topic_image


hai friends,

enaku innum one monthla marriage agap poguthu

enaku santhosham oru pakam irunthalum payam innoru pakam iruku.

eppadi antha payatha explain panrathunney theriyalanga

en hubby ku amma, appa illa. avar matum than

avar oru software engineer

nan bank la work panren

enga veetula niraya peru. anga avar veetula avar matumthan

atha ninaichaley enaku payam athigamaguthunga. enga ammakita itha pathi pesina sirikiranga . athellam onnum nadakathu , payapadatha appadinu solranga.

marriage life pathi unga anubavangala solli enaku konjam courage kodunga please


ஹாய் ரூபி
செப்டம்பர் 5, 2008 - 8:11am - வழங்கியவர் kavi.s

ஹாய் ரூபி
முதலில் வாழ்த்துக்கள், பயப்பட தேவையேயில்லை முதலில் பயமாகதான் இருக்கும் போக போக சரியாகிவிடும், நீங்க பயப்படுவது புது கல்யாண வாழ்க்கைகா இல்ல தனியாருப்பதற்கா, எதுவாக இருந்தாலும் முன்ன சொன்ன மாதிரி பயம் வேண்டாம், நம்ம அப்பா அம்மாவிற்கு தெரியாததா சின்ன வயதிலிரிந்து நமக்கு நன்மையானதே செய்வார்கள் பயம் வேண்டாம் எல்லாம் நல்லாபடியா நடக்கும். அருசுவை மன்றத்தில் எங்கேயோ இதை பற்றி படித்ததாக ஞாபகம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பழைய பதிவுகளை படித்து பாருங்க, ஏதோ எனக்கு தெரிந்ததை சொன்னேன் அனுபசாலிகள் இங்க நிறைய பேர் இருக்கிறார்கள் இனி அவர்கள் வந்து சொல்வார்கள் என்று நினைக்கிறேன், மீண்டும் என்னுடைய வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள் ரூபி
செப்டம்பர் 5, 2008 - 10:49am - வழங்கியவர் deepaarunkumar

மணப்பெண்ணாக ஆக இருக்கும் ரூபிக்கு எனது வாழ்த்துகள். ரூபி முதலில் ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்ககூடிய பயம் தான் இது. பயப்படத்தேவையில்லை
போக போக சரியாகிவிடும். வரயிருக்கும் கணவரின் அன்பினால் கவலைகள் சீக்கிரமே சரியாகிவிடும். நீங்க உங்க wouldbe யை பார்த்து பயப்படறது அவங்களுக்கு தெரியுமா? உங்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்க எனது வாழ்த்துக்கள்.

நானும்
செப்டம்பர் 5, 2008 - 2:14pm - வழங்கியவர் santho

நானும் உங்கள மாதிரி தான் ரொம்ப பயந்தேன்,வர வர இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும் பயப்படுறாங்க..அப்டீன்னு எங்கம்மா என்ன சொன்னங்க அத இப்போ உங்களுக்கு நான் சொல்றேன். ரூபி உங்க பயத்த போக்க எங்கம்மா எனக்கு சொன்னத உங்களுக்கு சொல்றேன்..பிடிச்சிருந்தால் எடுத்துக்கங்க இல்ல விட்டுவிடுங்க..முதல்ல யாரும் இல்லன்னு நினைக்கிறத விட்டுட்டு அவருக்கு நீங்க உங்களுக்கு அவருன்னு நினைங்க..எல்லாத்தயும் போட்டு மனச கஷ்டபடுத்திக்காதீங்க..எல்லோருக
்கும் திருமணத்திற்கு முன்,பின் என்ற 2 வாழ்க்கை இருக்கு..அந்த நேரத்தில கொஞ்சம் மாறுவதற்கு கஷ்டமாதான் இருக்கும்..so எப்பிடி நாம சந்தோசமா இருக்கனும்னு மட்டும் தான் யோசிக்கனும்.weddingkku என்ன மேக்கப் பண்ணலாம், யாருக்கு இன்விடேசன் தரணும், இன்னும் என்ன செய்யனும்? திருமணத்திற்குபின் அவருக்கு சமயல்ல என்ன பிடிக்கும்? இப்பிடி பார்த்து பார்த்து பண்ண் நிறைய இருக்கு,இந்த மாதிரி சின்ன சின்ன செய்கைல மனச திருப்புங்க..எல்லாத்துக்கும் மேல அம்மா அப்பா நம்ம மேல வைக்கும் நம்பிக்கைய கணவர் மேலயும் வைங்க அவர் என்னை நல்ல பார்த்துப்பார்ன்னு, இன்னும் ஒன்னு முதல்ல நீங்க பொறந்தது உங்க அப்பாக்கும்,அம்மாக்கும் இப்போ நீங்க மறுமடி பொறக்க போறீங்க அது உங்க வருங்கால கணவருக்காக,பொறந்ததும் நமக்கு எதும் தெரியது,எல்லாமே parents சொல்லிதந்தா மாதிரி கணவரும் சொல்லி தருவாரு, பயபடாமல் திருமணத்திற்கு தயாராகுங்கள்..வாழ்த்துக்கள்

என்னங்க ரூபி
செப்டம்பர் 5, 2008 - 6:20pm - வழங்கியவர் thalika

ஸ்ஸ்ஸ் என்னங்க ரூபி இது இந்த காலத்துல உசுரோட இருக்கற மாமனார் மாமியாரை கூட அனுப்பிட்டு தனியா இருக்கலாம்னு நெனைக்கர பொன்னுஙளுக்கு மத்தியில் இப்படி ஒரு பொண்ணா சே நெனைக்கவே புல்லரிக்குது போங்க.
இப்ப இந்த பேய் பிசாசுன்னு யோசிக்காதீங்க.உங்களுக்குன்னு விருப்பம்னு எதுவாவது இருக்கும்ல அதை அப்ப இன்னும் கொஞ்சம் வளத்துக்கலாம்.கல்யாணம் ஆன புதுசுல தனியா கிடைக்கும் முதல் கொஞ்ச வருஷ வாழ்க்கை ரொம்ப சுகமா இருக்கும் தெரியுமா ரூபி.அவருக்காக தனியா நீங்க காத்திருக்கரதும் உங்களுக்காக அவர் எதுவாவது கொண்டு வருவதும் ரொம்ப நல்லா இருக்கும் தெரியுமா..கூட்டுக் குடும்பத்தில் கூட அது நடக்காது..காலப்போக்கில் நமக்கு நாலு பேர் நம்முடம் இருந்தா நல்லா இருக்கும்னு தோனலாம் ஆனால் திருமனமான புதிதில் நான் நினைக்கிறேன் தனியா இருப்பது கொஞ்சம் நல்லா இருக்கும்.
அவருக்கு புடிச்சதா வெக்கமில்லாம செய்து கொடுக்கலாம் பாருங்க..கோட நாலு பேர்னா அவங்க என்ன நெனைப்பாங்களோ என்னடா இவ இப்பவே ரொம்ப பன்னிகிராம்பாங்களோன்னு பயந்து நாமளும் ஒதுங்க இந்த பொண்ணு நம்மை கவனிப்பதே இல்லைன்னு அவரும் நினைக்க வாஇப்பே இருக்காதில்லையா.
எல்லாம் நல்லா இருக்கும் பாருங்க..சரி இத்தனை பேசினேனே கல்யாணத்துக்கு கூப்பிடுங்க வறேன்.

தளிகா!!
செப்டம்பர் 5, 2008 - 6:35pm - வழங்கியவர் இலா

தளிகா!! என்ன பேய் பிசாசுன்னு
பாவம் பொண்ணு பயந்துற போறாங்க... இவங்க நம்ம பிரிவோம் சந்திப்போம் கதாநாயகி மாதிரி கூட்டு குடும்பத்துக்கு ஆசை படுறாங்களா???!!!

கல்யாணம் ஆகப்போற ரூபி!!!
Take it easy!!! Just Dream about the days to come!!
one word of advise.. although thalika called me idea alamu. As much as poosible try to involve him with your parents/family . you will be the bond between him and your family.

Let us know the date!!! we will be sending our wishes your way!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

hai Kavi Madam, romba romba
செப்டம்பர் 6, 2008 - 6:39pm - வழங்கியவர் rooby

hai Kavi Madam,

romba romba thanksnga unga pathiluku. nanpayappaduvathu kalyanathuku appuram eppadi iruka poromnu than. athavathu UNMAYA SONNA nan 100 % loda loda case. athavathu niray pesuven. enakuniraya friends. avar veetula avar orutharthan. avara parthaley enaku thondayilernthu pechey vara matenguthu. ellarum enna romba kindal panranga. OOMAYA POYITENNU. yen enna parthaley payappadurenu avar romba akvalap padurar. nan marriageku appuramum velaiku poven. thaniya irupathuku ellam problemey ilanga. kalyana life than konjam payama iruku. avar en mela romba pasama irukar. enakum avar mela romba asaithan. anal avara partha appadiye amaithi agiduren. yennuthan theriyala.
late replyku manikavum. yenna nan friends kooda purchase panna poyiten. marriage busythan madam.
enaku veetula niraya peru irunthathan enaku romba pudikum.pesikutu jollya irukalam. athukuthan. unga wishes ku romba thanksnga. enaku marriage ocotber 16thnga. mudinthal pathil podunga

Hai Deepa madam ( deepa
செப்டம்பர் 6, 2008 - 6:42pm - வழங்கியவர் rooby

Hai Deepa madam ( deepa arunkumar )
avar parthu payappaduyrathu avaruku nallavey theriyum. romba kavalap padurar. oru nal friends kooda restaurant ponom. enna pudikumnu kelvi ketar. pathil sollvey 15 mins mela agitu. ellarum enna romba kindal panitanga. yenna nan tape on panan mathiri pesuven ippa ennanna iva pesavey kasu ketpa polarukunu orey kindal. anal avar enaku ennanu pdukumnu enamma, akka, friends kita ketu therinjikitu ellam seyirar. anal avaruku enna pudikumnu ketkanumnu enaku romba asai. anal ketka than varthai vara matenguthu. THEVAR MAGAN REVATHI mathiri kathuthan varuthu. unga wishes ku romba nandringa . en marriage 17th october.

கல்யாண
செப்டம்பர் 6, 2008 - 6:43pm - வழங்கியவர் இலா

கல்யாண பெண்ணு ரூபி

இது தானா பிரச்சனை... ஒஹ்.. உங்கள போல நானும் ரொம்ப லொட லொட.. ஐடியா அலமு எல்லாம் தான்.. நீங்க நீங்களாவே இருங்க... அவருக்கு பழகிடும் உங்க நேச்சர்... அப்புறம் உங்களுக்காக அவரும் மாறிடுவார்.... இதுக்கெல்லாம் யாரவது கவலை படுவாங்களா அம்மிணி!!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

hai santho madam, unga
செப்டம்பர் 6, 2008 - 6:46pm - வழங்கியவர் rooby

hai santho madam,

unga varthaigaluku romba nandri. unga ellaroda varthaigalayum parthu yanai balam vanthathu pola iruku. ella purchase mudinjitu. invitations koduthu mudinjachu. innum new york la friends irukanga. avanga luku matum than koduka vendiyathu pakki. nan uk la iruken. anal marriage simple indiala koyila senjitu reception uk la vaikalamnu soli iruakr en hubby. en marriage 17th october. unga wishes ku romba nandri

hai thalika madam, nan loda
செப்டம்பர் 6, 2008 - 6:51pm - வழங்கியவர் rooby

hai thalika madam,

nan loda loda casenga. romba pesuven. en marriage 17th ocotober. kandippa vanga. unga varthaigalukum, vazhtukalakum romba thanksnga

hai ila madam, unga
செப்டம்பர் 6, 2008 - 6:59pm - வழங்கியவர் rooby

hai ila madam,
unga expression by helen keller superb nga. en marriage date17th ocotbernga. enaku kootu kudumbam than romba pudikum. niraya peru irunthal avangaluku pudicha mathiri samaikanum, veliya koopitu poganum. elarum sernthu tour poganumnu enaku asai. veetu velayila ellar koodavum sernthu jollya pesikitey seyanum. mamiyar, mamnar, nathanar, kozhunthanar ellar koodavum jollya pesanum. ippadi ellam niraya asainga. ippa ivara vita aley illa. athan payama iruku. avara parthaley pechey vara matenguthu. nanga rendu perum marriage ku appuram iruka pudhu veedu rendu perum sernthu vangalamnu avar idea pani irukar. innum one weekla poi veeta parka porom. ippa avar irukurathu chinna veedu athavathu oru hal oru room than. amma ennasolranganna ippothaiku intha vetulaye irunga. appurama enga rendu peroda ishtappadi design panni veedu katunganu solranga. ana ivar kalyanm pannavudan thannoda wife ( nanthanga ahhahahaha ) pudhu veetukuthan poganumnu solrar. parpom. unga vazhthukalukum unga varthaigalukum romba thanksga

பயப்படாதீங்க ரூபி!!!
செப்டம்பர் 7, 2008 - 5:27am - வழங்கியவர் Manohari

அன்பு ரூபி எப்படி இருக்கீங்க? இன்னும் ஒரு மாதத்தில் புது மணப் பெண்ணாகப் போகும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களின் பயத்தை போக்கும் விதமாக நமது சகோதரிகள் மிகவும் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள் அதனுடன் ஒருசில எனது ஆலோசனைகளையும் எழுதியுள்ளேன் அவைகளும் உங்களுக்கு பயன்பட்டால் மகிழ்வேன்.

திருமண நாளை எதிர் நோக்கியிருக்கும் பெரும்பாலான புது மணப் பெண்களுக்குமே நீங்க இப்பொழுது இருக்கும் மன நிலைய் தான் இருக்கும், ஆனாலும் புகுந்த வீட்டு புதிய சூழ்நிலைகளால் நமக்கு ஒரு தயக்கம் ஏற்படலாமே ஒழிய அதற்காக பயந்து ஒடுங்க வேண்டிய அவசியமில்லை என்று தான் கூறுவேன்.

பொதுவாக இல்லற வாழ்க்கையின் ஆரம்பம் இனிமையானதாக அமைய வேண்டும், அல்லது அமைத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடும் என்பதை நன்கு கருத்தில் கொள்ள வேண்டும்.

உங்கள் வருங்காலக் கணவர் பெற்றோரை இழந்தவர் என்பதால் உங்களுக்கு இயல்பாய் தற்போது இருக்கும் பயத்தை பற்றி கவலைப் படாமல் அதற்குபதில் அவருக்கு ஒரு நல்ல தாயாக, நல்ல தோழியாக இருக்கவும அவர் மீது உங்க அன்பையும் பாசத்தையும் பொழிய உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள்.ஏனென்றால் இந்த இரண்டு உறவுகளின் அன்பில் மட்டும் தான் எதிர்பார்ப்புகள் கலந்திராத தூய்மையான அன்பு கிடைக்கும்.

கூடப் பிறந்தவர்கள் யாரும் இல்லாத பட்சத்தில்,உங்களை விட்டால் அவருக்கு யாரும் இல்லை போன்ற மனோபாவம் ஏற்ப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.ஏனென்றால் இந்த குறுகிய கண்ணோட்டம் மிகப் பெரிய பிரச்சனையைக் கூட ஏற்படுத்திவிடும்.

ஒரே பிள்ளை என்பதால் எந்த விசயத்தையும் சுயமாகவே முடிவெடுத்துச் செய்ய பழக்கப்பட்டிருப்பார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். இதனால் பின்னாளில் எதற்கெடுத்தாலும் உங்களை கேட்டுத் தான் அவர் எதையும் செய்ய வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்போ அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையோ எழ வாய்ப்பேயிருக்காது.

மேலும் அவருக்கு அறிவுரைக் கூறுகின்றேன் போன்ற விஷப் பரிட்சையிலும் இறங்காதீர்கள்.அவராக வந்த ஆலோசனைக் கேட்டாலும் அதையும் அவர் வழியிலேயே விட்டுவிடுங்கள்,பிறகு பாருங்க நீங்க கூறியது தான் சட்டம்.

உங்களின் சொந்த காரியங்களுக்கெல்லாம் அவரை சார்ந்து இருக்காமல்,அவருக்கு நீங்க உற்ற துணையா இருக்க முயற்ச்சி செய்யுங்கள்.வேலைக்குப் போகும் பெண்கள் சுலபமாக இந்த யுத்தியைக் கையாளலாம்.

மிகவும் முக்கியமான ஒன்று ஆரம்பத்திலிருந்தே அவரது சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்க பழகிக் கொள்ளுங்கள் இதனால் போகப் போக உங்களிடத்தில் அவருக்கு நல்ல மரியாதையும் நம்பிக்கையும் ஏற்பட்டு பிறகுஎன்ன அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்......., பாட்டு தான்.என்னங்க ரூபி இப்போ கொஞ்சமாவது உங்க பயம் போயிருக்குமே!!! மேற்க்கொண்டு வேறு சந்தேகமோ பயமோ இருந்தாலும் கேட்கலாம் சரியா. நன்றி.

Hello Rooby, manohari aunty
செப்டம்பர் 7, 2008 - 3:15pm - வழங்கியவர் santho

enna rooby romba kolambi than irukkenga poola? muthalla Oct16th ippo Oct 17th?

Anyhow I am also in NewJersey only.. Enakku ellam invitation illaya?

Wishing you All the Best...

Manohari Aunty unga Vaarthaikal ellam enna romba pidichirukku...Neengal sonnathu ellam puthu pengalukkum than..

Avasarama kelambittu irukkean, so ipdi type pannittean..next time kandippa ungaloda Tamil la pesurean...

ஹாய் ரூபி
செப்டம்பர் 8, 2008 - 7:09am - வழங்கியவர் kavi.s

ஹாய் ரூபி
எப்படி இருக்கீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி இருக்கபோறோம்னு நீ ஏம்மா பயப்படணும் அவர்தான் பயப்படணும் நீங்க வேற நெறைய பேசுவேன்னு சொல்றீங்க(சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்) அவர பர்த்தாலெ பேச்சு வர மட்டேங்குது சொன்னீங்க நானும் அப்படி த்தான் இருந்தேன் என் வீட்டுக்காரர் கல்யாணத்துக்கு முன் ஒரெ ஒரு தரம்தான் போனில் என்கூட பேசினார்,அதுக்கப்பறம் எங்க போன் பன்னிடுவாரோன்னு நான் போன் வொயரையெல்லாம் எடுத்துவிட்ருக்கேன் அவர் வந்தா நான் வெளியக்கூட வர மாட்டேன் இத்தனைக்கும் என் வீட்டுக்காரர் எனக்கு சின்ன வதிலிருந்தே நல்லா தெரியும் ஆன இப்போ நிலைமை தலைகீழாக உள்ளது,இதையும் அதையும் போட்டு மனசை குழப்பிகொள்ளாமல் நல்லா சந்தோஷமா இருங்க கல்யாணத்துக்கு தேவையானதை நல்லா பர்ச்சேஷ் செய்ங்க
கல்யாணம் ஆன புதிதில் வரும் அந்த வெட்கம் சந்தோஷம் திரும்ப கிடைக்காது நல்லா என்ஞாய் பன்னுங்க
நீங்க கொஞ்சம் குழப்பதில் தான் இருக்கீங்க போல இருக்கு 16, 17னு மாத்தி மாத்தி போட்டிருக்கீங்க.

நான் மொழி வந்துருக்கேன்
செப்டம்பர் 8, 2008 - 10:11am - வழங்கியவர் mozhi

ஹாய்ய்ய்ய்ய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க?
முதலில் ரூபி உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்னோட சீனியரா நீங்க உங்கள் அக்டோபர் மேரேஜ்ஜா. எனக்கு அப்படி தான் ரொம்ப பயமா இருக்கு ஆனா இப்போ கொஞ்சம் பரவாயில்லை அவங்க வீட்ட்ல எல்லார்கிட்டயும் பேசி எல்லார் கிட்டயும் மிங்குல் ஆகிட்டேன். அறுசுவை ப்ரண்ட்ஸ் எல்லாரும் என்னை கிண்டல் பண்ணி எடுத்துட்டாங்க. நீங்க தப்பிச்சுட்டீங்க போங்க. இங்க இருக்கறவங்க அட்வைஸ் மட்டுமே போதும் நீங்க நல்லபடி வாழுவீங்க. எதுக்கும் கவலைப்படாதீங்க.

மனம் போல் மணவாழ்வு
செப்டம்பர் 8, 2008 - 10:32am - வழங்கியவர் shadiqah

ஹலோ...ரூபி ,கல்யாணப்பெண்ணே,திருமணம் வருகின்றது.ஜாலியாக இருப்பதை விட்டு விட்டு எதற்கு பயம்?கலர்கலர் கனவுகளுடன் திருமணத்தை வரவேற்க தயாராகுங்கள்.மனம் போல் மணவாழ்வு அமைந்து,மனமெல்லாம் சந்தோஷம் நிரம்ப எனது வாழ்த்துக்கள்

ஹாய் ரூபி & மொழி
செப்டம்பர் 8, 2008 - 1:19pm - வழங்கியவர் Thanisha

ரூபி பயம் எல்லாம் கலயாணம் வரைக்கும்தான். இது எல்லா பெண்ணுக்கும் இயல்புதான். அதன் பிறகு பாருங்கள். கணவர் நம் மீது செலுத்தும் அன்பு, நாம் அவர் மீது செலுத்தும் இப்படி அன்பு பரிமாற்றங்களில் நமக்கு எல்லாமே மறந்து போய்விடும்.

என்கேஜ் முடிந்தவுடன் இப்படித்தான் பயம் இருந்தது. அவர் என்னிடம் பேச ரொம்ப விரும்பினார்.அவர் எனக்கு மாமா பையன்தான். ஆனால் திருமணத்திற்கு முன்பு அவரிடம் பேசியது கிடையாது. 2 பேரும் ரிலேசன் என்பதால் நான் பெரியம்மா வீட்டில் இருந்தபோது வந்தார்(அவருக்கு அத்தை வீடு) அவரை கண்டதும் ஒரே ஓட்டம்தான். எல்லாரும் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க. முதல்முறை போனில் பேசும்போது உங்களை மாதிரி வெறும் காத்துதான் வந்தது. எங்கள் நிச்சியம் முடிந்து 1 வருடம் கழித்துதான் திருமணமானது. அந்த ஒரு வருடம் என்னவர் போனிற்கு செய்த செலவிற்கு அளவே கிடையாது. டெய்லி 3 மணிநேரம் பேசுவோம். அதனால் எனக்கு சுத்தமாக பயமெல்லாம் தெளிந்து விட்டது. . திருமணம் அன்று ரொம்ப ஜாலியா திருமணத்திற்கு வந்திருப்பவர்களைப் போல் இருந்தேன்.

நான் அம்மா, அப்பாவிற்கு செல்ல பெண். ஹனிமூன் போனப்பா எனக்கு என் பெற்றோரை தேடி ஒரே அழுகைதான். என்னவர் காட்டிய அன்பு போக..போக... எல்லாததையும் மாற்றி விட்டது. இதோ எல்லாரையும் விட்டு அபுதாபியில் இருக்கின்றேன். இன்று வரை அவர் அன்பில் மாற்றமில்லை. அதுபோல் உங்கள் பியன்ஸியின் அன்பி மழையில் நீங்களும் நனைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள் என நான் நம்புகிறேன். மனம் போல் மணவாழ்வு அமைந்து,நீடுடி வாழ எனது வாழ்த்துக்கள்.

மொழி பயமெல்லாம் போயி இப்போ தினமும் ட்ரீம்தான் இல்லையா. உங்க பியன்ஸியுடன் போனில் பேசுரீங்களா. பேசுங்க அது ஒரு வித்தியசமான அனுபவம். ஏனெனில் வாழ்க்கையில் அனுபவங்கள் திரும்பக் கிடைக்காது. இப்போ நாந்தா அவரை விட ரொம்ப பேசுரேன்.

சோ மொழி, ரூபி மேரேஜ் வரைக்கும் கனவை கண்டினியூ பண்ணுங்க.

hai mano madam, kavi madam,
செப்டம்பர் 8, 2008 - 2:40pm - வழங்கியவர் rooby

hai mano madam, kavi madam, mozhi madam, thanisha madam, Satnho Mdam,Shadiqah madam,

ellorukum en thanks. mothalla enna manichidunga.en marriage date 17th octobr; BACHELOR's PARTY 16th OCTOBER. thappa typepaniten.
really sorry. ungaloda advice padi ippo nan konjamm thayirama pesuren. athula avaruku romba santhosham. nethu enna jewellery shop azhaichitupoi oru ring present pannar. enakey shock. edukunnu ketten. nan ippathan konjampesuranam. santhosham thangalayam avaruku athukuthan oru chinna presentnu sonnar. enaku appo unga nyabamthan. ungalalthaney nan marinen. romba romba thanksga. veedu poi parhtom oru veedu pudichitu rendu perukum. atha adutha varam lawyer vachi register panna porom. ippo daily phone la pesurar. atleast oru 10 times avathu. munbu ellam cell yenda ring aguthunu irukum. payamthan. anal ippa eppa ring agumnu iruku. vetula porutkal vangirathulerntu atha enga adukalam grathu varaikum ennoda choice nu solitaru. athula avar disturb panna matennutaru. athanal ippo konjam nan busy. porutkal vangurathula. avaruku nan enna present pannalam solunga friends. enaku ennaney theriyala. orey kozhappama iruku. nan ketkamaey avar ring present pannrar. enaku ulukulla romba asai avaruku ethavathu present pannumnu. anal enanu theiryala. konjam advice panugnalen pls

அய்யடா!! இங்க பாருங்க்!!
செப்டம்பர் 8, 2008 - 3:01pm - வழங்கியவர் இலா

இவ்வளாவு நாளு "பேசா மடந்தையே" ந்னு பாடியவருக்கு அருசுவை தந்த பரிசு... ரூபி அம்மிணி இப்பதான் கேக்க நல்லா இருக்கு....

மொழி!!! உங்க செல்போன் கம்பெனில கம்பிளெயின்ட் பண்ணுறாங்க!! திருவாரூர் ஏரியால எப்பவும் பிஸின்ன வருதாம் எல்லாருக்கு...

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

ஹ ஹா..ரூபி!
செப்டம்பர் 8, 2008 - 4:01pm - வழங்கியவர் கவின்

ஹ ஹா..ரூபி,

உங்கள் பதிவை படிச்சு ஒரே சிரிப்பு. கலக்குங்க...
Shirt or Watch is good choice to present. Like you, he will like ur present very much even if it is a very very small present.

செப்டம்பர் 10, 2008 - 10:55am - வழங்கியவர் rooby

எல்லோருகும் வனக்கம்
எல்லாரும் எப்படி இருக்கீங்க
நான் இப்போ தமிழ் ல எழுதுரேன்
உங்க அட்வைஸ் படி நான் என்னவருக்கு watch + shirt வாங்கி இருக்கேன் ஆனால் எப்பொ தருவது என்று தெரியவில்லை. ஒரு ஐடியா சொல்லுங்களேன்

கல்யாணப் பொண்ணு
செப்டம்பர் 10, 2008 - 11:18am - வழங்கியவர் T S JAYANTHI

ரூபி வாழ்த்துக்கள். தமிழில் எழுத ஆரம்பிச்சுட்டீங்க. என்னால் உங்களுடைய மற்ற ஆங்கிலப் பதிவுகளைப் படிக்க முடியவில்லை. ரொம்ப பொடி எழுத்தாக இருப்பதால். உங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். தமிழில் எழுதுவதைத் தொடருங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

அன்புள்ள
செப்டம்பர் 10, 2008 - 1:04pm - வழங்கியவர் rooby

அன்புள்ள ஜயந்தி மாமி அவர்களுக்கு
நீங்க போன பதிவில் ENGLISH பதிபை படிக்க மாட்டேன் என்று எழுதி இருந்தீர்கள்
அதற்கு பயந்து இப்போ TAMIL La எழுதுறேன்

என்னை உங்க பொன்னா நினைது எனக்கு கல்யான வாழ்க்கை எப்படி எதிர்கொள்ள வேன்டும் என்று உங்கலோட அரிவுரைகள் எனக்கு வேனும் PLS

ஹலோ ரூபி
செப்டம்பர் 10, 2008 - 1:46pm - வழங்கியவர் santho

இப்போதான் உங்க பதிவை பார்த்தேன், எனக்கும் சிரிப்பு தான் வருது சந்தோசத்தில..உங்க வருங்கால கணவர் மோதிரம் வாங்கி தந்து கலக்றாங்க..நீங்க வாட்ச், டிரஸ்னு கலக்றீங்க எல்லாத்துக்கும் மேல தமிழில் டைப் பண்ணி கலக்றீங்க.. நல்லா கலக்குங்க..All the Best..