பைனாப்பிள் ஸ்மூத்தி

தேதி: December 2, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பைனாப்பிள் ப்ரெஷ் - 1
வாழைப்பழம் - 1
தேன் - 1 தேக்கரண்டி
பால் - 3/4 கப்


 

எல்லாவற்றையும் ஒன்றாக புட் ப்ரோச்சரிலோ அல்லது ஜூஸரிலோ போட்டு நல்ல நுரைத்து வரும் போது நிறுத்தவும்.
இதை ப்ரிட்ஜில் வைத்து பருகலாம்.


இது கொலஸ்ட்ரால் இல்லாதது. இதில் ஃபைப்பர் நிறைய உள்ளது.
இதில் தேனுக்கு பதிலாக 1 தேக்கரண்டி சீனி சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

விஜி! பைனாப்பிள் ஸ்மூதி நல்லா இருக்கு வாழைபழம் போட்டதால் கிரீமியாக இருக்கு.பிரீசரில வைத்து சாப்பிடுறமாதிரி ரெஸிபி உங்க லிஸ்ட்ல சொல்லுங்க. தேடாம சீக்கிரம் சமைக்கிறேன் :))

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மிளகு குழம்பு, வெந்தய குழம்பு,
குருமா நிங்க செய்திட்டு சூடு ஆறிய பின்
அதை 2 அல்லது 3 ஆக ஒரு சின்ன சிப் லாக்
கவர் அல்லது கண்டெயினரில் போட்டு வைக்கவும்.
கெடவெ கெடாது. சாப்பிடுவதற்க்கு 1/2 மணி நேரம்
முன்பு எடுக்கவும்.

பொரியல் தேங்காய், தக்காளி பூண்டு சேர்க்காமல் சமைத்து
ப்ரிசரில் கொஞ்சம் ப்ரிட்ஜில் கொஞ்சம் வைக்கவும்.
பீன்ஸ், கோவக்காய்,அவரை போன்றவையில் செய்யுங்க
கெடாது.

துவையல், கொத்தமல்லி,கறிவேப்பிலை, தேங்காய் சேர்க்காமல்
செய்தால் ப்ரிட்ஜில் 2 நாட்களும் ப்ரிசரில் 1 வாரமும்
வைத்து சாப்பிடலாம். தக்காளி தொக்கு நன்றாக கெடாமல் இருக்கும்.

புளிகாய்ச்சல் செய்து வைக்கலாம்.இல்லை கடையில்
777 ப்ராண்ட் ரொம்ப நன்றாக இருக்கும் அதை
கூட சூடு சாதத்தில் போட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.