கடாய் சாதம் (எலுமிச்சை)

தேதி: December 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

1. சாதம் - 2 கப்
2. எலுமிச்சை - 1 (சாறு எடுக்கவும்)
3. வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
4. பூண்டு - 5 பல் (நசுக்கியது) [விரும்பினால்]
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. சீரகம் - 1/2 தேக்கரண்டி
7. உளுந்து - 1 தேக்கரண்டி
8. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
9. மிளகாய் வற்றல் - 3 (அ) பச்சை மிளகாய் - 2 (கீரியது)
10. கருவேப்பிலை
11. உப்பு
12. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி


 

சாதம் உதிரியாக வடித்து வைக்கவும். (இரவு சாதம் இருந்தால் கெட்டி இல்லாமல் உதிரியாக்கவும்).
எலுமிச்சை சாறு, தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் கலந்து வைக்கவும்.
இதை சாதத்தில் நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். (இரவு சாதம் என்றால் இரவே கலந்து வைத்து விடவும்)
கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.
இதில் மிளகாய் வற்றல் (அ) பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
இதில் சாதத்தை கொட்டி கிளரவும். மிதமான தீயில் ஒரு 10 - 15 நிமிடம் கிளரவும்.


சுவையான கடாய் எலுமிச்சை சாதம் தயார். உருளைக்கிழங்கு பொரியல், அப்பளம், மசாலா வடையுடன், நல்லா இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மதிய சமையலுக்கு உங்க கடாய் சாதம்(எலுமிச்சை) பண்ணினேன். ரொம்ப நல்லா இருந்தது .
அபிக்கு எலுமிச்சை சாதம் ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் போகும்போதே மதிய சாப்பாடு என்ன வேணும்னு தெளிவா சொல்லிட்டுதான் போகும்.
எளிமையா செய்யக்கூடிய ஒரு குறிப்பிற்கு நன்றி வனிதா!

அபிக்கு பிடிச்சா அதை விட சந்தோஷம் வேர இல்லை. இருக்கற்துலையே சந்தோஷம், கஷ்டம் இரண்டுமே அவங்களுக்கு சமைக்கிறது தான். :) மிக்க நன்றி கீதா. நானும் ஸ்கூல் போனப்போ நிறைய புளி சாதம், எலுமிச்சை சாதம் தான் கேட்பேன் அம்மா விடம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும்,ஹஸ்க்கும் ரொம்ப பிடித்த சாதம்.இந்த முறையில் செய்தேன் நல்லாயிருந்தது.

பிடித்து இருந்துச்சா மேனகா? மிக்க நன்றி. என்னையும் சேர்த்துக்கங்க.... எனக்கு எலுமிச்சை, புளி சாதம், தாளித்த தயிர் சாதம் உருளைக்கிழங்கு பொரியலோட குடுத்தா வேர எதுவுமே வேணாம்'னு சந்தோஷமா சாப்பிடுவேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கலந்த சாதம் எல்லாமே, முக்கியமா எலுமிச்சை, புளி, தக்காளி சாதம் எல்லாமே எனக்கும் ரொம்ப இஷ்டம்! : )
இன்று இரவு இந்த கடாய் ஸ்டைல் எலுமிச்சை சாதம் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. குறிப்புக்கு நன்றி வனிதா!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மிக்க நன்றி ஸ்ரீ :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா