மைசூர்பருப்பு பயறு கறி

தேதி: December 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பயற்றம் பருப்பு - 1/4 கப்
மைசூர் பருப்பு - 3/4 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 3
பூண்டு - 5 பல்
மிளகுதூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
பால் - 3 மேசைக்கரண்டி
தாளிக்க :
சின்ன வெங்காயம் - 5
கடுகு - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி


 

வெங்காயத்தை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறிவைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் பருப்பு அவிவதற்கு தேவையான அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்து வரும் போது பயற்றம் பருப்பைப் போடவும்.
5 நிமிடம் கழித்து மைசூர்பருப்பைப் போடவும்.
அதனுடன் வெட்டிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து அவியவிடவும்.
பருப்புகள் அவிந்ததும் மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும்
இரண்டு நிமிடம் கழித்து பால் விடவும். பின்பு தட்டி வைத்துள்ள பூண்டு, மிளகுதூள், சீரகத்தூள், பாதி கறிவேப்பில்லை சேர்த்து கிளறி இறக்கவும்.
வாணலியை வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடித்ததும் சின்னவெங்காய்த்தைப் போடவும் சோம்பையும் போடவும்.
வெங்காயம் வதங்கி வரும்பொழுது காய்ந்தமிளகாயை சேர்க்கவும். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் இறக்கி பருப்புக்கறியில் கொட்டி கிளறி மூடிவிடவும்.


இக் கறி சோறு, புட்டு, தோசை, இட்லிக்கு பொருந்தும்.

மேலும் சில குறிப்புகள்