topic_image


எனக்கு சைனஸ் பிரச்சனை முகம் எல்லாம் வலிக்கிறது. வலி போக வழில்லுங்கள் தோழிகளே.


செப்டம்பர் 14, 2008 - 9:11am - வழங்கியவர் vijaya51

ஹை,
தண்ணீரில் உப்பு{கல்} போட்டு கொதிக்கவிட்டு பெட்ஷீட் போட்டு மூடி ஆவி பிடித்து பாருங்கள். நான் அதுதான் செய்வேன்

விஜயா
செப்டம்பர் 14, 2008 - 9:23am - வழங்கியவர் thalika

விஜயா சொல்வது நல்ல மருந்து கல் உப்பு இல்லாட்டால் மஞ்சல் தூள் போட்டு ஆவி பிடிங்க .குருமிளகு தூள் மஞ்சள் கலந்த பாலை இரவு தினம் சூடாக குடிச்சுட்டு படுங்க...நல்ல பலன் கிடைக்கும்.இந்தியாவில் நீங்க இருந்தா வீட்டை சுத்தி இருக்கும் பார்த்தீனியம் செடிகளை எரிச்சு நீக்கிடுங்க அது கூட காரணமா இருக்கலாம்

சைனஸ் பிரச்னை
செப்டம்பர் 14, 2008 - 12:19pm - வழங்கியவர் Vijitvm

நல்ல தலை குளிததபிறகு தலையை நன்றாக காய விட வேண்டும், குளிரி பானங்கள் கொஞ்சம் அவாய்ட் பண்னுங்க கிரை வகைகள் எல்லாம் பார்த்து சாப்பிடுங்க மெயின் ஸ்வெட் ஆகவிடாமல் பார்த்துங்க. அலர்ஜி எதாவது இருக்கா என்று செக் செய்யுங்க. ஹோமியோ, ஆயூர்வேததில் நேச்சுரல் மருந்து வகைகள் இருக்கு ட்ரை செய்யுங்க.

நன்றி, நன்றி,நன்றி
செப்டம்பர் 17, 2008 - 6:52am - வழங்கியவர் umadhayalan

தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும்.விருந்தினர் வருகையால் சிஸ்டத்தை பார்க்கவில்லை.விஜயா,தளிகா,விஜி நீங்கள் தான் என்னுடன் பேசிய முதல் தோழிகள் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்கிறேன்.இந்தியாவில் தான் இருக்கிறேன். எங்கள் வீட்டில் தோட்டம் இல்ல.உங்களின் பதிலுக்கு நன்றி.
உமா.

சைனஸ்
செப்டம்பர் 17, 2008 - 7:01am - வழங்கியவர் Jaleela Banu

சைனஸ் நான் சொல்ல வந்ததை மேலே உள்ள தோழிகள் சொல்லிவிட்டார்கள்.
விஜி சொல்வது போல் முதலில் தலைக்கு குளித்தால் உடனே இரண்டு மூன்று மல் டவல் வைத்து கட்டி நல்ல துடைக்கனும்.
முடிந்தால் ஹேர் டிரையர் வாங்கி வைத்து கொல்லுங்கள்.
ஈரத்தோடு இருந்தால் குனிந்தால் நிமிர்ந்தால் முகமெல்லாம் ரொம்ப வலிக்கும்,
ஈரத் தலையோடு படுக்க கூடாது.

இஞ்சி சாறு எடுத்து தலையில் தேய்க்கலாம், உடனடினிவாரணம் ஆவி பிடிப்பது தான்.

சின்ன சின்ன சத்தங்கள் கூட எரிச்சலை உண்டாக்கும். என்ன செய்வஹ்டு காதில் பஞ்சை வைத்து கொள்ளுங்கள்.
எல்லாம் அனுபவம் தான்

ஜலீலா

ஹாய் ஜலீலா
செப்டம்பர் 17, 2008 - 11:45am - வழங்கியவர் umadhayalan

வணக்கம். நீங்கள் சொல்வ்து மிகவும் சரி.கோபம்,எரிச்சல் எல்லாம் உண்டு நீங்கள் சொல்வ்து போல் இன்றேசெய்து பார்கிறேன்.உங்கள் பதிலுக்கு மிக நன்றி ஜலிலா உமா