கோழி மிளகு குருமா

தேதி: November 29, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோழி - 1/2 கிலோ (எலும்புடன்)
2. எண்ணெய் - தாளிக்க
3. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
4. தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
5. பூண்டு - 1 (முழுசு, பொடியாக நறுக்கியது)
6. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மல்லி தூள் - 1/2 தேக்கரண்டி
8. மிளகு தூள் - 3 தேக்கரண்டி
9. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
10. கருவேப்பிலை, கொத்தமல்லி
11. உப்பு
12. பட்டை, லவங்கம்

அரைக்க:

1. பச்சை மிளகாய் - 2
2. தேங்காய் - 1/4 கப்
3. முந்திரி - 5
4. பாதாம் - சுடானா தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்தது 5
5. தயிர் - 1 மேஜைக்கரண்டி


 

அரைக்க வேண்டிய அனைத்தையும் தண்ணீர் குறைவாக சேர்த்து மைய்ய அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும்.
இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைந்து வரும் போது, கோழி, மஞ்சள் தூள் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
கோழி வெந்ததும், மிளகாய் தூள், தனியா தூள், மிளகு தூள், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி, அரைத்த மசாலா சேர்த்து கொதிக்கவிட்டு எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று உங்கள் ரெஸிபி (கோழி மிளகு குருமா) செய்து பார்த்தேன். வித்யாசமாகவும் சுவையாகவும் இருந்தது. நன்றி. பாராட்டுக்கள்.

~Anu.

Be the best of what you are and the Best will come to you :)

Be the best of what you are and the Best will come to you :)

மிக்க நன்றி தோழி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா, உங்க ரெசிப்பி செம சூப்பர். டேஸ்டு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது.....இதே அர்த்தமுள்ள எல்லா வாக்கியங்களை கூட சேர்த்துகலாம். எக்ஸ்ட்ரா நான் மராட்டி மொக்கும் சேர்த்தேன்.
என் ப்ரெண்ட் பொண்ணு பேரும் யாழினி.
கவி.எஸ் சொன்ன மாதிரி போட்டொ விஷயத்தில் சின்ன ஜெர்க் உண்டு பன்னிடீங்க.

indira

மிக்க நன்றி இந்திரா. ஹிஹிஹி... நம்மை அத்தனை சுலபமா யாரும் பாத்துட்டா எப்படி?! ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த ரெஸிபி செம சூப்பராவும் டேஸ்டியாவும் இருந்தது வனி.

மிக்க நன்றி மேனகா. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா