வீட்டில் நெய் காய்ச்சும் முறை

தேதி: December 1, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

1. பட்டர் - 1/2 கிலோ (உப்பு சேர்க்காதது)
2. கல் உப்பு - 5 கல்
3. முருங்கை கீரை - 1 கைப்பிடி.


 

பட்டர்'ஐ ஒரு பாத்திரத்தில் போட்டு உறுக்கவும்.
உறுகியதும் மிதமான தீயில் காய விடவும்.
சில நிமிடங்களில் நெய் வாசம் வரும், அப்போது ஒரு கல் உப்பு போட்டு பாருங்கள், பொங்கி வரும்.
அந்த பதத்தில் எடுத்து முருங்கை கீரை போட்டு பொரிய விடவும்.


நெய் காய்ச்ச பயன்படுத்திய இந்த முருங்கை கீரை மனம் சேர்க்க மட்டும் அல்ல, சுவையாகவும் இருக்கும்... நெய் ஆரியதும் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

simply super akka

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வீட்டில் தயாரித்த நெய் சாம்பல் நிறத்தில் ஒரு மாதிரி வாடையுடன் இருந்தால் என்ன அர்த்தம்?கெட்டுப் போனதா?நான் ஒரு வீட்டில் பார்த்தேன் அப்படி கெட்டுவிட்டது என்று நான் சொல்லி அவருக்கு கோபம் வந்துவிட்டது அதான் கேட்கிறேன்

நெய் காய்ச்சும் போது நெய் பக்குவம் வந்தபிறகு அடுப்பில் அதிக நேரம் விட்டு விட்டார் என்று அர்த்தம்.(எனக்கும் ஆரம்பத்தில் இப்படி ஆனதுண்டு ;))

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் பதிவு பார்த்து நான் சிரித்து விட்டேன். :) இதற்குத்தான் நான் எங்கும் யாரிடத்திலும் வாய் திறப்பதில்லை!! எனக்கு யாராவது இது மாதிரி சொல்ல மாட்டார்களா நம் கற்று கொள்ளமாட்டோமா என்று இருக்கும். ஆனால் சிலருக்கு இது மாதிரி யாராவது நல்ல விஷயம் சொன்னால் பிடிப்பதில்லை. ஆனால் உங்களை நினைத்து பார்த்தேன். சிரிப்பு வந்தது. தவறாக நினைக்க வேண்டாம் :) you're so sweet :)

அன்புடன்
உமா

ஹஹஹா உமா..அதுல ரவுஸ் என்னன்னா அங்க ரெண்டு பாட்டில்ல நெய் வச்சிருந்தாங்க..ஒன்னுல நெய் சாம்பல் நிறம் இன்னொன்னுல தண்ணி தண்ணியா கலந்திருந்தது ஒன்னை கெட்டுதுன்னு சொன்னேன்னு அடுத்ததை தந்தாங்க அடுத்ததும் கெட்டுடுன்னேனே என்னை கெட் அவுட் பன்னிடாங்க..நான் செய்யும் பிரியாணி ரொம்ப இஷ்டம் என்று என்னை வெக்க சொன்னாங்க கெட்டுப் போன நெய்யை சேத்து செஞ்சா நாலு பேர் சாப்பிட்டு இதப் போயா சூப்பர் பிரியாணின்னாங்கன்னு திட்டிடுவாங்கல்ல அதான் சொன்னேன் இல்லன்னா கப்சிப்புன்னு வந்திருக்க மாட்டேன்..ஹஹஹா

நீங்க சொன்னதை கற்பனை செய்து பார்த்து சிரித்து கொண்டிருக்கிறேன்!! ஒரு நாவல் ஆசிரியர் "ங்கே" என்று விழித்தான் என்று எழுதுவார். அவர் பெயர் ஞாபகம் வரவில்லை. அது மாதிரி விழித்தீர்களா? ஹா ஹா. இதெல்லாம் ரொம்ப கொடுமைங்க ரூபி!!

டியர் வனிதா இது நல்ல குறிப்பு நானும் யோசித்து கொண்டே இருந்தேன் இந்த குறிப்பை கொடுகக் தான் .
தூபாய் வந்த புதிதில் நெய் கிடைக்காது ஊரிலிருந்து கொண்டுவந்ததுதீர்ந்துபோனதும் இப்படி தான் நானும் காய்ச்சி பாட்டில் போட்டு ஊற்றிவைப்பேன் நல்ல மணமாக இருக்கும். இது ரொம்ப பக்குவமா காய்ச்சனும், கரியகூடாது பட்ட்ரில் சிறிது தீ அதிகம் வைத்தாலும் கருப்பாகி விடும்.
வெளியில் வைத்து மெல்ட் ஆக்க்கிவ்ட்டு காய்ச்சினால் நல்ல இருக்கும் கரிந்து போகாது.
அப்ப அப்ப பிரெஷ் நெய் குழந்தைகளுக்கு பொட்டு கீரை தாளிக்கும் போது சுவை ஜோரக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

ஆம் ஜலீலா.... பாத்து பக்குவமா காய்ச்ச வேண்டியது தான் நெய். எனக்கு நினைவு தெரிந்து என் வீட்டில் என்றுமே நெய் வெளியே வாங்கியதில்லை. வீட்டில் தான் செய்வார் என் அம்மா. ஒரு முறை கூட தீய்ந்து போய் பார்த்ததில்லை நான். பழக்கத்தில் வந்துவிடும். என்ன தான் வெளியே வாங்கினாலும் நம் வீட்டில் செய்யும் வாசம்... ஆஹா... :)

தளிகா... உங்களுக்கு நெய்'க்கு பின்னாடி இவ்லோ பெரிய சோகம் இருக்கும்'னு நான் எதிர் பார்கவே இல்லை. ஹஹஹா.... :D

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தற்சமயம் என்னிடம் முருங்கைக்கீரை இல்லை.அது இல்லாமல் நெய் காய்ச்சலாமா?? சந்தேகத்தை தீர்க்கவும் உடனடியாக சீக்கிரம் வாங்க....

மேனு முருங்கைகீரை போட்டால் ஒரு தனி மணம் இருக்கும் அதுவும் இல்லாம அந்த நெய்யில் வருத்த முருங்கைகீரை சுவையும் அருமை. இல்லைன்னாலும் காய்ச்சுங்க. நான் இங்க அப்படித்தான் செய்கிறேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

என் அம்மாகூட இப்படித்தான் செய்வாங்கப்பா.ஆனா இப்போ என்னிடம் கீரை இல்லை அதான் சந்தேகம்.அப்போ அது இல்லாமல் செய்தாலும் கெடாதில்லை இலா.ரொம்ப நன்றிப்பா உடனே பதில் கொடுத்ததுக்கு.

சகோதரி வனிதா,உங்கள் குறிப்பில் கண்டபடி நெய் உருக்கினேன்.நன்றாக அமைந்தது.எதற்காக கல் உப்பு சேர்க்க சொல்லி இருக்கின்றீர்கள்?நெய்யில் முருகிய முருங்கை இலை இன்னும் சூப்பர்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேனகா தாமதத்துக்கு மன்னிக்கவும். வெளியே போய்ட்டு இப்போ தான் வந்தேன். இலா உதவிக்கு மிக்க நன்றி. :) ஆம் மேனகா இலா சொல்வது சரி, வாசமாக இருக்க தான் கீரை, இல்லாமலும் செய்யலாம். ஸாதிகா கல் உப்பு நெய்யின் பக்குவத்தை சரி பார்க்க மட்டும் தான் சேர்க்க சொல்லி இருக்கேன். எப்படியோ நல்லா வந்துட்டுதா?! ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் இப்பதான் வீட்ல முதல்முதலா நெய் காய்ச்சேன்.கீரை சேர்த்து தான் செய்தேன் நல்லா வாசனையா இருந்தது.
ஒரு சந்தேகம் வனி?முருங்கை கீரை எனக்கு அடிக்கடி கிடைக்காது.அதனால் கீரை வாங்கினால் காய வைத்து அதை யூஸ் பண்ணலாமா?

மிக்க நன்றி மேனகா. :) கீரை புதுசா சேர்த்தா தான் நல்லா இருக்கும். இல்லாதப்போ சேர்க்காம செய்யுங்க நல்லா தான் இருக்கும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா