ஆரோக்கியம் | மன்றம் | கூட்டாஞ்சோறு | யாரும் சமைக்கலாம் | உணவுவிடுதிகள்
♣ முட்டை ♣ கோழி ♣ ஆடு ♣ மீன் ♣ இறால் ♣ நண்டு
♣ இனிப்பு ♣ காரம் ♣ வடை பஜ்ஜி ♣ சிற்றுண்டி ♣ சாதம் ♣ கீரை ♣ சிறப்பு உணவு ♣ அவித்த உணவு
♣ குருமா ♣ குழம்பு ♣ சாம்பார் ♣ ரசம் ♣ மசாலா
♣ சட்னி ♣ துவையல் ♣ கறிவகை ♣ பச்சடி ♣ பொரியல் ♣ வறுவல் ♣ கூட்டு ♣ ஊறுகாய் ♣ வற்றல்
♣ கேக் ♣ பிஸ்கட் ♣ பொடி ♣ ஜாம் ♣ சாலட் ♣ சூப் ♣ பானம் ♣ ஐஸ்கிரீம்
♣ செட்டிநாடு ♣ கிராமம் ♣ இஸ்லாமியர் ♣ பிராமணர் ♣ கொங்கு ♣ மதுரை ♣ தஞ்சை ♣ நெல்லை ♣ சேலம் ♣ மைக்ரோவேவ்
♣ ஆந்திரா ♣ கேரளா ♣ கர்நாடகா ♣ கோவா ♣ மஹாராஷ்டிரா ♣ ஒரிஸா ♣ இராஜஸ்தான் ♣ பஞ்சாப் ♣ பெங்கால் ♣ காஷ்மீர் ♣ குஜராத்
♣ இலங்கை ♣ சீனா ♣ தாய்லாந்து ♣ அரேபியா ♣ இத்தாலி ♣ மெக்ஸிகோ ♣ பிரான்ஸ் ♣ மற்றநாடுகள்
ஹைய்யா ஜாலி அரட்டை அரங்கம் பாகம்12ல் 90 பதிவுகளை தான்டி விட்டது.அதனால எல்லாரும் இங்க வாங்க அரட்டை அடிகலாம் கொண்டாடலாம்
எப்படி இருக்கிறீங்க.ஆமாங்க நானும் நாகர்கோவில் தான்.
நல்லா இருக்கிறேன் லதா..நான் இந்தோனெசியாவில் இருக்கிறேன். எனக்கு நாகர் கோவிலில் ராமன் புதூர்.நீங்க நாகர்கோவிலில் எங்கே இருக்கறீங்க
எனக்கு தோவளை ங்க நாகோவில் டூ ஆரல்வாய்மொழி ஆன் த வே.
தோவாளையா?என்னோட ரிலேட்டிவ்ஸ் நிறைய பேர் அங்கே இருக்கறாங்க.என் மாமனார் சொந்த ஊரும் அதுதான்
ஓ! அப்படியா... நீங்க தெக்கூரா அல்லது வடக்கூரா.நங்கா தெக்கூர்ங்க
எனக்கும் உங்க ரென்டு பேரின் ஊரு பக்கத்திலதான்.வள்ளியூர்.சொந்தக ாரங்க எல்லோரும் நாகர்கோவிலில் தான் இருக்காங்க(தளவாய்புரம்)லதா நீங்க அமெரிக்காவில எந்த இடத்துல இருக்கிங்க விருப்பம் இருந்தா சொல்லாம் நன்றி
எப்படி இருக்கிறீங்க? நான் பாஸ்டன் ல இருக்கிறேன். நீங்க எங்கே இருக்கிறீங்க.
எனக்கும் அரட்டை அரங்கத்துல ஜாயின் பண்ணதாங்க ஆசை தான் ஆன அருசுவை சர்வர் சுலோவா அல்லது நெட் சுலோவா தெரியலைங்க. எப்பலாம் ஒபன் ஆகுதோ அப்பலாம் ஜாயின் பண்ணிக்கிறேன். கண்டிப்பா என்னையையும் சேர்த்துப்பீங்க நினைக்கிறேன்.
எனக்கும் அரட்டை அரங்கத்துல ஜாயின் பண்ணதாங்க ஆசை தான் ஆன அருசுவை சர்வர் சுலோவா அல்லது நெட் சுலோவா தெரியலைங்க. எப்பலாம் ஒபன் ஆகுதோ அப்பலாம் ஜாயின் பண்ணிக்கிறேன். கண்டிப்பா என்னையையும் சேர்த்துப்பீங்க நினைக்கிறேன். thanks
எப்படி இருக்கீங்க.எனக்கும் இந்த சைட் ரெம்ப ஸ்லோவா தான் இருக்கு. நீங்க எனக்கு பதில் தந்ததுக்கு ரெம்ப நன்றி.எனக்கும் அரட்டை அடிக்கிரது ரெம்பவே இஷ்டம் தான்.நாங்க கலிஃபோர்னியாவுல இருக்கிரோம்.கன்டிப்பா அரட்டை அடிக்கலாம்
ஹாய் நான் அருசுவைல் புதிதாக இணைந்து உள்ளன். நானும் அரட்டை அரங்கத்தில் உங்களுடன் ஜாய்ன் பண்ணலாமா?
அன்புடன் ஷராபூபதி.
ஹாய் லதாகணேஷ், செல்வின்
நானும் நாகர்கோவில் தான். இப்ப ஆஸ்திரேலியாவில் இருக்கிரேன்..
அன்புடன் ஷராபுபதி
எப்படி இருக்கீங்க?கன்டிப்பா அரட்டை அடிக்கலாம்.நீங்க புதியதா சமையல் கத்துகிட்டு இருக்கீரிங்களா?சமையல் ஒரு கலை ஈசியா கத்துகிடலாம்.
ஆஸ்ரேலியா எப்படி இருக்கு சுத்திப்பார்த்தீங்களா? இடமெல்லாம் பிடிச்சியிருக்கா?அங்க நம்ம ஊர் பொருளெல்லாம் கிடைக்குதா?
ஹாய் லதா,செல்வின்,ஷரா எல்லாரும் எப்படி இருக்கறீங்க? லதா நாங்களும் தெக்கூர்தான். செல்வின் நீங்க வள்ளியூரா? ஷரா நீங்களும் நாகர்கோவில்தானா? நாகர்கோவிலில் எங்கே?ஆஸ்திரேலியா வாழ்க்கை எப்படி இருக்கிறது?பிடிச்சிருக்கா? அரட்டை அடிக்க நாகர்கோவில் தோழிகள் மட்டும் இல்லை எல்லாருமே இங்கெ வரலாம்.யாரையுமே காணோம்? :-(
எல்லாருக்கும் நேரம் வித்தியாசம இருக்கும் அதனால தான் யாரயும் கானல.
ஜலீலா மேடம் என்ன பிறந்தநாள் எப்படி கொண்டாடினீங்க?வந்து கொஞ்சம் சொல்லிட்டு போங்க. ஜெயந்தி மாமி ஊருக்கு போயாச்சா? புதுமண தம்பதிகளுக்கு எனது வாழ்த்துக்கள். பிரதீபா நீ எங்க போய்ட்ட ஆளயே காணும். வேலை ஜாஸ்தியா இருக்கா பிஸியா இருக்கியா? ரஜினி மேடம் என்ன இரண்டு குட்டிஸோடயும் விளையாடவே சரியா இருக்கா அறுசுவை பக்கமே வரதில்ல. மேனகா எப்படி இருக்கீங்க உங்க பாப்பா என்ன சொல்றாங்க? எப்ப வெளியில வராங்களாம். நல்லா உடம்ப பாத்துக்கோங்க. மாலதி மேடம் எப்படி இருக்கீங்க? மர்ழி நல்லா ரெஸ்டு எடுத்துக்கோங்க. நல்லபடிய குழந்தை பிறந்த அப்பறம் வாங்க உங்க ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்க. ஹாசினி எப்படி இருக்கீங்க? ஹர்சினி எப்படி இருக்கா? கவிசிவா நல்லா கதைய டெவலப் பண்ணிட்டீங்க போங்க சூப்பர் நல்லா இருந்துச்சு. லதாகணேஷ் நல்லா இருக்கீங்களா? நிறைய நாகர்கோவில் ஆளுங்களா இருக்காங்களா அறுசுவையில நிறைய ப்ரண்ட்ஸ் கிடைச்சா? செல்வின் நலமா? எங்க இருக்கீங்க நீங்க? சாரா எப்படி இருக்கீங்க? ஆஸ்திரேலியா எப்படி இருக்கு? எவ்வளவு நாளா அங்க இருக்கீங்க?
ஹாய் செல்வின்,கவிசிவா,ஹரிகாயத்ரி
நன்றாக இருக்கிரேன். நீங்க எப்படி இருக்கிறீன்க? உங்ககிட்ட பேசுரதில் ரொம்ப சந்தோசம்.. இப்பதான் அருசுவை பார்த்து சமையல் கத்துகிரென்...... சிக்கிரமாக நானும் புது ரெசிபி கொடுபென் நினைக்கிரென்.... ஆஸ்ரேலியா ரொம்ப நல்லா இருக்குது. இங்க வந்து ஒரு 7 மாதம் இருக்கும்.. இங்க இன்டியன் க்ரொசெரி இருக்குது....அதனால ப்ராப்லெம் இல்லை...
ஹாய் ஹரிகாயத்ரி எப்படி இருக்கீங்க?சென்னையில் மழை கொட்டுதா? குருவியும் அனுவும் தானே கதையை ஆரம்பித்தார்கள்.நான் தொடர்ந்தேன்.உங்கள் பாராட்டை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.தேங்க்ஸ் ஷரா உங்களோட பேசரதில் எனக்கும் சந்தோஷம்.ஆஸ்திரேலியாவில் பிரென்ட்ஸ் இருக்கறாங்களா?நாகர்கோவிலில் நீங்க எந்தபக்கம்னு தெரிஞ்சுக்கலாமா?
ஹாய் ஹரிகாயத்திரி வணக்கம்.... எப்படி இருக்கீங்க....அறுசுவையின் முதல் அன்புதோழி நீங்கதானே...
அன்புடன் குருவி
ஹாய் கவிசிவா வணக்கம்.... எப்படி இருக்கீங்க....அறுசுவையின் அன்புதோழியான உங்களபாராட்டுவதில் தப்பில்லையே....பாராட்டு மழையில் நனைந்தீர்களா?...சளி பிடிக்காம பார்த்துகொள்ளுங்கள்...சும்மா ஜாலிக்கு.... வேரு கணக்கு ஏதும் சொல்லுங்கப்பா... அன்புடன் குருவி
ஹாய் பிரண்ஸ் வணக்கம்.... எல்லாரும் எப்படி இருக்கீங்க....அறுசுவையில் அரட்டை அரங்கம் சும்மா நலம்விசாரிப்பதிலேயே போய்கிட்டு இருக்கிரது... ஏதாவது ஜாலியா அரட்டையா எழுதி கலக்குங்கப்பா... அன்புடன் குருவி.
anybody knows how to cook kabsa...
ஹாய் சகோஸ்[இந்த ஹேமா பொண்ணு எங்க ரொம்ப நாளா காணோம்.அவங்கதான் சகோதரிகள் ங்கறத சகோஸ்னு எழுதுவாங்க :-( ] அரட்டை ரொம்ப போராதான் போய்கிட்டு இருக்கு.அறுசுவை கொஞ்சம் ஸ்லோவா இருக்கறதும் காரணமா இருக்கலாம். சரி நாம் சமையலில் சொதப்பி வழிந்ததை பகிர்ந்துகொள்வோமா?நானே ஆரம்பிக்கிறேனே. எனக்கு சிறு வயதிலேயே சமைப்பதில் ஆர்வம்.ஒரே ஒரு பிரச்சினை நான் சமைக்கும் போது யாரும் கிச்சனுக்குள் நுழையவே கூடாது.ஒரு நாள் கேசரி செய்கிறேன் என்று அம்மாவிடம் அளவு கேட்டு விட்டு(செய்முறையெல்லாம் யாருக்கு வேணும் எல்லாம் தெரியும்னு நினைப்பு வேற என் மனசுல), யாரும் கிச்சனுக்குள் வரக்கூடாதுன்னு ஆர்டரும் போட்டுட்டு செய்ய ஆரம்பித்தேன்.முதலில் ரவையை வறுத்து எடுத்து வைத்து விட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்தேன்.தண்ணீர் கொதித்ததும் ரவை சர்க்கரை நெய் எல்லாம் ஒன்றாக கொட்டி கிளறினேன்.தண்ணீர் வற்றிவிட்டது ஆனால் ரவை வேகவே இல்லை.மீன்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்தேன்.இப்படி 2 முறை தண்ணீர் விட்டு தண்ணீர் வற்றியது ஆனால் ரவை வேக மாட்டேன் என்றது.அம்மாவிடம் போய் என்ன ரவைம்மா வாங்கி வச்சுரிக்கீங்க.நீங்க சொன்ன அளவுக்கு டபுளா தண்ணீர் ஊற்றியாச்சு ஆனா ரவை வேகவே மாட்டேங்குது அப்படீன்னேன்.நீ எப்படி செய்தேன்னு சொல்லுன்னாங்க.எனக்குதான் யாரும் கிச்சனுக்குள் வருவதே பிடிக்காது இதில் நான் எப்படி செய்தேன்னு வேற கேக்கறாங்களேன்னு கோபம்.கோபத்திலேயே எல்லாம் நீங்க செய்யற மாதிரிதான் செய்தேன்னு சொன்னேன்.அம்மா பொறுமையாக சிரிப்புடன் ரவையை முதலில் கொதிக்கற தண்ணில போட்டு வெந்ததுக்கு அப்புறமாதானே சர்க்கரை பொட்டென்னாங்க.அப்போதான் எனக்கு புரிந்தது தப்பு ரவையில் இல்லை நம்ம செய்த குளறுபடிதான்னு.கோபம் போய் அம்மாவிடம் வழிஞ்சுகிட்டே இல்லம்மா ரென்டையுமே சேர்த்து கொட்டினேன்னு சொன்னேன்.அப்புறமென்ன நான் செய்த கேசரி குப்பைக்கும் பின் அம்மா செய்தா நெய் தளதளக்கும் கேசரி எங்கள் வயிற்றுக்குள்ளும் சென்றது.அதன் பின் சூப்பராக கேசரி செய்ய கத்துக்கிட்டேன்னாலும் இப்பவும் கேசரி செய்யும்போது குப்பைக்கு போன கேசரிதான் நினைவுக்கு வரும்.
டியர் சீனி கப்சா ரைஸ் என்னுடைய குறிப்பிலும், தளிக்காவுடைய குறிப்பிலும் இருக்கு பாருங்கள். இல்லை சாதம் என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.
ஜலீலா
ஹாய் ப்ரண்ஸ் ,நான் பிரான்ஸ்ல இருக்கிரேன்... இங்க நடந்தது சொல்லுறேன்....ஓரு ப்ரண்டுக்கு குழந்தை பிறந்தத பார்க்க போனோம்... இங்க தான் யாரும் கிடையாதே...நம்ம மட்டும்தான ...அவங்கலுக்கும் யாரும் இல்லதனால குழந்தையும் அவங்க ஹஸ்ம் இருந்தாங்க... நாங்க போனசமயம் அவங்க ஹஸ் கடைக்கு போயிருந்தாங்க...அதனால அவங்க காஃபி போட போனாங்க...நான்னீங்க போய் குழந்தய பாருங்க... உங்கலுக்கும் சேர்த்து நான் காஃபி போட்டு எடுத்துட்டு வாரேன்னு சொல்லிட்டு நான் காஃபி போட்டேன்....அவங்க ஒரே மாதிரி பாட்டிலில் சீனி, உப்பு இரண்டையும் வைதிருந்ததுதான் காரணம்... சீனிக்கு பதிலா உப்பை போட்டு எடுட்துட்டு போய் முதல்ல அவங்கலுக்கு கொடுத்தா எப்பிடி இருக்கும்....ஹி ஹி ஹினு அசடு வலிந்துட்டு வீட்டுக்கு வந்தோம்...இன்னகிம் அவங்க சொல்லும் போது எனக்கு ஒருமாதிரி இருக்கும் அன்புடன் குருவி
ஹாய் நான் அரட்டை அடிக்கலாம் பகுதியில் புதிதாக இனைந்துள்ளேன் நானும் உங்கலுடன் அரட்டை அடிக்கலாமா ரேவதி
வாங்க ரேவதி வந்து ஜோரா கலந்துகிக்கிட்டு அரட்டையை கலக்குங்க
ஸ்னேகிதிகளே,அனைவரும் நலமா?புது வரவுகள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வரவேற்பு உரித்தாகட்டும்.சகோதரிகள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து,இனிய விசாரிப்புகளை பறிமாரிக்கொண்டிருந்த பாந்தம் அறு சுவையில் காணாமல் போய்விட்டதே?முகப்பில் புதிய சமையல் குறிப்பு பல நாட்களாக வராமல் உள்ளதே? ஸாதிகா
Hello Shadikaa aunty
how are u, how is AMIR. Convey my special regards to Marliya. Then how is J mami, adhiraa, thalika, jaleela akka, and all. I could not come to arusuvai regularly. Whenever i get time, i will chat u. So keep my name in ur mind.
Take care all Bye Shardha