உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


 

ஃபிரைட் ரோபு - வெஜிடபிள் (Fried Tofu & Vegies)

 

இது ஒரு தாய்லாந்து சமையலாகும்.

தேவையானப் பொருட்கள்

  • ரோபு (Tofu)- 1 கப்
  • கரட் - 1/2 கப்
  • பெல் பெப்பர் - 1/4 கப்
  • பீன்ஸ் - 1/2 கப்
  • அஸ்பராகஸ் - 1/2 கப்
  • காலிஃபிளவர் - 1/2 கப்
  • வெங்காயம் - 1/4 கப்
  • உள்ளி - 4 பல்லு
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 1 தேக்கரண்டி
  • மிளகாய் ஃபிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
  • பிரவுண் சீனி - 1 தேக்கரண்டி
  • சோய ஸோஸ் - 1 1/2 தேக்கரண்டி
  • பட்டர் - 3 மேசைக்கரண்டி
  • உப்பு

செய்முறை

  • கரட், பெல்பெப்பர், பீன்ஸ். அஸ்பராகஸ், வெங்காயம், பச்சை மிளகாய் என்பவற்றை நீளமான துண்டுகளாக வெட்டவும்.
  • ரோபு, காலிஃபிளவர், இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  • உள்ளியை நசித்து வைக்கவும்.
  • ஒரு பானில் சிறிது எண்ணெய் விட்டு ரோபுவை சோட்டே(sautee) செய்யவும்.
  • ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உருகியதும் மிளகாய் ஃபிளேக்ஸ், உள்ளியை போட்டு வதக்கவும்.
  • பின்னர் இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • பின்னர் மரக்கறிகள், உப்பை போட்டு கிளறி மூடி 8- 10 நிமிடங்கள் மூடி மிதமான சூட்டில் அவிய விடவும்.
  • பின்னர் மூடியை திறந்துவிட்டு தண்ணீர் வற்றும்வரை விடவும்.
  • தண்ணீர் வற்றி காய்கள் ஓரளவு வதங்கியதும் அதனுள் சோயா ஸோஸ், பிரவுண் சீனி சேர்த்து 2 - 3 நிமிடங்களுக்கு கிளறவும்.
  • பின்னர் ரோபுவை கொட்டி கலந்து இறக்கவும்.
  • சுவையான ரோபு டிஷ் தயார். இதனை தனியேவும் சாப்பிடலாம் அல்லது நூடில்ஸ், ஸ்பகடியுடன் சேர்த்தும் உண்ணலாம்.

வழங்கியவர்

Mrs. B. Narmatha

பரிமாறும் அளவு

ஆயத்த நேரம்

சமைக்கும் நேரம்

2 - 3 நபர்களுக்கு 10 - 15 நிமிடங்கள் 20 - 25 நிமிடங்கள்
random food image


comments
Fried Tofu & Vegies
அக்டோபர் 18, 2007 - 12:00pm - வழங்கியவர் ambika_dt

நன்றி நர்மதா,இதை நாங்கள் சைனீஸ் ரெஸ்டாரன்டில் சாப்பிட்டு இருக்கிறோம்.புது வகையான குறிப்புகளை கொடுத்து கலக்குறீங்க.வாழ்த்துக்கள்.

தாய் ரெஸ்டாரன்ட்
அக்டோபர் 18, 2007 - 10:02pm - வழங்கியவர் Nila2006

ஹலோ அம்பிகா, நாங்கள் இதை தாய் ரெஸ்டாரன்டில் சாப்பிட்டோம். அது ஒரு வேகான் ரெஸ்டாரன்ட். எனவே பட்டர் பாவித்திருக்கமாட்டார்கள். நான் சுவைக்காக பட்டர் சேர்த்தேன் :) உங்களது Olive Garden 'Ziti'குறிப்பு விரைவில் அனுப்புகிறேன் :)
-நர்மதா :)

5 ziti
அக்டோபர் 19, 2007 - 11:45am - வழங்கியவர் ambika_dt

மிக்க நன்றி.. ரெடிமேட் 5 ziti sauce வாங்கி செய்து பார்தேன் சரியாக வரவில்லை.. உங்கள் குறிப்பை பார்த்துதான் செய்ய வேண்டும்.

என்றென்றும் புன்னகை..
அம்பிகா