topic_image


ஹைய்யா...ஜாலி...அரட்டை அடிக்கலாம் 13 வது பாகம் நிரம்பி தளும்புகின்றது.யாராவது கவனிக்கவில்லையா?105 பதிவுகளுக்கு மேல் போய் விட்டதே?இனி பாகம் 14 க்கு அனைத்து ஸ்னேகிதிகளும் வரும் படி அன்புடன் அழைக்கின்றேன்.அரட்டையை சந்தோஷமா தொடருவோம்.
அன்புடன் ஸாதிகா


ஸ்னேகிதிகளே
செப்டம்பர் 6, 2008 - 9:18am - வழங்கியவர் shadiqah

என்னை விசாரித்த அன்பு நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்.விஜி நான் நல்ல சுகமே.ஹரிகாயத்ரி,கீழே உள்ள உங்கள் பதிவை மட்டும் முதலில் படித்து விட்டு அட நம்ம காயத்ரி நம்மை விட்டுவிட்டார்களே என நினைத்தேன்.பிறகு அதற்கு முந்தைய பதிவை படித்ததும்தான் புரிந்தது.பேரன் நலமாக உள்ளார்.மகளும் நலமே.
மணிசாரா,நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?நலமா?
காயத்ரி,வாருங்கள்.நோன்பு காலங்களில் எங்கள் வீட்டில் 30 நாட்களும் தடபுடல் தான்.மர்றவர்களுக்கு என் சமையலை தந்து மகிழ்வதில் எனக்கு மிகவும் பிடிக்கும்.சுற்றிலும் ஹிந்து,கிஸ்த்துவ நண்பிகள்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீட்டினருக்கும் அளித்து மகிழ்வோம்.
ஸாதிகா

சாதிகா மேடம்
செப்டம்பர் 6, 2008 - 9:36am - வழங்கியவர் harigayathri

ஹாய் சாதிகா மேடம் உங்கள் விட்டுட்டு நான் எப்படி ஒரு த்ரெட் போடுவேன். நிச்சயம் வர முயற்சிக்கிறேன். ஆமாம் மேடம் எங்கள் வீட்டு அருகிலும் சில முஸ்லிம் தோழிகள் இருக்கிறார்கள் அவர்களும் கொண்டு வந்து தருவார்கள். அப்போது செய்யும் அந்த நோன்பு கஞ்சியே தனி சுவை தான்.

gayathri
செப்டம்பர் 6, 2008 - 9:42am - வழங்கியவர் shadiqah

எங்கு வசிக்கின்றீர்கள்?அவசரமாக நல்லி கிளம்பிக்கொண்டுள்ளேன்.வந்து பதிவுகளி பார்கின்றேன்
ஸாதிகா

ஹாய் காயத்ரி
செப்டம்பர் 6, 2008 - 10:57am - வழங்கியவர் deepaarunkumar

ஹாய் காயத்ரி நான் நல்லா இருக்கிறேன் நீங்க நலமா? அப்பா எப்படி எல்லைரையும் நியாபகம் வைத்திருந்து சரியா கேட்டு எழுதி இருக்கீங்க. ப்ரண்ஷிப்பை ரினிவல் செய்தாச்சா? ரொம்ப நன்றி என்னையும் நியாபகம் வைத்திருந்து கேட்டதற்கு.

நன்றி ஷாதிகா ஆன்டி!!!
செப்டம்பர் 6, 2008 - 11:43am - வழங்கியவர் இலா

இன்னும் ஒரு பெரிய உதவி செய்ய முடியுமா?? மர்லி வீடுவரை போயி ரெண்டு அடி போட்டுவிட்டு பிசியையும் தூக்கிவர முடியுமா??

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

ஹாய் ஹரிகாயத்ரி!! இக்கட ச்சூடு!!!
செப்டம்பர் 6, 2008 - 11:53am - வழங்கியவர் இலா

போன அரட்டை த்ரெட்ல விசாரிச்சு இருந்தீங்க!! இப்பதான் பார்த்தேன்... நான் நலமே!!! நீங்க எப்படி இருகீங்க.. வீட்டில எல்லாரும் நலமா?? எனக்கு சில motivational வார்த்தைகள் பிடிக்கும்... என் மன நிலைக்கு ஏற்ப போட்டுக்குவேன். Untill i find a new one to suit my mood.

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

ஆன்டி!!! என்ன சமையல் இன்னைக்கு...
செப்டம்பர் 6, 2008 - 12:55pm - வழங்கியவர் இலா

ஆன்டி!!! என்ன சமையல் இன்னைக்கு...
எல்லாம் செய்து எனக்கு காலையிலே பசிக்குது.. எதாவது சீரியல்/ஓட்ஸ் தான் சாப்பிடனும்...உங்க வீட்டுக்கு பக்கது வீடு காலியா ஒரு மாசத்துக்கு... டெயிலி உங்க வீட்டில எஞ்சாய் பண்ணலாம்..

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

ஹாய் எல்லோருக்கும்
செப்டம்பர் 6, 2008 - 1:09pm - வழங்கியவர் kavi.s

ஹாய் எல்லோருக்கும்

எல்லோரும் எப்படி இருக்கீங்க
பழைய வரவுகள் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள்,புது வரவுகள் உங்களை வரவேற்கிறோம்(எத்தனை நாளைக்குத்தான் புது வரவுகளை வரவேற்கிறோம்னு சொல்றது அதுதான் வித்தியாசமா!!)

ஸாதிகா மேடம் எப்படி இருக்கீங்க பழைய ஆட்கள் வந்தவுடனேதான் எட்டி பார்க்கிறீங்க, நல்லீல போய் என்ன அள்ளி வந்திருக்கிறீங்க(ஹய் எதுகை மோனையெல்லாம் வருது).

ஹாய் காயத்ரி
எப்படி இருக்கீங்க
உங்களுக்கு கல்யாணமாயிடுச்சா? தப்பா நினைச்சுக்காதீங்க உங்கள பத்தி எனக்கு தெரியாது அதான் கேட்டேன்.

ஹாய் பிரதீபா எப்படி இருக்கிங்க எங்க ஆளையே காணோம் .
ஹாசினி எப்படி இருக்கீங்க ஹர்ஷினி எப்படி இருக்காங்க.

தனீ எப்படி இருகீங்க அfரா எப்படி இருக்காங்க
மர்லி எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் கழிச்சு வந்து பதிவு போட்டுருக்றீங்க உடம்ப பார்த்துக்கோங்க தேவையில்லாத டென்ஷன் எடுத்துக்காதிங்க ப்ளீஷ் மரியத்தை கேட்டேனு சொல்லுங்க.

நாகர்கோயில் ராணிகள் கவிசிவா, லதாகணேஷ், செல்வின்,ஷராபூபதி எல்லாரும் எப்படி இருக்கீங்க.

குருவி எப்படி இருக்கீங்க என்ன பறந்து போய்டீங்களா ஆளையே காணோம்.

ஹாய் ரேவதி எப்படி இருக்கீங்க.

அம்பிகாதேவி எப்படி இருக்கீங்க.

ஆண்டாள் பிறந்தநாள் கொண்டாட்டமெல்லாம் பலமா?

தளிக்கா எப்படி இருக்கீங்க நான் ஏற்கனவே உங்க கூட பேசிருக்கேன் ஞாபகம் இருக்கா?

ஹாய் சுகன்யா எப்படி இருக்கீங்க

தமிழ் எப்படி இருக்கீங்க

ஹாய் இலா உங்க கூட முதல் முறையா பேசுறேன்

ஜலீலா மேடம் எப்படி இருக்கீங்க

ஹாய் மணிமேகலை எப்படி இருக்கீங்க

ஜெயலஷ்மி எப்படி இருக்கீங்க

ஜெயந்தி மாமி எப்படி இருக்கீன்க கல்யாண்மெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா
எனக்கு தெரிஞ்சவரை எல்லரையும் விசாரிச்சுட்டேன்னு நினைக்கிறேன் யாரையாவது விட்டிருந்தா அவர்களுக்கும் ஒரு ஹாய்.

இலா காப்பாற்ற ஒடி வருவீர்களா?
செப்டம்பர் 6, 2008 - 4:15pm - வழங்கியவர் shadiqah

இலா ,மர்ழி பாவம்.பிள்ளை தாய்ச்சிப் பெண்.ரம்ஜான் பெரு நாள் கழித்து அவரது வீட்டிற்கு போக உள்ளேன்.பிஸியை தூக்கிக்கொண்டு வரவா?
அவ்வளவுதான்.மர்ழி,உருட்டுக் கட்டை எடுத்துக்கொண்டு வருவார்.காப்பாற்ற ஓடி வந்து விடுவீர்களா?
ஸாதிகா

கவி.எஸ்
செப்டம்பர் 6, 2008 - 4:31pm - வழங்கியவர் shadiqah

கவி.எஸ்.புதியவர்,பழையவர் என்றெல்லாம் நான் பார்ப்பதில்லை.நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அறுசுவையில் ஐக்கியம் ஆகிவிடுவேன்.ரம்ஜான் வருகின்றது அல்லவா?இப்போது இருந்து துணிகள் எடுக்க ஆரம்பித்தால் தான் வசதியாக இருக்கும்.நீண்ட நேரம் நோன்பு இருந்து கொண்டு ஷாப்பிங் செய்வது கஷ்ட்டமாக இருக்கும்.
ஸாதிகா

நினைத்தாலே வருவேன்... ஷாதிகா ஆன்டி!!!
செப்டம்பர் 6, 2008 - 6:38pm - வழங்கியவர் இலா

நினைத்தாலே வருவேன்...
ஷாதிகா ஆன்டி!!! மர்லி இப்ப எல்லாம் ஓட மாட்டாங்க... சோ நாம தைரியாம செய்யலாம்... இதுக்கு தான் ஆன்டி என்னோட ரன்னிங் கிளப்ல சேர சொல்லுறேன்.. இப்படி யாராவது அடிக்க வந்தா ஓடியாவது தப்பிக்கலாம் இல்லையா?? அந்த த்ரெட் பாவம் போல தனியா இருக்கு

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

ஷ்வேதா!!!
செப்டம்பர் 6, 2008 - 7:46pm - வழங்கியவர் இலா

இங்கயும் அதே கதை தான். modified/restricted/reduced calorie diet அதில் இப்படி சீட்டிங் வேற.. பிள்ளையார் பேரை சொல்லி கொழுக்கட்டை.. இப்படியா ஒரு நாளும் dietla இருப்பதில்லை..

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

ஸாதிகா மேடம்
செப்டம்பர் 7, 2008 - 4:20am - வழங்கியவர் Vijitvm

எனக்கு உங்க அரட்டை ரொம்ப பிடிக்கும். நல்ல கருத்துகள் உள்ளதும் அதே மாதிரி எல்லா விஷயங்களிலும் வந்து நல்ல கலக்கறிங்க. ஆமாம் உங்களுக்கு மலையாளம் தெரியுமா, எங்கேயோ நம்ம மர்ழி உங்கலை சேச்சி என்று சொல்வதை படித்தேன். நோன்பு எல்லாம் நிங்க தொடங்கிட்டிங்களா, பாவம் அதில் ஷாப்பிங் வேறயா ஒரே களைப்பா இருக்கும். ஆமாம் லேட்ட்ஸ்ட என்ன டிசைன் ஸாரி & சுரிதார் மார்கெட்டில் வந்து இருக்கு அப்படியே எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க.
மர்ழியாவை பார்த்தால் அல்லது போனில் பேசினால் நான் ரொம்ப கேட்டதா சொல்ல்வவும்.உங்க பேரன் எப்பிடி இருக்கான்?

விஜி டி.வி.எம்
செப்டம்பர் 7, 2008 - 5:48am - வழங்கியவர் shadiqah

விஜி,உங்கள் கருத்துக்கு நன்றி.எனக்கு மலையாளம் தெரியாது.மர்ழி எதோ ஒரு மூடில் சொல்லி இருப்பார்.தாய் மொழி எனக்கு தமிழ்.
கண்டிப்பாக மர்ழியிடம் உங்கள் விசாரிப்புகளை சொல்லுகின்றேன்.
ஆமிர் நன்றாக இருக்கின்றார்.நடக்க ஆரம்பித்து விட்டாயிற்று.பின்னாலேயே ஓட வேண்டியதுள்ளது.கையில் ஒரு பொருள் கிடைத்து விட்டால் போதும்.நேராக பால்கனி சென்று கிரில் வழியே தூக்கிப் போட்டு பொருள் கீழே விழுவதை பார்க்க அவருக்கு சந்தோஷம்.
ஆம் நோன்பு தொடங்கியாகி விட்டது.எக்ஸ்க்ளூஸிவ் சாரி என்றால் மன்மந்திர்,வரசித்தி போன்ற கடைகளில் பிரமாதமான கலெக்ஷன் இருக்கும்.இப்பொழுது பனாரஸில் அழகிய ஜரிகை வேலை பாடுடன் கூடியது நிறைய வந்துள்ளது.பியூர் கிரேப்பில் ஜரிகை வேலை பாடு இப்போதய பேஷன்.
சுடிதார் பாட்டியாலா டைப் இப்பொழுது வந்துள்ளது .வித்தியாசமான கலெக்ஷன் விரும்பினால் ஸ்ருஷ்டி,மோக்ஷா,சுராங்க் போன்றவற்றுக்கு சென்றால் மனம் போல் அள்ளிக்கொண்டு வரலாம்.பர்ஸ் ஜாக்கிரதை.ரொம்ப இளைத்து விடப்போகின்றது.
ஸாதிகா

லேட்டஸ்ட் பேஷன் அப்டேட்!!!
செப்டம்பர் 7, 2008 - 7:09pm - வழங்கியவர் இலா

ஷாதிகா ஆன்டி!!! சூப்பர் போங்க.. நான் இந்தியா வந்து 2.5 வருஷத்துக்கு ஆகுது... சேலை என் டேஸ்ட் இல்லை... சுடி ஒகே..
விஜி!!! பாட்டியாலா சுடிதான் ரொம்ப சிரிப்பா இருக்கு....ஏன்னா!! இங்க ஒருத்தி போட்டு இருந்தா!!! நான் அவள மட்டுமே கொஞ்சநேரம் போட்டோ எடுத்தேன்... ஆனந்தவிகடன்ல அவள் விகடன் பாருங்க... ஒரு செக்ஷன் இதுக்கே இருக்கு.. இப்பல்லாம் லாங் ஸ்கர்ட் டாப்பும் பேஷன்ன்னு போட்டு இருந்தாங்க!!!

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

ஆ..... ஆரம்பிச்சுட்டாங்க..........
செப்டம்பர் 7, 2008 - 8:24pm - வழங்கியவர் அதிரா

அரட்டையில் கலக்கல் நடக்குதே.... இலா.... என்ன இருந்தாற்போல் ஒரே கலக்கலாக இருக்கிறதே.... எல்லாம் நானும் மர்ழியும் இல்லையென்ற தைரியம்போல இருக்கு.... அதுதான் வந்திட்டேன்....:)

ஸாதிகா அக்கா நோன்பு ஆரம்பித்துவிட்டது உங்களுக்கு... எனக்கும் கொஞ்சம் கஞ்சி அனுப்புங்களேன்... இலாவிற்கு வேண்டாம்... விரும்பினால் புழுங்கலரிசி சோறும் சிக்கின் கறியும் கொடுங்க....

என்ன இலா போலீசில் மர்ழியா புகார் செய்துள்ளதாக மிரட்டலெல்லாம் வருகிறது...... நாங்கள் நெருக்கமாக.... இருப்பது பிடிக்கவில்லையா அதுதான் இந்த டூப்பெல்லாம் வருகிறதோ.... அதெல்லாம் இனிச் சரி வராது.... தெரியுமோ.......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

தோழியர் அனைவருக்கும்
செப்டம்பர் 8, 2008 - 8:07am - வழங்கியவர் T S JAYANTHI

விரிவான பதிவுடன் வருகிறேன்.

வாழ்க வளமுடன்
ஜெயந்தி மாமி

Hai Kavi_s
செப்டம்பர் 8, 2008 - 8:17am - வழங்கியவர் jayalakshimi_s

ஹாய் கவி,

நான் நல்லா இருக்கேன்.நீங்க எப்படி இருக்கிங்க

SJ

ஹாய் ஜெயல்ஷ்மி
செப்டம்பர் 8, 2008 - 8:27am - வழங்கியவர் kavi.s

ஹாய் ஜெயல்ஷ்மி
நானும் நல்லா இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்க? உங்கள் உறுப்பினர் பக்கம் பார்த்தேன் ஒன்றுமே இல்லை அதான் கேட்டேன் விருப்பமிருந்தால் சொல்லலாம்.

அதிரா,இலா
செப்டம்பர் 8, 2008 - 8:42am - வழங்கியவர் shadiqah

அதிரா,நலமா?டான்ஸில்ஸ் ஆபரேஷன் முடிந்து விட்டதா?இப்பொழுது பூரண நலாமாகி இருப்பீர்கள் என் நம்புகின்றேன்.வாருங்கள் எங்கள் வீட்டிற்கு.நீங்கள் கேட்டதெல்லாம் சமைத்து தருகின்றேன்.
இலா,விஜி சேலை,சுடிதார் இவற்றுக்குத் தான் இப்போதைய பேஷன் எது என கேட்டு இருந்தார்.ஸ்கர்ட்டை பற்றிக் கேட்க வில்லை.பாட்டியாலா பாட்டம் உள்ளது அணியும் பொழுது கோமாளித்தனமாகத்தான் உள்ளது.(சிறியவர்கள் உருட்டுக்கட்டையை தூக்கிக் கொண்டு வந்து விடாதீர்கள்)அதுதான் பேஷன் என்று அள்ளுகின்றாகளே?
ஸாதிகா

friend Kavi ku
செப்டம்பர் 8, 2008 - 8:43am - வழங்கியவர் jayalakshimi_s

jayalakshmisudharsan,
ஹாய் கவி,
நாங்க India la இருக்கோம்.

samayal encyclopaedia
செப்டம்பர் 8, 2008 - 9:04am - வழங்கியவர் rabiasarfudin

arusuvai vunave Aarokya vaazhvu
எந்த வகை குறிப்பு தேடினாலும் டக் டக் என்று கிடைத்து விடுகிறது. இதை ஒரு சமையல் என்சைக்லோபீடியா என்றே சொல்லலாம். மகத்தான சேவைக்கு மனமார்ந்த நன்றிகள்

சாதிகா மேடம்....
செப்டம்பர் 8, 2008 - 11:45am - வழங்கியவர் vimalakandaswamy

வணக்கம் சாதிகா,இப்பொழுதான் முதன்முறையாக உங்களுடன் பேசுகிறேன்.நோன்பு வாழ்த்துக்கள்....
உங்கள் லேயர்முர்தபா குறிப்பு பார்த்தேன்.எனக்கு பிடிச்சுருக்கு..செய்து பார்த்துவிட்டு கண்டிப்பாக பின்னூட்டம் அனுப்புகிரேன்.நீங்கள் விஜி டிவிஎம்முக்கு
சொல்லியுள்ளமன்மந்திர்,வரசித்தி
,ஸ்ருஷ்டி,மோக்ஷா,
சுராங்க் போன்ற கடைகள் எங்குள்ளது?
நாம் இளைப்பது போல தெரியவில்லை...!;-)
பர்ஸாவது இளைக்கட்டுமே என்ற நல்லெண்ணம்தான்..

அன்புடன் விமலா.

அருண் கவி
செப்டம்பர் 8, 2008 - 5:43pm - வழங்கியவர் haashini

ஹாய் அருண் கவி நீங்க VA யானு பார்த்தேன் ... எந்த எரியவுனு தெரிசுகலமா ,நானும் VA தான் அதன் கேட்டேன்

ஹாஷினி

ஹாசினி
செப்டம்பர் 8, 2008 - 5:59pm - வழங்கியவர் arunkavi

ஹலோ ஹசினி,
ரொம்ப சந்தொஷம்.நான் RESTON ல் இருக்கிறேன்.நீங்க எங்கு இருக்கீங்க.
நன்றி,
கவிதா.

அருண் கவி
செப்டம்பர் 8, 2008 - 6:02pm - வழங்கியவர் haashini

ஹாய் அருண் கவி நாங்க lynchburg . . இப்போ தான் எந்த ஊருக்கு வந்து இருக்கோம்

ஹாஷினி

ஹாஷினி
செப்டம்பர் 8, 2008 - 6:10pm - வழங்கியவர் arunkavi

ஹலோ ஹாஷினி,
என்னை கவிதான்னே கூப்பிடுங்க
இந்த சிட்டி எதற்கு பக்கத்தில் இருக்கு.
நன்றி,
கவிதா.

ஹாஷினி
செப்டம்பர் 8, 2008 - 6:16pm - வழங்கியவர் arunkavi

ஹலோ ஹாஷினி,
lynchburg or lessburg
நன்றி,
கவிதா

ஓகே கவி
செப்டம்பர் 8, 2008 - 6:18pm - வழங்கியவர் haashini

ஓகே கவி நிறைய கவி'ஸ் அதன் அருண்கவினு சொன்னேன் , நாங்க roanoke பக்கத்தில் இருக்கோம் .. இப்போ தான் google உங்க இடம் பார்த்தேன் .. இங்கு இருந்து 3 மணி நேரம் .. உங்களுக்கு வாஸிங்டன் பக்கமா ... நாங்க இந்த வாரம் வரலாமுன்னு இருக்கோம்
ஹாஷினி

வர்ஜீனியா டீம் அருசுவை!!!
செப்டம்பர் 8, 2008 - 6:22pm - வழங்கியவர் இலா

ஒரு ஒரு மாநிலமா டீம் சேர்ந்தாச்சு போல??

மாஸ்.. டீமெல்லாம் ஒரு ஹாய் சொல்லுங்க!!!

“If A is success in life, then A equals X plus Y plus Z. Work is X; Y is play; and Z is keeping your mouth shut.” --Albert Einstein

100 ல் 1 - 30 வரை.
அடுத்தது › கடைசி »