மாம்பழப்பால் பாயாசம்

தேதி: December 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. பால் - 6 கப்
2. பாசுமதி அரிசி - 1/3 கப்
3. ஸ்வீடென்டு கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
4. ஏலக்காய் தூள்
5. சிட்டிகை உப்பு
6. கொட்டை நீக்கி, தோல் நீக்கிய மாம்பழ துண்டுகள் - 2 கப்


 

அரிசி கழுவி வைக்கவும்.
பால் கொதிக்கவிட்டு அரிசி சேர்க்கவும்.
சாதம் வெந்து, பால் கெட்டியாக வேண்டும். மிதமான தீயில் சுமார் 40 நிமிடம் அடுப்பில் வைத்து கிளரவும்.
இதில் ஸ்வீடென்டு கன்டென்ஸ்டு மில்க், ஏலக்காய், உப்பு சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கலக்கவும்.
இதை கப்'ல் ஊற்றி, மேலே மாம்பழ துண்டுகள் போட்டு பரிமாறவும்.


ஆர வைத்து ஃபிரிஜில் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். கன்டென்ஸ்டு மில்க், மாம்பழம், பால் சுவையே சரியாக இருக்கும். விரும்பினால் மட்டுமே ருசி பார்த்து சர்க்கரை (சீனி) சேர்த்து கலக்கவும்.

மேலும் சில குறிப்புகள்