தக்காளி சாதம்

தேதி: November 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

1. சாதம் - 2 கப்
2. எண்ணெய் - 1 குழிக்கரண்டி
3. கடுகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1/2 தேக்கரண்டி
5. உளுந்து - 1 தேக்கரண்டி
6. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் - 2 (கீரியது)
8. வெங்காயம் - 4 தேக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
9. கொத்தமல்லி, கருவேப்பிலை
10. உப்பு
11. தக்காளி - 3 (நல்லா சிவந்து பழுத்த தக்காளி, பொடியாக நறுக்கியது)


 

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் பச்சை மிளகாய், வெங்காயம், மல்லி, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசம் போய், தக்காளி குழைந்து வரும்வரை வேக விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது சாதத்தை கொட்டி கிளரவும். 5 நிமிடம் சிறுந்தீயில் சாதத்தோடு பிரட்டி எடுக்கவும்.


சாதம் குழைந்து போகாமல் கிளர வேண்டும். சாப்பிட 1/2 மணி நேரம் முன்னதாக செய்து வைத்தால் தக்காளி சாதத்துடன் ஊறி சுவை கூடும். இதை அப்பளம், மசாலா வடை'யுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Hi Vanitha, Thakkali Sadham super. Athai vida neenga sonna masal vadai Side-dish idea excellent...

Regards,
Prakash

அன்புள்ள வனிதா, இன்று மதியம் உங்கள் தக்காளி சாதம் செய்திருந்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நான் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து செய்திருந்தேன். நன்றி!

எண்ணம் அழகானால், எல்லாம் அழகாகும்!

என்றும் அன்புடன்,
ஆர்த்தி...

பிரகாஷ்... மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி ஆர்த்தி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொதுவாவே எனக்கு தக்காளி சாதம் ரொம்ப பிடிக்கும்.ஆனா இது செய்ய ரொம்ப எளிமையாய் இருக்கு. இஞ்சி,பூண்டு எதுவும் இல்லாமல், தாளிக்கும் முறையும் எனக்கு புதிது.
நன்றிப்பா!

நன்றி கீதா..... பிடிச்சிருந்தா சந்தோஷம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா இன்னைக்கு உங்களோட தக்காளி சாதம் செய்தேன்.நல்லாவே வந்ததுப்பா.தேங்ஸ் ஃபார் யுவர் குறிப்பு :).ஓகே.

அது என்ன தனு, "நல்லாவே வந்துது"??? ;) இதுல உள்குத்து எதுவும் இல்லையே.... ஹிஹீ. சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், கோசிக்காதிங்க. மிக்க நன்றி தனு, என் குறிப்புகள் செய்து, நேரம் ஒதுக்கி பின்னூட்டம் தந்து சந்தோஷ படுதறீங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா,
உங்க தக்காளி சாதம் இன்று செய்தேன்... ரொம்பவே வித்தியாசமாக இருந்தது :) நன்றி...

// சும்மா விளையாட்டுக்கு கேட்டேன், கோசிக்காதிங்க.//
ஆனாலும் 3.5 வருஷத்துக்கு முன்னாடியே நான் 2012ல வந்து இதே டையலாக்கை சொல்வேன்னு டெலிபதில தெரிஞ்சு சொல்லி இருக்கீங்க... சூப்பர் :D

சரி சரி திட்டாதீங்க... நீங்க இந்த கமெண்ட்டை படிக்க மாட்டீங்கன்ற நம்பிக்கையில தான் சொல்றேன் (நீங்க தான் லீவ் ஆச்சே :P)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கமண்ட் கண்ணில் பட்டுட்டுது :) மிக்க நன்றி. வித்தியாசமாக இருந்ததுன்னா? நல்லா இருந்ததா இல்லையா?? ;) ஹிஹிஹீ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்லா இல்லாமல் என்ன :)

செய்த அன்று இரவு இருந்த சுவையை விட அடுத்த நாள் இன்னும் சுவையாக இருந்தது. மே பீ நான் பயன்படுத்திய தக்காளி ஊறுவதற்கு அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டதோ என்னவோ ;-)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

வனிதா நேற்று உங்க தக்காளி சாதம் செய்தேன் நல்லா இருந்தது.நன்றி வனிதா.

மிக்க நன்றி கவி... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா என்னுடைய அத்தை இதேபோல்தான் செய்வார்கள். எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்று செய்தேன்.நன்றாக இருந்தது.

சவுதி செல்வி

மிக்க நன்றி செல்வி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா