கோலங்கள் | அறுசுவை
Kolam rangoli

இந்தியக் கலாச்சார, அதிலும் குறிப்பாக இந்துக் கலாச்சார அடையாளங்களில் கோலங்கள் முக்கியமானவை. கிட்டத்திட்ட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த கோலங்கள் வெவ்வேறு பெயர்களில் இருக்கின்றன. கண்ணைக் கவரும் அலங்காரம், தெய்வ நம்பிக்கைகள், வரவேற்பு என்ற பலகாரணங்களுக்காக இடப்படும் இந்த கோலங்கள், பெண்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்காட்டும் ஒரு உன்னதமான கலை என்பதை மறுக்க இயலாது. இந்தப் பகுதியில் வண்ணக் கோலங்கள், சிக்குக் கோலங்கள், ரங்கோலி என்று பல்வேறு வகைக் கோலங்கள் தினம் ஒன்றாக தொடர்ந்து வெளிவரும்.