ஆட்டுக்கால் பாயா

தேதி: December 3, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சுத்தம் செய்த ஆட்டுக்கால் - 2 கப்
சீரகபொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 2 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2
எண்ணெய் - 3 டீஸ்பூன்
மிளகுப்பொடி - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்


 

ஆட்டுக்காலை சுத்தம் செய்து இரண்டு இன்ச் நீளத்திற்கு நறுக்கி, 3 கப் நீரில் உப்பு சேர்த்து குக்கரில் வேக விடவும்.
வெந்த ஆட்டுக்காலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி, அதே குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
ஜிஞ்சர், கார்லிக் பேஸ்ட் சேர்த்து வாசனை வரும் வரை கிளறவும்.
வெந்த கால், மசாலா பொருட்கள் இன்னும் சிறிது உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து மேலும் ஒரு விசில் வரும்வரை வேகச்செய்து சூடாக சாப்பிடவும்.


மேலும் சில குறிப்புகள்