topic_image


எல்லாரும் எப்படி இருக்கிங்க. அல்ஹம்துலில்லாஹ் நார்மல் டெலிவரியில் எனக்கு சாலிகான அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். பெயர் அஹமத் மசூத். என் பிள்ளைக்காக எல்லோரும் துவா செய்யவும்.


வாழ்த்துக்கள் ஷகீலாபானு!!!
செப்டம்பர் 7, 2008 - 11:30am - வழங்கியவர் இலா

தாயும் சேயும் நலமென்று கேட்டது மிக்க மகிழ்ச்சி!!! உங்களுக்கு உங்க குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள்

Faith is the strength by which a shattered world shall emerge into the light. -- Helen Keller

வாழ்த்துக்கள் சகிலா...
செப்டம்பர் 7, 2008 - 11:32am - வழங்கியவர் senthamizh selvi

அன்பு சகிலா,
அழகான ஆண் குழந்தைக்கும், ஈன்றெடுத்த தாய்க்கும் (உனக்கு) எனது அன்பான வாழ்த்துக்கள். நல்லா சத்தாக சாப்பிட்டு குழந்தையையும், உன்னையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்.
வாழ்த்துக்கள் சகிலா.
அன்புடன்,
செல்வி.

வாழ்த்துக்கள் ஷகிலா
செப்டம்பர் 7, 2008 - 1:32pm - வழங்கியவர் shadiqah

ஷகிலா,புதியதாக மகன் பிறந்து இருக்கின்றார்.எனது வாழ்த்துக்கள்.பெற்றோர் நீங்கள் நாடிய படி உங்கள் செல்வ மகன் அஹ்மத் மசூத் நீடூழி காலங்கள் அனைத்து பாக்கியங்களுடன் வாழ துஆ செய்கின்றேன்
ஸாதிகா

வாழ்த்துக்கள்
செப்டம்பர் 7, 2008 - 3:21pm - வழங்கியவர் santho

வாழ்த்துக்கள்..தாயும் சேயும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்..

ஹலோ ஷகீலா
செப்டம்பர் 7, 2008 - 3:39pm - வழங்கியவர் Thanisha

நீங்களும், உங்கள் மகன் அஹமத் மசூதும் உங்கள் குடும்பத்தாருடன் எல்லா பாக்கியங்களும் பெற்று நலமுடன் வாழா இறைவனிடம் துவா செய்கின்றேன்.

ஷகீலா
செப்டம்பர் 7, 2008 - 7:36pm - வழங்கியவர் aniaksh

ஷகீலா,
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் . உங்கள் குழந்தை அஹமத் மசூது வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று சிறக்க என் வாழ்த்துக்கள்.
Rajini

ஷகீலா வாழ்த்துக்கள்
செப்டம்பர் 8, 2008 - 1:39am - வழங்கியவர் Janaki2411

ஷகீலா உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மகன் உங்களை ரொம்ப பிஸியாக வைத்து இருப்பான். பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். உங்கள் மகன் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.

ஜானகி

சந்தோசமான செய்தி
செப்டம்பர் 8, 2008 - 3:28am - வழங்கியவர் Manohari

அன்பு ஷகிலாபானு நீங்க எப்படி இருக்கீங்க? சுகப்பிரசவத்தில் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள சந்தோசமான செய்தியை எங்களிடம் கூறியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.உங்களுக்கும் உங்க குடும்பதாருக்கும் எனது வாழ்த்துக்கள, குழந்தைக்கு எனது ஆசீரும் அன்பான முத்தங்களும்.

அன்பு
செப்டம்பர் 8, 2008 - 3:33am - வழங்கியவர் vijimalai

அன்பு சகிலா,
அழகான ஆண் குழந்தைக்கும், ஈன்றெடுத்த தாய்க்கும் (உனக்கு) எனது அன்பான வாழ்த்துக்கள். நல்லா சத்தாக சாப்பிட்டு குழந்தையையும், உன்னையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்.
வாழ்த்துக்கள்

அறிவான பிள்ளையாக
செப்டம்பர் 8, 2008 - 4:44am - வழங்கியவர் Jaleela Banu

ரொம்ப சந்தோஷம் ஷகீலா.
ஆண் குழந்தை நல்ல பார்த்து கொள்ளுங்கள்.
நல்ல சாப்பிடுங்கள். சூப் நிறைய குடிங்க.
ஆண்டவன் நல்ல அறிவான பிள்ளையாக, உதவியான பிள்ளையாக வளற கிருபை புரிவானாக.
ஜலீலா

வாழ்த்துக்கள் சகிலா பானு
செப்டம்பர் 8, 2008 - 5:13am - வழங்கியவர் harigayathri

உங்களுடன் நான் பேசுவது இதுவே முதல் முறை மிகுந்த சந்தோஷம், அழகிய இளவரசனை பெற்றெடுத்த சகிலா பானுவிற்கு வாழ்த்துக்கள். உங்கள் மகனை நல்லபடியாக கவனித்துக் கொள்ளுங்க. நீங்களும் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க.

வாழ்த்துக்கள்
செப்டம்பர் 8, 2008 - 6:09am - வழங்கியவர் T S JAYANTHI

ஷகீலா. மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் பெற்றோர் பதவியைக் கொடுத்த உங்கள் மகன் அஹமத் மசூத் எல்லா நலன்களும் பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதொரு பிள்ளையாக விளங்க வாழ்த்துக்கள். அஹமத்திற்கு நல்லாசிகள்.
வாழ்க வளமுடன்
ஜெயந்தி மாமி

வாழ்த்துக்கள்
செப்டம்பர் 8, 2008 - 6:22am - வழங்கியவர் pradeebala

ஹாய் ஷகிலாபானு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களையும்,உங்கள
் மகனையும் நன்றாக கவனித்து கொள்ளுங்கள்.உங்கள் மகன் எல்லா
நலன்களும் பெற வாழ்த்துக்கள்
அன்புடன் பிரதீபா

வாழ்த்துக்கள் ஷகீலா
செப்டம்பர் 12, 2008 - 7:20am - வழங்கியவர் seyedkatheeja

எப்படி இருக்கீங்க மகன் நலமா.உங்களுக்கு குழந்தை பிறந்ததுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நல்ல சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோங்க. குழந்தையையும் நல்ல படியாக கவனித்துக்கொள்ளுங்கள்.உங்கள் ஆசைபடியே அவன் வளர்ந்து சீரும்,சிறப்புமாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.

அன்புடன் கதீஜா.

வாழ்த்துக்கள்
செப்டம்பர் 17, 2008 - 5:58am - வழங்கியவர் suganyaprakash

எனது அன்பான வாழ்த்துக்கள். நல்லா சத்தாக சாப்பிட்டு அஹமத் மசூத் அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.

வாழ்த்துக்கள் ஷகிலா!
செப்டம்பர் 19, 2008 - 4:04am - வழங்கியவர் Divya Arun

உங்களுக்கும்,உங்கள் அன்பு மகனுக்கும் எனது வாழ்த்துக்கள்.உங்க உடல் நலனை கவனித்து கொள்ளுங்கள்.நல்லா சத்தான ஆகாரம் எடுத்துக்குங்க.

அன்புடன்
திவ்யா அருண்

hi shakilacongrates
செப்டம்பர் 19, 2008 - 4:07am - வழங்கியவர் karkav

hi shakila
congrates

hi shakilacongrates
செப்டம்பர் 19, 2008 - 4:07am - வழங்கியவர் karkav

hi shakila
congrates

ஹாய் ஷகிலா
செப்டம்பர் 19, 2008 - 6:21am - வழங்கியவர் kavi.s

ஹாய் ஷகிலா
வாழ்த்துகள் இப்பொழுதுதான் பார்த்தேன் உங்கள் சந்தோஷ செய்தியை நீங்களும் உங்கள் மகனும் நலமுடன் வாழ இறைவனிடம் பிராத்திக்கிறோம்.