ஊறுமா

தேதி: November 29, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு,

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்சரிசி - 100 கிராம்.
(சீரக சம்பா அல்லது வாசனை சம்பா)
சீனி - கால் கிலோ.
முட்டை - 1
ஏலக்காய் - 2
தேங்காய்ப்பால் - 1 கப்.
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரிபருப்பு - கொஞ்சம்
உப்பு - 1 பின்ச்


 

பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைத்து எடுக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் 5 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும். 2 ஏலக்காய் தட்டி போடவும். பின்ச் உப்பு போடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து பொறுமையாக கலக்கி அடிபிடிக்காமல் வேக விடவும். சீனியையும் சேர்க்கவும்.
மாவு வெந்தவுடன் முட்டையை அடித்து கொடி போல் ஊற்றவும், தேங்காய்ப்பாலை ஊற்றி கலக்கி அடுப்பை அணைத்து விடவும்.
நெய்யில் முந்திரி வறுத்து மேலே போடவும்.
சுவையான ஊறுமா ரெடி.


இது பார்ப்பதற்கு ஃபிர்னி போல் இருக்கும். இதை தோசை இடியாப்பத்துடன் பரிமாறலாம். சீனி வேண்டுமானால் அளவை கூட்டிக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்