![]() இது நான் விகடன்.காமில் படித்து காபி பேஸ்ட் பண்ணியிருக்கேன் பிடித்து இருந்தால் உங்களுக்கு தெரிந்ததை எழுதுங்கள் சில நேரங்களில்.. சில விதிகள் எப்போதும் மாறாதுங்கோ.. இதோ சாம்பிளுக்கு சில.. எதுக்காகவோ வரிசையில் நிக்கிறோம்னு வைங்க... நாம நிக்கிற வரிசை மட்டும் நகரவே நகராது. மத்த வரிசையெல்லாம் கிடுகிடுன்னு கரையும்... கரெக்ட்டா? ரிப்பேரான பைக்கை ரிப்பேர் பார்த்துட்டு, கை பூரா க்ரீஸா நிக்கும்போதுதான் மூக்கு நொணநொணனு அரிக்கும். உண்மைதானே பங்காளி..? உங்க முதலாளி 'ஏன் லேட்..?'னு கேட்டா, 'வண்டி பஞ்சர் சார்'னு சொல்லி சமாளிச்சுடுவீங்க. மறுநாள் உண்மையாவே வண்டி பஞ்சர் ஆகி, முதலாளி முன்னாடி வீட்டை பூட்டிட்டு வெளியே கிளம்பும் போதுதான் போன் மணி அடிக்கும். திறந்துட்டு உள்ளே ஓடி வர்றக்குள்ளே நின்னுரும். அதுக்கப்புறம் அரை மணிநேரம் தேவுடு காத்தாலும் ரிங்கே வராது. அப்புறமென்ன... போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு ரொம்ப லேட்டாதான் போகணும். சரிதானே சார்? ஒரு முக்கியமான ஆள், உங்க ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தரை மென்ஷன் பன்ணி, 'அவன்கூட சேராதே!'னு சொல்லியிருப்பாங்க. நீங்களும் தலையாட்டியிருப்பீங்க. மறுநாளே, அவனோட சுத்துறதை முக்கியமானவங்க பார்த்து தொலைச்சுருவாங்க... கரெக்ட்டா..? ஒரு மேஜிக்கோ, வித்தையோ வித்தியாசமா எதையாவது சின்ஸியரா கத்துட்டு வந்திருப்பீங்க.ஒரு ஆளை அசத்திரணும்னு டார்கெட் வெச்சு, அவங்ககிட்டே செய்து காட்டும்போதுதான், மேட்டர் சொதப்பிடும். அவங்க போனதும் ஒரு தடவை செஞ்சு பார்ப்பீங்க. கரெக்டா வரும்... நொந்து நூடுல்ஸாகி இருக்கீங்களா... இல்லையா? செப்டம்பர் 11, 2008 - 6:56pm - வழங்கியவர் SWETHA11
|

