வீட்டிலேயே அன்பளிப்புப் பைகள் செய்வது எப்படி? - பரிசு பொருட்கள் - அறுசுவை கைவினை


வீட்டிலேயே அன்பளிப்புப் பைகள் செய்வது எப்படி?

திங்கள், 01/12/2008 - 16:49
Difficulty level : Medium
3.77778
9 votes
Your rating: None

இந்த அன்பளிப்பு பையினை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

 

  • A4 காகிதம் - ஒன்று
  • ரிப்பன் (30 செ.மீ) - 2
  • அட்டை (8 செ.மீ x 10 செ.மீ) - ஒன்று
  • பசை
  • ஸ்கேல்
  • கத்தரிக்கோல்
  • பென்சில்
  • துளையிடும் கருவி

 

பேப்பர் பை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

படத்தில் காட்டியுள்ளது போல் 3 மூன்று அளவுகளிலும் அட்டை துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

பேப்பரின் நீளமான பக்கத்தினை 2 செ.மீ அளவுக்கு மடித்துக் கொள்ளவும். இதுவே பையின் வாய்பக்கம்.

அகலமான பக்கத்தினை இரண்டையும் இணைத்து இரு பக்கங்களிலும் 2 செ.மீ அளவிற்கு ஒன்றன் மேல் ஒன்று வைத்து ஒட்டி விட்டு ஒரு முறை அழுத்தி விடவும்.

அட்டைகளை ஒட்டி மடித்த இடத்திலிருந்து 4 செ.மீ தள்ளி மீண்டும் ஒரு மடிப்பு செய்துக் கொள்ளவும். சிறியதாக வெட்டிய அட்டை துண்டுகளை வாய்பக்கம் உள்ள மடிப்பினுள் சொருகி ஒட்டி விடவும்.

படத்தில் காட்டியுள்ளது போல் பையை ஒரு முறை மடக்கிக் கொள்ளவும்

பையின் பின்புறம் 4 செ.மீ அளவு அளந்து மடித்துக் கொள்ளவும். பின்னர் இரு மூலைகளையும் மடித்து அழுத்தி விடவும்.

இந்த மடிப்புகளின் வழியே பையின் அடிப்புறத்தை ஒட்டிக் கொள்ளவும்.

மீதமுள்ள அட்டை துண்டை பையின் அடிப்புறம் வைத்து ஒட்டி விடவும்.

பையின் வாய்ப்புறத்தை துளையிடும் கருவியை வைத்து நேர் நேராக துளைகள் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அந்த துளையின் வழியாக ரிப்பன் துண்டுகளை நுழைத்து உட்புறமாக முடிச்சுகள் போட்டுக் கொள்ளவும்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பைகளை அலங்கரித்துக் கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது இதுப் போல் பைகள் செய்து மடித்து வைத்துக் கொண்டால் தேவையான போது எடுத்து அலங்கரித்து கொள்ளலாம். கைப்பழக்கம் வந்துவிட்டால் பிறகு எந்த அளவுக் கடதாசியிலும் பைகள் செய்யலாம்.
இந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..Ima...

இமா... கலக்கிடீங்க.... சூப்பரூ....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வாவ் பை

சூப்பரோ சூப்பர். கண்டிப்ப நான் செய்தபிறகு பின்னுட்டம் அனுப்புகிறேன். மேலும் நிற்ய்ய க்ராப்ட் வொர்க்கள் அனுப்புங்க. நாங்களும் செய்து மகிழ்வோம். இது எல்லாருக்கும் ரொம்ப யூஸ்பூல்.நன்றி.

ஹலோ இமா மேடம்

ஹலோ இமா மேடம்,
சூப்பராக, அழகாக இருக்கிறது. இப்படி இலகுவாக செய்யமுடியும் என்று எனக்கு தெரியாது. குறிப்பிற்கு மிகவும் நன்றி :-) (ஹொலிடே சீசன் என்பதால் இந்த் குறிப்பு மிகவும் உபயோகமானதாக இருக்கும்...)

அன்புடன்,
விசா

அன்பளிப்புப்பை

ஹாய் இமா,
அழகான அன்பளிப்புப்பை. பொருத்தமான நேரத்தில் விளக்கியுள்ளீர்கள். கிறிஸ்மஸ் பரிசு
வழங்குபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள்.நன்றி.
செபா.

இமா எனக்கு ஒரு டவுட்

A4 size paper ஒன்று போட்டிருக்கிங்க ஆனால் பை படம் பார்க்கும் போது 2 தேவைபடுகிறது என்று நினக்கிறேன். டவுட்டை டைம் கிடைக்கும் போது தெரிய படுத்தவும். நன்றி.

நன்றாக உள்ளது

அன்பின் இமா, மிகவும் நன்றாக உள்ளது. ஸீஸனுக்கேற்ற வேலைப்பாடு. :) இன்னும் இன்னும் அனுப்புங்கோ. பாராட்டுக்கள்.
-நர்மதா :)

நன்றிகள்

எனது குறிப்பினை வெளியிட்டமைக்காக அறுசுவையினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
வனிதா,விஜி, விசா, செபா, நர்மதா, உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
விஜி,
சிவப்பு, கருப்பு நிறப் பைகள் தவிர்ந்த ஏனைய அனைத்துமே A4 அளவுக் கடதாசியில் செய்தவைதான். புகைப்படத்தில் பெரிதாகத் தெரிகிறது.
விசா, செய்து பார்த்துவிட்டு மீண்டும் பின்னூட்டம் அனுப்புங்கள் .
எப்படி இருக்கிறீர்கள் நர்மதா? நிச்சயம் நேரம் கிடைக்கும் போது குறிப்புகள் அனுப்புகிறேன்.
செபா, ;-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா

இமா நான் இதை கடையில் வாங்கி வந்து அடுக்கி வைப்பேன் தேவைப்படும் போது உபயோகிப்பதற்கு.
இப்போ 1 செய்து பாத்தனான்.சரியா வந்துட்டுது.சரியான சந்தோசம். இன்னும் செய்து வைக்க இருக்கிறேன்.மிக்க நன்றி.

சுரேஜினி

சுரேஜினி

சுரேஜினி,
இந்தச் செய்முறை உங்களுக்கு உபயோகமாக இருந்தது பற்றி மகிழ்ச்சி. கைப்பழக்கம் வந்துவிட்டால் எந்த அளவுக் கடதாசியிலும் சுலபமாகச் செய்யலாம்.
பாரமான பொருட்களை வைப்பதற்கான பைகளுக்குத் தடித்த கடதாசியும், அட்டையும், மொத்தமான கயிறுகளும் பயன்படுத்தவேண்டும். அடிப்புறம் ஒட்டுவதையும் கவனமாக ஒட்டவேண்டும்.
இதனைச் செய்துபார்த்துக் கருத்துச் சொன்னதற்கு நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா மேடம்

ஹலோ இமா மேடம்,
நேற்று இரவு உங்கள் இந்த பைகள் செய்து பார்த்திட்டேன்! ரொம்ப ஈஸியா மட்டுமில்லாமல் ரொம்ப க்யூட்டாவும் இருந்தது. வேற இரண்டு சைஸிலும் செய்து வைத்திருக்கிறேன். இந்த வீக்கெண்ட் இன்னும் வேற வேற சைஸில் செய்துகொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன். குறிப்புக்கு மிகவும் நன்றி :-)

அன்புடன்,
விசா