அழகிய க்ளாஸ் பெயிண்டிங் செய்வது எப்படி?

தேதி: November 28, 2008

5
Average: 4.7 (3 votes)

 

ஒயிட் க்ளு - ஒன்று
அக்ரிலிக் கலர் - தேவையான நிறங்கள்
டிசைன்ட் பேப்பர்
ரீசீலபுள் கவர்
ஃப்ரேம் - ஒன்று
அலுமினியம் ஃபாயில் - ப்ரேமின் அளவிற்கேற்ப

 

ப்ரேமிலிருந்து கண்ணாடியை தனியாக எடுத்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அவுட் லைன் வரைவதற்கு கருப்பு கலர் க்ளு தயாரிக்க, க்ளுவுடன் கருப்பு கலரை சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதை ஒரு சிறிய கவரில் போட்டு இறுக்கமாக ரப்பரால் கட்டி விடவும். பின் அதன் கூர்மையான முனையில் கத்திரிக்கோலால் நறுக்கி விட்டு மிகச்சிறிய துளையை போட்டுக் கொள்ளவும். அப்போதுதான் கோடுகள் மெல்லியதாக இருக்கும்
தேவையான டிசைன் போடப்பட்ட பேப்பரை அடியில் வைத்து மேலே கண்ணாடி க்ளாஸை வைத்து ப்ளாக் லைனரால் கண்ணாடியின் மேல் வரையவும். இதை 1 1/2 அல்லது 2 மணி நேரம் காய விடவும்.
அதன் பிறகு கண்ணாடியில் போடப்பட்ட டிசைனில் தேவையற்ற கோடுகள் அல்லது டிசைன் இருந்தால் கட்டர் அல்லது கத்தியால் எடுத்து விடவும்.
படத்திற்கு தேவையான கலர் க்ளுவை ப்ளாக் க்ளு தயாரித்தது போலவே தேவையான கலரை வைத்து தயார் செய்துக் கொள்ளவும். கலர் க்ளு செய்யும் போது அதனுடன் 2 அல்லது 3 சொட்டு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அப்போது தான் எல்லா இடங்களிலும் நன்கு பரவும். பின்னர் தேவையான கலரை கோனில் எடுத்துக் கொண்டு தேவையான இடங்களில் கலர் கொடுத்து 2 மணி நேரம் காய விடவும்.
பிறகு அலுமினியன ஃபாயிலை கசக்கி விட்டு கண்ணாடியின் பின்புறத்தில் வைத்து ஃப்ரேம் செய்யவும்.
இதே போல் கண்ணாடி ஃப்ரேமின் ஓரங்களில் பெயிண்டிங் செய்து ஃப்ரேமை இன்னும் அழகுப்படுத்தலாம்.
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்கள், இந்த அழகிய க்ளாஸ் பெயிண்டிங் செய்முறையை செய்து காட்டியுள்ளார்

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

SIVAKAVI
ஹலோ மஹிஸ்ரீ!
ரொம்ப அழகா இருக்கு. எனக்கு ட்ராயிங் நல்லா வரும். க்ளாஸ் பெயின்டிங் நா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா இது வரை ட்ரை பன்னினதில்ல. ரொம்ப சிம்பில் போல இருக்கே.நானும் ட்ரை பண்ணப் போரேன்.பொறுமைதான் வேணும் இல்ல?
anyway its really very nice.

anbe sivam

மஹிஸ்ரீ! அழ்கா இருக்கு. இதையும் செய்ய தயாராகிவிட்டேன் ஆனால்முகம் பார்க்கும் கண்ணாடியில் செய்யமுடியாதா?ஆவலாய் இருக்கிறது பதில் தாங்கோ.

சுரேஜினி

பெயின்டிங்,
மஹிஸ்ரீ, எப்படி இருக்கிறீங்கள். எனக்கு இந்த பெயிண்டிங்கில் நிறையவே ஆர்வம் இருக்கிறது. நான் வ்பப்றிக் பெயிண்டிங் செய்வேன். ஆனால் கிளாசில் இதுவரை செய்ததில்லை. முயற்சிக்க ஆவலாய் இருக்கிறேன், ஆனால் இந்த குளூ வுடன் கலரைக் கலந்து ஏன் ஒரு டிஸ்ஸில் போட்டு, பெயிண்டிங் பிறஸ் கொண்டு செய்ய முடியாதா? அதுவென்றால் சுலபம், இது கஸ்டம் போலிருக்கிறதே.... விளக்கம் தந்தால் நல்லது.

மிக அழகாக இருக்கிறது உங்கள் பெயிண்டிங்ஸ். எனக்கு நிறைய செய்து சுவரில் மாட்ட ஆசை.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உங்கள் இரண்டு படங்களுமே அழகாக இருக்கின்றன.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அன்பின் மஹிஸ்ரீ, மிகவும் அழகாக இருக்கு. நானும் நேரம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன். பாராட்டுக்கள்.
-நர்மதா :)

ஹாய் கவிதா,சுரேஜினி,அதிரா,இமா,நர்மதா

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.நான் இந்தியா வந்து 4 மாதங்கள் ஆகிறது.அதனால் தான் பதிலளிக்க முடியவில்லை.உங்கள் அனைவரின் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கவிதா...ட்ரை செய்து பார்த்து விட்டு சொல்லவும்.ஆம் பொறுமைதான் மிக முக்கியம்.

சுரேஜினி...முகம் பார்க்கும் கண்ணாடியில் கூட செய்யலாம்.அதன் ஓரங்களில் இதை செய்யலாம்.

அதிரா...இதை ட்ரஸ்ஸில் போட்டால் துவைக்கும் போது உரிந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.மேலும் பயன்படுத்தும் க்ளூ நீரில் கரையக் கூடியதாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.ட்ரை செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.நிறைய செய்து உங்கள் வீட்டு சுவரை அலங்கரிக்க எனது வாழ்த்துக்கள்.

இமா,நர்மதா....உன்கள் பாரட்டுக்களுக்கு நன்றி.ட்ரை செய்து பார்த்து விட்டு சொல்லவும்.நர்மதா உங்கள் சுட்டி எப்படி உள்ளார்?

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta