இன்ஸ்டண்ட் சத்து மாவு

தேதி: December 1, 2008

பரிமாறும் அளவு: 30

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு - 2 கப்
ஓட்ஸ் - 1 கப்
பாதாம் பருப்பு - 25
முந்திரி பருப்பு - 25
பாசிப் பருப்பு - 1 கப்
அரிசி - 1/2 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
கேழ்வரகு மாவு ( குரக்கன் Flour ) - 2 கப்
ஏலக்காய் - 7


 

வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி, மேற்சொன்ன பொருட்களை (ஏலக்காயை முந்திரியுடன் சேர்த்து வறுக்கலாம்) ஒவ்வொன்றாக 5 நிமிடங்கள் வீதம் வறுக்கவும்.
வறுத்தவற்றை ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக பொடிக்கவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து ஒரு சல்லடைக் கொண்டு சலிக்கவும்.
குருணையாக சல்லடையில் தங்கியவற்றை மேலும் மிக்சியில் ஒரு முறை நன்றாக பொடித்து சலித்து, ஆறியவுடன் ஒரு காற்றுப் புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
தேவைப்படும்போது ஒரு கிளாஸ் பாலில் 3 ஸ்பூன் ஜீனி சேர்த்து அடுப்பில் வைத்து, அது கொதிக்கும் போது, 3 ஸ்பூன் சத்துமாவை அரை கப் தண்ணீரில் கரைத்து சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் போல் கிண்டி கட்டியில்லாமல் இறக்கவும். ஆறவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மிகவும் சத்தானது மட்டுமல்லாமல் ருசியானதும் கூட. பெரியவர்களும் இதனை சாப்பிடலாம்.


வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு குழந்தைகளுக்கு கொடுக்கவென்று சத்து மாவை இந்தியாவில் செய்வது போல கோதுமை, கேழ்வரகு என்று தானியங்களை முளை கட்டி வைத்து, காய வைத்து மிஷினில் அரைத்து வைத்துக் கொள்வது கடினம். அதற்கு பதிலாக இந்த முறையில் செய்து வைத்துக் கொள்ளலாம். எளிதான முறை மட்டுமல்லாமல் மிகவும் சத்தானதும் கூட. காலையில் குழந்தைகளுக்கு Solid உணவுகளை சாப்பிட பிடிக்காது. இவ்வாறு பாரிட்ஜ் செய்து கொடுத்தால் ஊட்டுவதும் எளிது. குழந்தைகளும் எளிதாக சாப்பிடுவார்கள்.
பெரியவர்களுக்கு செய்யும்போது ஏலக்காய் சேர்க்காமல் செய்து, பாலுக்கு பதில் தண்ணீரை கொதிக்க வைத்து செய்து, ஆறியவுடன் மோர், சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து சேர்த்து குடிக்கலாம். அவரவர் விருப்பத்துக்கேற்ப சோள மாவு, ரவா போன்றவற்றையும் சேர்த்து அரைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

hi deva,
ur instant சத்து மாவு recipi is very useful for me,thanks a lot deva.b4 seeing ur recipi, i thought prepaing சத்து மாவு in home itself is difficult, bt ur method helped me, my son too loves that, thank u deva

ஹாய் மேம் உங்கள் சத்துமாவை முன்னரே நான் பார்த்திருக்கலாம் ..எனக்கு ஊரில் இருந்துதான் வருது சத்துமாவு... உங்கள் குறிப்பை செய்தேன் அப்படியே கடையில் கிடைக்கும் டேஸ்ட் இதிலும் இருக்கு ...ரொம்ப நன்றி மேம்..

வாழு, வாழவிடு..