பட்டிமன்றம்-9

வணக்கம் தோழிகளே!என்னை நடுவராக தேர்ந்தெடுத்த முன்னைய நடுவர் சுரேஜினிக்கு என் நன்றிகள்!அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு ## மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ கூட்டுக்குடும்பமா தனிக்குடித்தனமா சிறந்தது?#

நம் முன்னோர்கள் தாத்தா பாட்டி அப்பம்மா அப்பப்பா மாமாமார் அத்தைமார்,பெரியப்பாமார் பெரியம்மாமார்,சித்தப்பாமார் சித்திமார்,அண்ணன்மார் தங்கைமார்,அத்தான்மார் மச்சான்மார் என்று இலங்கை வானொலியில் வாழ்த்து சொல்பவர்கள் லிஸ்ட் போல் சேர்ந்து கூட்டாக பெரிய குடும்பமாக வாழ்ந்தனர்.பின்னர் மாமனார் மாமியார் கணவன் மனைவி குழந்தைகள் என சிறிய கூட்டு குடும்பமாக வாழ்ந்தனர்.இப்போது அதுவும் சுருங்கி கணவன் மனைவி குழந்தைகள் மட்டும் கொண்ட குடும்பமாக சுருங்கி விட்டது.எப்படிப் பட்ட குடும்பமாக இருந்தாலும் விட்டுக் கொடுத்தலும் புரிதலும் அன்பும் பாசமும் இருந்தால் மட்டுமே அங்கு மகிழ்ச்சி இருக்கும்.மகிழ்ச்சியான குடும்ப்பம்தான் சிறந்த குடும்பமாக இருக்க முடியும்.

இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவி,குழந்தைகள் இவர்களை மட்டும் கொண்ட குடும்பங்களை தனிக்குடித்தனம் செய்யும் குடும்பங்களாகவும்,இவர்களோடு தாய் தந்தை மற்ற உறவினர்களை கொண்டது கூட்டுக் குடும்பம் என்றும் கருதி உங்கள் வாதங்களைத் தொடங்குங்கள்.

*********மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ சிறந்தது எது?கூட்டுக்குடும்பமா?தனிக் குடித்தனமா?******************

பின்குறிப்பு:
இந்த பட்டிமன்றத்தை ஒட்டிய உங்கள் கருத்துக்களையும்,இந்த பட்டிமன்றத்தில் எதிரணியினர் செய்யும் வாதங்களுக்கு மட்டுமே எதிர்வாதம் செய்யும் படியும் தோழிகளைக் கேட்டுக் கொள்கிறேன்.அந்த பட்டிமன்றத்தில் அப்படி சொன்னீர்கள் இங்கே இப்படி சொல்கிறீர்கள் என்பது போன்ற வாதங்களை தவிர்த்து விடுங்கள்.ப்ளீஸ்

அன்புடன்
கவிசிவா

வாங்கோ வாங்கோ பட்டிமன்றம்9 ஆரம்பிச்சாச்சு.வந்து கருத்துக்களை அள்ளிக் கொட்டுங்கோ.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே!! எனக்கு குழப்பமாகவே இருக்கு, என்னைப்போல்தான் எல்லோரும் குழம்பிக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

எங்களுடைய சந்தோசத்திற்கு தனிக்குடித்தனம் தான் சிறந்தது, ஏனெனில் என் உடம்பில் இளரத்தம் ஓடுகிறது, தனியே என்னால் எதையும் செய்ய முடியும். கணவரின் அன்பு ஒன்று இருந்தாலேஎ தனிமையில் சொர்க்கம்தான்.

ஆனால், எனக்கும் ஒருநாள் வயதாகும், அந்நேரம் எனக்கும் ஆறுதல் தேவைப்படும் அப்போ கூட்டுக்குடும்பம்தான் சிறந்ததாக இருக்கும். பிள்ளைகளுக்கும், கூட்டுக்குடும்பத்தில்தான் மகிழ்ச்சி அதிகம் இருக்கும். கூட்டுக்குடும்பத்தில் வளரும் பிள்ளைக்கு, எதையும் சகிக்கும் தன்மை, விட்டுக்கொடுக்கும் தன்மை, அஜஸ் பண்ணி நடக்கும் பண்புகள் அதிகமாக இருக்கும் என நான் எண்ணுகிறேன்.

ஆனால் கூட்டுக்குடும்பத்தில், நிறைய சிக்கல்கள் இருக்கிறது, கணவரோடு ஆசையாக 2 வார்த்தைகள் பேசுவது கூட கஸ்டமே, இளமையின் இனிமையை தனிமையில் அனுபவிப்பதில் தான் சுகம் அதிகம், என்றுதான் எண்ணுகிறேன். கூட்டுக்குடும்பம் எனும்போது பெற்றோரை மட்டும் கொண்டதாயின் நிட்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே... ஆனால் அதற்கு அப்பால் நாத்தனார் குடும்பம்... சகோதரர் குடும்பம் என்று சேரும்போது அதில் எங்கே மகிழ்ச்சி இருக்கப்போகிறது.

நான் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தனிக்குடும்பமே சிறந்ததென வாதாட வருகிறேன்.

ஆனாலும் மனதில் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது......, நாடகங்களில் வருமே... மனசாட்சி வெளியே வந்து பேசும் , அப்படித்தான் என் மனசாட்சி சொல்கிறது.... " அதிரா, வருங்காலத்தில் உன் பிள்ளைகள் உன்னைவிட்டுப் போனால் அதை உன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா?" என்று என்னைப் பார்த்துக் கேட்கிறது. நான் கூட்டுக்குடும்பமாக இல்லாமல், ஒரு மாடியில் பிள்ளைகள் ஒருமாடியில் பெற்றோர் இப்படி இருந்தால் சிறப்பானது என எண்ணி ஆறுதல் அடைகிறேன்.

எது எப்படி இருப்பினும்... தனிக்குடும்பம் தான் மகிழ்வைத்தரும்.
*.வேலையால் வரும் கணவரை அன்போடு உள்ளே அழைத்துவர முடிகிறது.
*இன்று முடியவில்லை, கொஞ்சம் படுக்கப்போகிறேன், நீங்களே எல்லாவற்றையும் பாருங்கள், எனச் சொல்ல முடிகிறது.
* எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இன்ரநெற்றில் இருக்க முடிகிறது... ஆசையோடு ஒரு ரீ கிடைக்குமா? என கணவரைக் கேட்க முடிகிறது.
* பிள்ளைகளுக்கு நினைத்த நேரம் பாடம் சொல்லிக்கொடுக்கவும், பழக்க வழக்கங்களைப் பழக்கவும் முடிகிறது( என் மூத்தவர் சொல்வார்.... அம்மப்பா நின்றால், ஹோம் வேர்க் செய்யாமல் அவர் மடியில் ஓடிப்போய் இருக்கலாம், அவரும் இன்று வேண்டாம் என்று சொல்வார், என்று எனக்குச் சொல்லி பீல் பண்ணுவார்).
* உரக்க பெயர் சொல்லி கணவரை ஆசையாக அழைக்க முடிகிறது... அவரும் மாடியில் நின்று... இதோ வருகிறேன் என மனைவியின் பட்டப்பெயரைச் சொல்லிக் கத்த முடிகிறது...

இவையெல்லாம் மகிழ்வான விஷயங்கள் தானே... நடுவர் அவர்களே... இக் குளிரிலும் எனக்கு வியர்க்கிறது..... பெற்றோருக்கு பாவம் செய்து, தனிக்குடித்தனம் தான் சிறந்ததென வாதாடுகிறேனோ என எண்ணித்தான்.....

பெரியோர்கள் அனுபவித்துத்தானே கூறியிருக்கிறார்கள் " எலிவழையானாலும் தனி வழை தான் வேண்டும்" என்று. பிறகென்ன அதிரா வீண்பயம் வேண்டாமே..... " யாமிருக்கப் பயமேன்" ....... என் காதலன் கூறுகிறார்(முருகக்கடவுள்)... மீண்டும் வருகிறேன்...

தவறிருப்பின் அதட்ட வேண்டாம்... பின் என் ஊக்கத்தை முளையிலேயே கிள்ளியது போலாகிவிடும்.... எனவே நடுவர் அவர்களே பால் குடித்து உற்சாகமாக இருப்பீங்கள்.... கலக்குங்கோ...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நீங்கள் கொடுத்த பால் குடித்தேன்.கொஞ்சம் மயக்கம் வருகிற மாதிரி இருக்கு.எதாச்சும் கலந்துட்டீங்களா? :-)

அடி ஆத்தீ அதிரா சொல்றதைக் கேட்டீங்களா தனிக்குடித்தனத்தில்தான் வீட்டுவேலைக்கு மட்டம் போட முடியுமாம்.ஆத்துகாரரை பேர் சொல்லி கூப்பிட முடியுமாம்.புள்ளைங்களுக்கு ஒழுங்க பாடம் சொல்லிக் கொடுக்க முடியுமாம்.வூட்டுக் காரர் டீ எல்லாம் போட்டுக் கொடுப்பாராம்.உங்கள் கூட்டுக் குடும்பத்தில் நடக்குமாங்கறார்?என்ன சொல்லப்போறீங்க கூட்டுக்குடும்பத்தை சேர்ந்தவர்களே!
தனிக்குடித்தனக்காரர் தனிய்யத்தான் இருக்கறார்.கூட்டுக்குடும்ப மக்களே கூட்டமா வந்து பதில் கொடுங்க!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நாம் உறவினர் அருகில் இருப்பதை விட தூரம் இருப்பதே நல்லது.
1.கணவனுடன் எங்காவது வெளியில் போக ஆசையாக கிளம்பினால் நமக்கு துணையாக இருவர்......

2.ஆசையாக உணவூட்ட முடியாது..

3.தோட்டத்தில் கணவனுடன் அன்பாகப் பேச முடியாது....

இவற்றை விட குழந்தை இல்லாத என் போன்ற பெண்கள் கூட்டுக் குடும்பத்தில் நிம்மதியாக முச்சி விடுவதற்கு கூட முடியாது...எத்தனை அவமானங்கள்... நம் முன்னாலே கணவனுக்கு வேறு திருமணம் செய்யப்போவதாகப் பேசி காயப்படுத்துவது...ஆனால் தனிக்குடும்பத்தில் இவை எதுவும் இல்லை...என்னைப் பொருத்த வரையில் சந்தோஷம் மட்டுமே நிறைந்த தனி உலகம் இது..........

Salaam

வாங்க திருமதி.ராஃபி.மூணே பாயிண்ட் சொன்னாலும் முத்தாக சொல்லியிருக்கீங்க.நீங்க சொல்வதும் உண்மைதானே கூட்டுக் குடும்பத்தில் குழந்தைக்கு ஊட்டவே நேரம் இருக்காது இதில் எங்கே கணவனுக்கு ஊட்ட?

கூட்டுக்குடித்தனகாரர்களே எங்கே போயிட்டீங்க?தனிக்குடித்தனக் காரங்க சொல்ற மாதிரி கூட்டுக் குடும்பத்தில் வேலை அதிகமோ?அதான் யாரையும் காணோமோ?ஒரகத்திமேல வேலையை இறக்கி வச்சுட்டு ஓடி வாங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆண்டவா இந்த டாபிக்ல நான் பேச மாட்டேன். ரொம்ப ஒரு தலை பட்சமா இருக்கறதோட இல்லாம எனக்கு நிம்மதியும் போயிடும். இந்த வாரம் நிறைய கெடு வேற இருக்கு.. நான் அப்பீட்டு, தப்பா நினைக்காதீங்க கவிசிவா..!

அன்புடன்,
ஹேமா.

அன்புடன்,
ஹேமா.

இது நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தலைப்பு தான். இன்றைய சூழ்நிலைக்கு யோசிக்க வேண்டிய தலைப்பை கொடுத்துள்ள சுரேஜினிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

என்னை பொருத்த வரை கூட்டுக்குடும்பத்தில் பாதுகாப்பு, நிம்மதி, மகிழ்ச்சி எல்லாமே நிறைந்திருப்பதாக தான் தெரியும். ஆனால் உள்ளே போய் பார்க்கும்போது தான் அதில் உள்ளவர்களின் மன வேதனைபுரியும்.

திருமணத்துக்கு முன் நிறைய பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் போய் வாழ்ந்து நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற கலர் கலரான கனவுகளோடு தான் போகிறார்கள். அங்குள்ளவர்களின் உண்மையான முகம் வெளிப்படும்போது தான் தனிக்குடித்தனம் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறார்கள்.
எதையும் தவறான கண்ணோட்டதிலே பார்க்காத நல்ல மனதும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் இருந்தால் வாழ்க்கை சொர்க்கம் தான். ஆனால் இந்த குணங்கள் எல்லாம் நமக்கு தேவையில்லை, வாழவந்த மருமகளுக்கு மட்டும் இருக்கவேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் இருக்கும் வரை கூட்டுக்குடும்பம் நிச்சயம் நரகம் தான். அதிலும் தன் பெண் தனிக்குடித்தனம் இருக்க வேண்டும் ஆனால் மருமகள் மட்டும் நம்மோடு இருந்துக்கொண்டு தலையாட்டி பொம்மையாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் தான் ஏராளம்.

மாமியார், மாமனார், நாத்தனார், கொழுந்தனார் அனைவரையும் அனுசரித்து நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும் பெண்ணின் பெற்றோர்கள் எது வரை, எந்த சமயத்தில், எப்படி என்ற வறைமுறைகளையும் சொல்லுவதில்லை. அதனால் மாமியார் வீட்டுக்குள் நுழையும்போதே நல்லப் பெயர் எடுப்பதே வாழ்வின் இலட்சியமாக நினைத்துக்கொண்டு, அவர்கள் குட்ட குட்டக் குணிந்துக்கொடுக்க வேண்டியிருக்கிறது. நேரடியாக குட்டி குட்டி தாக்குபவர்களை கூட சீக்கிரம் புரிந்து கொள்ளளாம். ஆனால் முதுகில் தட்டி தட்டி கொடுத்தே நம்மை எழவிடாமல் செய்பவர்கள் தான் ஆபத்து.

இப்படி ஆரம்பத்தில் ரொம்ப நல்லவர்களாக(?) இருந்துவிட்டு நாம் இத்தனை நாற்கள் புன்னகை அரசியாக (இளிச்சவாய்) தான் இருந்திருக்கிறோம் என்பதை புரிவதற்க்குள் 1/4 வாழ்க்கை போய்விடுகிறது. மிச்ச நாற்களையாவது குழந்தைகள் நலனுக்காக வாழத்திட்டமிடும்போது தான் கலவரமே ஆரம்பிக்கிறது. இப்பல்லாம் நம்மை எதுவும் கேற்பதில்லை என்று ஆரம்பிப்பதும் "நாங்கள் எல்லாம் அந்த காலத்தில" என்று வசணங்களும் ஆரம்பமாகும். ஒருவேளை வாழ்க்கையின் ஆரம்பமே தனிக்குடித்தணத்தில் ஆரம்பித்தவர்களுக்கு வேண்டுமானால் கூட்டுக்குடும்பம் என்றால் சினிமாவில் வருவதுப்போல் தெரியலாம். ஆனால் வாழ்ந்து அனுபவித்து அடிப்பட்டு வந்தவர்களுக்கு தான் அதன் வலி புரியும். கணவரை பெற்றவர்கள் என்ற காரணத்துக்காக அவர்களுக்கு வேண்டுமானால் சேவை செய்யலாம். ஆனால் உள்ளூரில் இருந்துக்கொண்டு மாதத்தில் பாதி நாற்கள் அம்மாவிடம் சீராட வருவதுமில்லாமல் மருமகளை பற்றி என்ன குறைசொல்லிவிட்டு போகலாம் என்று அலையும் நத்தனார்கள் இருக்கும் வரை கூட்டுக்குடும்பம் நெருப்பாகத்தான் இருக்கும்.

அதிலும் எல்லா வரவு சிலவுகளும், நல்லது கெட்டதும் தங்கள் விருப்பப்படி தன்னுடைய கட்டுப்பாட்டிலே வைத்துக்கொள்வதால் எதிர்பாரா சம்பவங்கள் ஏற்படும்பொழுது எதையும் எதிர் கொள்ளமுடியாத சூழ்நிலைக்கு ஆளாகிறோம்.
இப்போது நிறைய பேர் வெளிநாட்டில் செட்டில் ஆவதால் தனிக்குடித்தனம் ஆரம்பத்திலே போய் விடுகிறார்கள். அதனால் சிறிது பிரச்சிணைகள் புரிவதில்லை தான். அதற்காக பல்லாயிரம் மைல்கல் தாண்டி வந்து விட்டாலும் பார்வையிலிருந்து தான் தப்பலாமே தவிற அவர்கள் வார்த்தைகளில் இருந்து தப்பவேமுடியாது. நம் பெற்றோர்கள், உறவிணர்களை பிரிந்து வாழ்வது வேதனையான விஷயம் தான் என்றாலும் இவர்களிடமிருந்து தப்புவது அதைவிட நிம்மதியான விஷயமாக தான் பலருக்கு இருக்கிறது. அதற்காக நான் கூட்டுகுடும்பத்துக்கு எதிரி இல்லை. பலரோடு சேர்ந்து சந்தோசமாக ஒற்றுமையோடு வாழவேண்டும் என்று ஒரு காலத்தில் கனவு கண்ட நான் தான் இப்போது தனிக்குடித்தனமே மேல் என்கிறேன்.

அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்து தேவைபடும்போது ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி வாழ்ந்தால் எல்லாருக்கும் மகிழ்ச்சிதான். அதையும் ஒரே வீட்டில் இருந்துக்கொண்டு தான் செய்ய வேன்டுமென்று இல்லை. விலகி இருந்து எப்போதாவது சேரும்போது தான் பிறரின் அருமை புரியும்.

இத்துடன் அதிரா சொல்லியிருக்கும் அந்த 5 மகிழ்வான விஷயங்களையும் வழிமொழிகிறேன். (நன்றி அதிரா. :-) டைப் செய்ய சோம்பல்)

அதனால் அமைதியும், சுதந்திரமும், பொறுப்புணர்வும், கணவன் மனைவி ஒற்றுமையும் நிறைந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நிச்சயம் தனிக்குடித்தனத்தில் தான் இருக்கிறது என்று என் பக்க வாதத்தை வைக்கிறேன்.

நன்றி,
jija

நன்றி ஜிஜா உங்கள் கருத்துக்களை அழகா அம்சமா எடுத்து வச்சுரிக்கறீங்க.
ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே இருப்பது ஈறும் பேனாம் என்பது போல கூட்டுக் குடும்பம் வெளியில் இருந்து பார்க்க அழகாகத்தான் இருக்கும் உள்ளே போனால்தான் தெரியும் அங்குள்ள பிரச்சினைகள் என்கிறார்கள் தனிக்குடித்தனக் காரர்கள்.

தனிக்குடித்தனக் காரர்கள் தனியாக இருந்தாலும் கூட்டாக வந்து பட்டிமன்றத்தில் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார்கள்.கூட்டுக் குடும்பத்தினரை தனியாகக் கூட இந்தப் பக்கம் காணோம்!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பாவம் சின்னப்பொண்ணு மக்கு மேனேஜரோட மல்லு கட்டிகிட்டு இருக்கறதால் சும்மா விடறேன்.இல்லாங்காட்டி.....

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பட்டி மன்றத்தலைவிக்கு வாழ்த்துக்கள் (பேர் சொல்லக் கூடாத்ல்லோ?)
என்ன, தீர்ப்பு ரொம்ப ஈசியாப்பா, எதிரணிக்கு எனக்கு தெரிந்து இருவர் மட்டுமே வாதாடுவார்கள்.
பார்ப்போம்.
ஆனா, வெரி சாரிப்பா, என்னால கலந்துக்க முடியாது. காரணம் தான் தலைவிக்கு தெரியுமே:-)
இருந்தாலும் என்னோட ஓட்டும் தனிக்குடித்தனத்திற்கு தான். கவி, இதையும் ஓட்டெடுப்பில் சேர்த்துக்கோ.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்