டா என்ற அழகான திரட்டை ஆரம்பித்து மிக சொற்பமாகத்தான் பதிவு போட்டு இருக்கின்றீகள்.திரட்டை ஆரம்பித்ததும் பதிவுகள் போட்ட கவிதா சுரேஷ்.ஸாதிகாவாகிய நான்,மணிமேகலை சரவணகுமார்,ஜெயஸ்ரீ ஸ்ரீதர்,ஹாஷினி,ரமணி சிவகுமார்,ஆசியாஷாஹுல்,சரண்யா மோகன்,மேனகா சத்யாமரி ரோக்,சசிகலா முருகேசன்,அஞ்சலிசெந்தில்,கவிதா
அருண்பிரகாஷ்,சீதாலக்ஷ்மி சுப்ரமணியம் ,புதியதாக இணைந்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதாமரை,வேல்விழிகுமாரவேல் ஆகிய அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்
பதிவு போடாத ஸ்னேகிதிகள் மர்ழி,ஜலீலா,,செந்தமிழ்செல்வி,ச
ரஸ்வதி,தளிகா,வாணிரமேஷ்,அஸ்மா,க
விசிவா,ரஸியா,மஹாலக்ஷ்மி,
தேவா,விஜி,ஷாரதா,மாலதி,ஸ்ரீ,விம
லா,வின்னி,பிரதிபாலா,அதிரா,கதிஜ
ா.மொழி,தளிகா,திவ்யாஅருண்
,ஹரி காயத்ரி,ஜானகி,தனிஷா,ஷகிலா பானு,இலா,ஜீவா கிருஷ்ணன்,ஹாஜா ஜாஸ்மின்,ரஜினி,
கோபிகா,கவிதா ராம்,சந்தியா சேகர்,பாத்திமா,சிஜா,அனு,மாலினி
,சசிகலா அனைவரும் வந்து உங்கள் பதிவுகளை போடுமாறு அன்புடன்,ஆர்வத்துடன்,உரிமையுடன
் கேட்டுக் கொள்கின்றேன்.பெயர் குறிப்பிட மறந்த ஸ்னேகிதிகள் மன்னித்து,அவ்ர்களும் வந்து பதிவு போடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.ஒவ்வொரு பெயராக குறிப்பிட்டாலாவது பதிவு போட மாட்டர்களா என்ற நப்பாசைதான்.
அன்புடன்,
ஸாதிகா

hai
ஆகஸ்டு 12, 2008 - 6:14am - வழங்கியவர் Mahalakshmiprag...

ஸாதிகா அக்கா பயோடேட்டா பதிவு எங்கே இருக்கிறது பொது தலைப்பிலா அல்லது எங்கே என்று சொல்லுங்கள் நான் போடுகிறேன்.

Think Positively U will achieve everything
மஹாபிரகதீஸ்,China

வின்னி
ஆகஸ்டு 12, 2008 - 7:09am - வழங்கியவர் aniaksh

வின்னி,
வந்தாச்சா. வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க?. ரொம்ப நாளாச்சு உங்ககூட பேசி, நானும் இப்பத்தான் வெகேசன் முடிஞ்சு வந்தேன். இப்போத்தான் ஸ்லோவா எல்லாப்பதிவுகளையும் பார்த்துட்டு இருக்கேன். வாங்க பேசலாம்Rajini

அறுசுவைத்தோழிகள்
ஆகஸ்டு 12, 2008 - 7:23am - வழங்கியவர் aniaksh

அறுசுவைத்தோழிகள் அனைவருக்கும் வணக்கம், வந்தனம், நமஸ்க்கார். என்னப்பா இன்னைக்கு நான் வந்த நேரம் பார்த்து ஒருத்தரயும் காணோம். வாங்க வாங்க எல்லாரும் சீக்கிரம் ஓடிவாங்க. எதுக்கா?. அரட்டை அடிக்கத்தான் -:)))))))
Rajini

ஹாய் சாதிகா மேடம்
ஆகஸ்டு 12, 2008 - 8:18am - வழங்கியவர் velvizhi.k

ஹாய் சாதிகா மேடம்..
அருசுவையின் புதுவரவுகளுக்காக ஒரு த்ரெட் உருவாகியதற்க்கும்,
என்னை குறிப்பிட்டு எழுதியதற்க்கும் மிக்க நன்றி.....
நீங்க எல்லாரும் ஜாலியா அரட்டை அடிக்கறத பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு...

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

மஹா மேடம்..
ஆகஸ்டு 12, 2008 - 8:23am - வழங்கியவர் velvizhi.k

மஹா மேடம்..
நீங்க கேட்ட த்ரெட்டுக்கான லின்க் இதோ..

http://www.arusuvai.com/tamil/
forum/no/9062

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

ஹாய் வேல்விழி
ஆகஸ்டு 12, 2008 - 8:55am - வழங்கியவர் kavi.s

ஹாய் வேல்விழி எப்பிடி இருக்கீங்க உங்க பெயர் நல்லா இருக்கு, அழகான பெயர்

ஹாய் கவி மேடம்..
ஆகஸ்டு 12, 2008 - 9:12am - வழங்கியவர் velvizhi.k

ஹாய் கவி மேடம்..
நான் மிக்க நலம்..நீங்க எப்படி இருக்கீங்க...
உங்க பாராட்டுகளுக்கு நன்றி..

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

மஹா
ஆகஸ்டு 12, 2008 - 11:33am - வழங்கியவர் shadiqah

மஹா,எனது பதிவைப் பார்த்ததும் இந்தியா வரும் அவசரத்திலும்,பதிவு போடுகின்றேன் என முன்வந்த உங்களுக்கு நன்றி..எனது கூவலுக்கு முதலில் தலை சாய்த்த தலைச்சன் ஸ்னேகிதி நீங்கள்.உங்கள் பதிவைப் பார்த்ததும் பதில் போட எத்தனிக்கும் பொழுது கார் வந்து விட்டது..பேரனை தூக்கிகொண்டு ஹாஸ்பிடல் கிளம்பி விட்டேன்.வந்ததும் பதிவைப் போடலாம் என ஆயத்தமானபோது வேல்விழி கொடுத்து விட்டார் அந்த லின்க்கை.
ஸாதிகா

ஸாதிகா மேடம்
ஆகஸ்டு 12, 2008 - 8:56pm - வழங்கியவர் Janaki2411

எனக்கு வேலை ரொம்ப ஜாஸ்தியாக இருக்குது அதனால் பயோடேட்டா பகுதியில் போட முடியவில்லை. கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது அங்கே பதிவு போடுகிறேன்.

ஜானகி

ஹாய் வேல்விழி
ஆகஸ்டு 13, 2008 - 1:02am - வழங்கியவர் kavi.s

ஹாய் வேல்விழி
நான் நல்லா இருக்கேன், மேடம்லா வேண்டாப்பா கவின்னே கூப்பிடுங்க, நீங்க சேலம்னு உங்க பயோடேட்டாவ பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் சேலத்துல நீங்க எந்த இடம்,விருப்பமிருந்தால் சொல்லலாம், நானும் சேலம்தான் அதான் கேட்டேன்.

ஸாதிகா
ஆகஸ்டு 13, 2008 - 1:15am - வழங்கியவர் kavi.s

ஸாதிகா மேடம்
அமீரை எதுக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனீங்க, அப்புறம் உங்க பயோடேட்டா திரட்டுக்கு நான் தான் முதலில் பதிவு போட்டேன் என்னக்கு எதும் ஸ்பேஷல் கிப்ட் இல்லையா

ஸாதிகா மேடம்
ஆகஸ்டு 13, 2008 - 1:15am - வழங்கியவர் kavi.s

ஸாதிகா மேடம்
அமீரை எதுக்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனீங்க, அப்புறம் உங்க பயோடேட்டா திரட்டுக்கு நான் தான் முதலில் பதிவு போட்டேன் என்னக்கு எதும் ஸ்பேஷல் கிப்ட் இல்லையா

என்னையும் விட்டுட்டாங்க
ஆகஸ்டு 13, 2008 - 2:05am - வழங்கியவர் T S JAYANTHI

கவி என்னையும் விட்டுட்டாங்க.

சரி போனாப் போகுது. முதல்ல ஆமிருடன் ஆஸ்பத்திரிக்கு ஏன் போனீர்கள். தடுப்பூசி போடத்தானே. வேற ஒண்ணும் இல்லை தானே.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஜானகி,தங்கை கவி
ஆகஸ்டு 13, 2008 - 2:18am - வழங்கியவர் shadiqah

ஹலோ ஜானகி,
உங்க்ள் சவுகரியப் படி நேரம் கிடைக்கும் பொழுது பயோடேட்டாவில் பதிவைப் போடுங்கள்.நன்றி
ஹாய்..கவி.என்ன கரிசனம். நீங்கள் இப்படி கேட்பது எனக்கு மிக சந்தோஷமாக உள்ளது. ஆமிருக்கு சளியாக இருந்தது.இப்பொழுது நன்றாக இருக்கிறார்.வீட்டுப் பக்கத்தில் நிறைய பீடியாட்ரிஷியன் இருந்தாலும் மைலாப்பூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவ மனைக்கே அழைத்துச்செல்வேன்.அங்கு தான் பிறந்தார்.
பயோடேட்டா திரட் ஆரம்பித்து வைத்ததுமே முதல் பதிவு நீங்கள்தான்.பதிவு போடவில்லையே எனகூவிக்கூவி அழைத்ததும் பதிவு போட முன் வந்தவர் மஹா.அப்போ..அவர் தலைச்சன் சகோதரி என்றால் நீங்கல் தலைச்சனுக்கு தலைச்சன்.ஓகேவா?இந்த கிஃப்ட் போதுமா?இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
ஸாதிகா

ஹை ஜெயந்தி மாமி
ஆகஸ்டு 13, 2008 - 2:25am - வழங்கியவர் shadiqah

ஹை ஜெயந்தி மாமி,பேரனுக்கு சளிதான்.இப்பொழுது பரவா இல்லை.மாமி..இப்போ நீஙக பிரீயா?நான் கால் பண்ணட்டுமா?உங்கள் குரலைக் கேட்க,அப்புறம் நேரில் பார்க்க ஆசை. உங்கள் ரிப்ளைக்காக வெய்ட்டிங்..
ஸாதிகா,பேரனுக்கு சளிதான்.இப்பொழுது பரவா இல்லை.மாமி..இப்போ நீஙக பிரீயா?நான் கால் பண்ணட்டுமா?உங்கள் குரலைக் கேட்க,அப்புறம் நேரில் பார்க்க ஆசை. உங்கள் ரிப்ளைக்காக வெய்ட்டிங்..
ஸாதிகா

என்ன சாதிகா சாச்சி
ஆகஸ்டு 13, 2008 - 3:07am - வழங்கியவர் faleela

என்ன சாதிகா சாச்சி ,என்னை மறந்துடிளா?

திரெட் ஓபன் பண்ண சொல்லும்போது, இந்த தங்கை தானே உங்க விருப்பத்தை நிறைவேற்றினேன்.

எனக்கு ஸ்பெஷல் கிப்ட் கொரியர்ல அனுப்பிடுங்க ,சரியா?

ASIMS
PEACE BE ON EARTH

தோழிகள் அனைவருக்கும் ஹாய்
ஆகஸ்டு 13, 2008 - 3:45am - வழங்கியவர் pradeebala

என்னை விசாரித்த அனைவருக்கும் என் நன்றி.எல்லோரும் எப்படி இருக்கீங்க?

ஹாய் மர்ழி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?மயக்கம் என்று சொன்னீர்கள் இப்ப எப்படி இருக்கு?மரியம் நலமா?உங்க மெயில் எனக்கு வரல.அந்த போட்டோவில் என்னை ய்யரென்று கண்டுபிடித்தீர்களா?அதற்கு பதில் அனுப்புங்க முடியும் பொழுது.

ஹாய் மஹா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?நல்லபடியா ஊருக்கு போயிட்டு வாங்க.உங்க அண்ணா கல்யாணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

ஹாய் தனிஷா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?நான் உங்ககிட்ட மாத்திரை சாப்பிடுவதாக சொன்னேன் இல்லையா அது சாப்பிட்டபின் ஸ்கேன் எடுத்து பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் அதனால் தான் ஹாஸ்பிடல் போனேன்.வேற ஒன்றும் இல்லை

ஹாய் ஜெமாமி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?ஆமா மாமி நீங்க சொன்னது சரி தான் கப் உடைக்க ஆள்வர வரை அவரை தானே கவனிக்கனும்.

ஹாய் ஹாஷினி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?உங்களுக்கு பதில் மெயில் பன்னினேன் பார்த்தீர்களா?

ஹாய் ஸாதிகா அக்கா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?உங்க பேரனுக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?பயோடேட்டா திரடில் கூடிய சீக்கிரம் பதிவு போடுகிறேன்.

ஹாய் கவி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் கவி.எஸ் நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?ப்ரேயர் மீட்டிங் நல்லபடியா முடிந்ததா?விசேசம் இல்லப்பா நார்மல் செக்கப் தான்.

ஹாய் கவிசிவா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் அருண்கவி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் சரண்யா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?எங்கையோ என்னை விசாரித்தீர்கள் ரொம்ப சந்தோசம்.விசேசம் இல்லப்பா நார்மல் செக்கப் தான்.

ஹாய் காயத்ரி நலமா நீயும் உன் கணவரும்?என்னடா இப்ப தானே பேசினா இதில் விசாரிக்கறா என்று நினைக்கிறியா அப்பறம் நீ கோவிச்சுக்க கூடாதே அதான்.

ஹாய் சாரதா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் ரசியா அக்கா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?எங்க இந்தியா போயிட்டு வந்து ஆளை காணோம் அறுசுவை பக்கம் பிஸியா?

அதிரா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?கோவில் எப்ப போவது என்று முடிவு செய்தாச்சா?சொன்னா நாங்களும் வர முயற்ச்சிக்கிறோம்.

ஹாய் கதீஜா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்? என்னப்பா ஊருக்கு நல்லபடியா போயாச்சா?நல்லா என் ஜாய் பன்னுங்க.

ஹாய் ஜலிலா அக்கா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் மேனகா நலமா நீங்க உங்க கணவர் மற்றும் உங்க வயத்தில் உள்ள உங்க குட்டி செல்லம்?

ஹாய் ஜானு உடம்பு சரியில்லை என்று சொன்னீர்கள் பேசும் பொழுது நல்லபடியா பாத்துக்கங்க உடம்பை.

ஹாய் விஜி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?குழந்தைகளுடன் சேர்ந்து நீங்களும் லீவை என் ஜாய் பன்றீங்க போல.சரி நல்லா என் ஜாய் பன்னிட்டு வந்து எங்க கூட அரட்டை அடிங்க.

இலா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?உங்க தத்தெடுக்கும் குணம் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது.நம்ம மற்ற தோழிகள் ஆலோசனை கூறுவார்கள் உங்களுக்கு.உங்க முயற்ச்சி கூடிய விரைவில் வெற்றிஅடைய வாழ்த்துக்கள்.

ஹாய் சந்தோ நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?என்னப்பா தமிழ் டைப்பிங் பழகினீர்களா இல்லையா?

ஹாய் ஸ்ரீ நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் கே.ஆர் நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் சசி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?ஊருக்கு எப்ப போறீங்க?நல்லபடியா போய் என் ஜாய் பன்னிட்டு வாங்க.கண்டிப்பா மெயில் பன்னுங்க இதில் என்ன கேள்வி.

ஹாய் சுதா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் மணிசரா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் ரஜினி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?ரஜினி நாம ஞாயிறு அன்று உங்களுக்கு முடிந்தால் பேசுவோம்.

ஹாய் அஞ்சலி நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் வித்யா சரவணன் நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் சிஜாதோட்டா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் சரண்யா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?

ஹாய் தேவா நலமா நீங்க மற்றும் உங்க வீட்டில் அனைவரும்?வேலை எப்படி போகுது?

ஹாய் வேல்விழி நலமா நீங்க மற்றும் வீட்டில் அனைவரும்?

ஹாய் மனோகரி மேடம் நலமா நீங்க மற்றும் வீட்டில் அனைவரும்?

ஹாய் சரஸ்வதி ஆன்டி நலமா நீங்க மற்றும் வீட்டில் அனைவரும்?ஆஸ்திரேலியா போறதா சொன்னீங்க அதுக்கு இப்பவே பிஸியா இருக்கீங்களா?

மொழி நலமா நீ மற்றும் வீட்டில் அனைவரும்?என்னம்மா கல்யாண பொண்ணு ரொம்ப பிஸியா சமையல் கத்துகறீயா?இந்த பக்கம் ஆளை காணோம்.

லக்ஷ்மி, ஆஸ்மா, ஆசியா, ரமணிகள் எஸ், க, விமலா ஆன்டி, மாலதி ஆன்டி, திவ்யா, எல்லாரும் எப்படியிருக்கிறீங்க? மற்றும் பெயர் விட்டுப்போன தோழியர்களுக்கு ஒரு பெரிய ஹாய்
அன்புடன் பிரதீபா

பிரதீபா
ஆகஸ்டு 13, 2008 - 4:08am - வழங்கியவர் சரண்ய...

பிரதீபா லைன்ல இருக்கீங்களா?mail பார்தீங்களா? பதிலே வரல மேலும் உங்க போட்டோவ நான் பார்க்க கூடாதா?? pls

எப்படி
ஆகஸ்டு 13, 2008 - 4:16am - வழங்கியவர் சரண்ய...

எப்படி தீபா உங்களால இவ்வளவு டைப் பண்ண முடியுது?really great

பிரார்த்தனை செய்கின்றேன்
ஆகஸ்டு 13, 2008 - 4:34am - வழங்கியவர் shadiqah

ஹலோ தனிஷா,
கண்டிப்பாக உங்களுக்காக துஆ செய்கின்றேன்.உங்கள் விருப்பம் போல் உங்கள் கனவு இல்லம் அமைந்து,நல்லபடி குடி புகுந்து,சீரோடும் செழிப்போடும்,நீடூழிகாலங்கள் சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றேன்.
வீடு கட்டுவது என்பது பல சிரமங்களுக்கிடையில் கிடைக்கும் ஒரு சுகானுபவம்.அதை நானும் அனுபவித்தேன்.கட்டி முடிந்து,புது வீட்டில் இருக்கும் பொழுதுநாம் சுவாசிக்கும் காற்றே இனிமையாக இருக்கும்.அல்ஹம்துலில்லாஹ் என மனம் கசிந்துருகும்.இன்று இன்னொரு வீடு எப்பொழுது கட்டப்போகிறோம் என மனம் ஆவலுடன் இருக்கின்றது.இந்த அழகான அனுபவத்தை சீக்கிரம் அனுபவிக்கப்போகின்றீர்கள்.அல்ஹம
்து லில்லாஹ்.இந்த நேரத்தில் அறுசுவை ஸ்னேகிதிகள் அத்தனை பேருக்கும் இந்த அனுபவம் கிட்டி சொந்தவீட்டில் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.
ஸாதிகா

தீபா
ஆகஸ்டு 13, 2008 - 4:40am - வழங்கியவர் faleela

தீபா ,என்னை விசாரித்ததுக்கு ரொம்ப சந்தோஷம்.

நீங்க நலமா?

எப்படி இவ்ளோ எழுதுறீங்க.
எல்லாரையும் விசாரிக்கும் உங்கள் பதிவை நான் வரவேற்கிறேன்.

ASIMS
PEACE BE ON EARTH

சரண்யா&ஆசியா
ஆகஸ்டு 13, 2008 - 5:12am - வழங்கியவர் pradeebala

ஹாய் சரண்யா சாரிப்பா பதிவு போட்டுட்டு சமைக்க போயிட்டேன் இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கு நான் வேலைக்கு கிளம்ப உங்க பதிவ பாத்ததும் அவசரத்தில் பதில் போட வந்தேன்.உங்க மெயில் எதுவும் எனக்கு வரலப்பா.வந்திருந்தா பதில் கொடுத்திருப்பேன்.ரொம்ப நன்றிப்பா என்னுடைய பெரிய பதிவுக்கு வாழ்த்தியதற்கு.இது நான் மஹாவிடம் கத்துகிட்டது.தனிதனி பதிவு போடுவதற்கு பதில் ஒண்ணா போட்டா நல்லா இருக்குமே அதனால நானும் அதை பின்பற்றுகிறேன்.

ஹாய் ஆசியா நான் நலமே.ரொம்ப நன்றி என் பதிவை பாராட்டியதற்கு.அவசரத்தில் சில பேரை விட்டு விட்டேன்.
அன்புடன் பிரதீபா

ஹாய் தோழிகளே
ஆகஸ்டு 13, 2008 - 5:50am - வழங்கியவர் Thanisha

எல்லா தோழிகளும் நலமா?

சாதிகா அக்கா உங்கள் குரல் கேட்டு நான் பயோடேட்டா லிங்கை தேடிக் கொண்டிருந்தேன். நல்லவேளை வேல்விழி கொடுத்தார். நேத்தே போட்டு விட்டேன் பயோடேட்டாவை. அமிர்க்கு சளி குறைந்து உள்ளதா. நல்ல கவனித்துக் கொள்ளுங்கள்

பிரதிபாலா உங்களுக்கு, பாலிக்கிள் ஸ்டடி பண்ணுகிறார்களா? இந்த முறை உங்களுக்கு கிளிக்காக இறைவனை வேண்டுகிறேன். சரண்யா உங்களிடம் இருந்து எந்த மெயிலும் வரவில்லையப்பா.

ஜெமாமி எப்படி இருக்கீங்க. சந்தியா காலேஜ் போயாச்சா, ஸ்ரீ படிப்பு முடிந்து விட்டதா? என்னவருக்கு காய்ச்சல் உடம்பு வலி. இன்னைக்கு ஆபிஸ் லீவு போட்டுட்டார். இப்போ தூங்குகிறார். எம்பொண்ணு படுத்தியெடுக்குது மாமி, ஒரு வேலை பண்ண முடியல. நான் எங்கே போனாலும் தத்தி தத்தி நடந்து வந்திடுவா. ஒட்டு பொருக்கி வாயில் போட்டுப்பா. மியுசிக் போட்டுட்டு டான்ஸ் ஆடுறா. அவருக்கு எனக்கும் ஒரே சிரிப்பு. ஹாண்டிகேம்ல ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கார்.இப்போ தூங்கிட்டு இருக்கு.

அனைத்து தோழிகளுக்கும் ஒரு ஹாய்.அனைத்து தோழிகளும் நலமா? என்னவருக்கு கஞ்சி காய்ச்ச போறேன். பிறகு வந்து எல்லோரிடமும் பேசுகிறேன்.

நான் புதியவள்
ஆகஸ்டு 13, 2008 - 6:15am - வழங்கியவர் PriyaSelva

என்னையும் உங்கள் நட்பு வட்டாரத்தில் இணைத்து கொள்விர்களா

104 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »