மொறு மொறு வாளை மீன் வறுவல்

தேதி: November 29, 2008

பரிமாறும் அளவு: 4 நபருக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வாளை மீன் - அரை கிலோ
எண்ணெய் - 100 மில்லி
சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
மிளகு பவுடர் - அரை ஸ்பூன்
பூண்டு பல் தட்டிக்கொள்ள - 8 பல்.
கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்.
உப்பு - தேவைக்கு.
ரெட் கலர் - 1 பின்ச்


 

மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.
பின்பு மீனில் சில்லி பவுடர்,மிளகு பவுடர்,பூண்டு,உப்பு,ரெட் கலர்,தயிர்,அரிசி,கடலை,கோதுமை மாவு வகைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணெய்யில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
ருசியான வாளை மீன் வறுவல் ரெடி.இதனை ஆனியன் ரிங்,கருவேப்பிலை போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.


வாளை மீனில் முள் வாளை,பெல்ட் வாளை என்று உண்டு.பெல்ட் வாளை நடுமுள் மட்டும் இருக்கும்.வெள்ளை நிறமாக மெத்தென்று இருக்கும்.இதனை பயன்படுத்தினால் முள்பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

I tried ur recipe.it's very very tasty. this fish was my favourite one.i hav included this recipe in my favourite dish list.Every one should try this & enjoy.

Jasmin

நான் அனுப்பிய படத்தை அழகாக இணைத்தமைக்கு நன்றி.இனி நானே இணைக்க முயற்சி செய்கிறேன்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.