பைனாப்பிள் கொத்சு

தேதி: December 2, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பைனாப்பிள் - 1
வெங்காயம் - 1
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
புளி - நெல்லிகாய் அளவு
உப்பு - 1 தேக்கரண்டி
வெல்லம் - கொஞ்சம்
தாளிக்க:
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி


 

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவற்றை போட்டு தாளித்து அதில் வெங்காயத்தை போட்டு பத்து நிமிடம் வதக்கவும்.
வதங்கிய பிறகு அதில் துண்டுகளாக்கிய பைனாப்பிளை போட்டு அதில் வெல்லம், புளி கரைசல், உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு மூடி வைக்கவும்.
நன்றாக கொதித்து கெட்டியாக வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது நல்ல பைனாப்பிள் கொத்சு ரெடி.


இந்த பழத்தில் வைட்டமின் C அடங்கியுள்ளது. இது உடம்பின் ரத்த சுத்திக்கும் ஏற்றது.
இங்கு டின் பைனாப்பிள் கூட சேர்க்கலாம். அதில் சீனி இருப்பதால் வெல்லம் சேர்க்க வேண்டாம். வெங்காயம் போடாமலும் செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்