உள்நுழைதல்

Sponsored links


வாக்கெடுப்பு






புதிதாக இணைந்தவர்கள்

சமீபத்தியக் கருத்துக்கள்

Sponsored link


ஃபிரைட் டோஃபு (Fried Tofu & Vegies)


சுவையான இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. நர்மதா அவர்கள் இந்த வெஜிடபிள் ஃப்ரைடு டோஃபுவின் செய்முறையை படங்களுடன் விளக்குகின்றார். இது ஒரு தாய்லாந்து உணவு.

தேவையானப் பொருட்கள்

  • டோஃபு (Tofu) - ஒரு கப்
  • காரட் - 1/2 கப்
  • பெல் பெப்பர் - 1/4 கப்
  • பீன்ஸ் - 1/2 கப்
  • அஸ்பராகஸ் - 1/2 கப்
  • காலிஃபிளவர் - 1/2 கப்
  • வெங்காயம் - 1/4 கப்
  • உள்ளி - 4 பல்லு
  • பச்சை மிளகாய் - 3
  • இஞ்சி - 1 தேக்கரண்டி
  • மிளகாய் ஃபிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
  • பிரவுன் சுகர் - 1 தேக்கரண்டி
  • சோய ஸோஸ் - 1 1/2 தேக்கரண்டி
  • பட்டர் - 3 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
தேவையான பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும். காரட், பெல்பெப்பர், பீன்ஸ், அஸ்பராகஸ், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமான துண்டுகளாக வெட்டவும். டோஃபு, காலிஃபிளவர், இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டவும். உள்ளியை நசித்து வைக்கவும்.
step 1
ஒரு பானில் சிறிது எண்ணெய் விட்டு டோஃபுவை சோட்டே(sautee) செய்யவும்.
step 2
ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உருகியதும் மிளகாய் ஃபிளேக்ஸ், உள்ளியை போட்டு வதக்கவும்.
step 3
பின்னர் நறுக்கின இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
step 4
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள மற்ற காய்கறிகளைச் சேர்த்து, உப்பை போட்டு கிளறி மூடி 8- 10 நிமிடங்கள் மூடி மிதமான சூட்டில் அவிய விடவும்.
step 5
பின்னர் மூடியை திறந்துவிட்டு தண்ணீர் வற்றும்வரை வேக விடவும்.
step 6
தண்ணீர் வற்றி காய்கள் ஓரளவு வதங்கியதும் அதனுள் சோயா ஸோஸ், பிரவுண் சீனி சேர்த்து 2 - 3 நிமிடங்களுக்கு கிளறவும். பின்னர் டோஃபுவை கொட்டி கலந்து இறக்கவும்.
step 7
சுவையான டோஃபு டிஷ் தயார். இதனை தனியே சாப்பிடலாம் அல்லது நூடில்ஸ், ஸ்பகடியுடன் சேர்த்தும் உண்ணலாம்.
step 8


முந்தைய குறிப்புகள் பக்கத்திற்குச் செல்ல..

comments
இந்த டிஷ்
ஏப்ரல் 2, 2008 - 3:20pm - வழங்கியவர் gayu1981

இந்த டிஷ் காரமா? அல்லது இனிப்பா?"ஊள்ளீ" என்ட்ரால் என்ன?

உள்ளி என்றால் பூண்டு
ஏப்ரல் 2, 2008 - 4:00pm - வழங்கியவர் இலா

உள்ளி என்றால் பூண்டு

காரம் + இனிப்பான உணவு
ஏப்ரல் 2, 2008 - 6:22pm - வழங்கியவர் Nila2006

Gayu,

இது காரம் + இனிப்பான ஒரு உணவு. மிளகாய் பிளேக்ஸ் சிறிது அதிகமாக சேர்த்தால் இன்னும் சிறிது காரமாக இருக்கும்.
-நர்மதா :)

அஸ்பராகஸ் என்றால்........
ஏப்ரல் 2, 2008 - 6:26pm - வழங்கியவர் rikha

அஸ்பராகஸ் என்றால் என்ன?

அஸ்பரகஸ்
ஏப்ரல் 2, 2008 - 10:04pm - வழங்கியவர் thalika

அஸ்பரகஸ் நீள நீளமாக இருக்கும்.அதாவது பச்சைஒயாக மூங்கில் தண்டு போல் பென்சில் மாதிரி இருக்கும்..ப்ரோக்கோலி,செலெரி எல்லாம் வைக்கும் இடத்தில் இதையும் வைத்திருப்பார்கள்.