நம்மூர் குருமா வைக்க யாராவது வழி சொல்லுங்களேன்(காரமாக)

நான் கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய் துருவலை குருமாக்கள் செய்யும்போது சோம்புடன் அரைத்து ஊற்றினேன்,ஆனால் குருமா நம்மூர் குருமாபோல் வருவதில்லை,இனிப்பாகவும் தேங்காய் வாசனையுடனும் வருகிறது,எனக்கு நம்மூர் குருமா வைக்க யாராவது வழி சொல்லுங்களேன்(காரமாக)
சுதாஸ்ரீ

அன்பு சுதா,
தேங்காய்த்துருவலை லேசாக வறுத்து அரைக்கவும். காரம் வழக்கத்தை விட சிறிது அதிகம் சேர்க்கவும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

நன்றி செல்வி அக்கா.என் பெயர் சித்தி ஹாஜரா.நீங்கள் சொல்வது போல் முயற்சிக்கிறேன்.இன்னும் மைக்ரோவேவ் பற்றி உங்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் கூருங்கல் என்னை போன்றவர்கலுக்கு உதவியாக இருக்கும்

குருமா காரமாக இருக்க இரண்டு மிளகாய் கீரிப்போடுங்கள்.தேங்காய் கொஞ்சம் ,முந்திரிபருப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து ஊற்றுங்கள்.இனிப்புச்சுவை அதிகம் இல்லாமல் கெட்டியாக இருக்கும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டியர் சுதா இங்குள்ள ரெடி மேட் தேங்காய் துருவலில் அது போல் தான் வாசனை வருகிறது.
வேண்டுமானால் செல்வி அக்கா, ஆசியா சொன்னது போல் செய்து பாருஙகள்.

இல்லை என்றால் மொத்தமா முன்று தேங்காய் வாங்கி முன்றாக பிரித்து ஒரு பகுதியை கீரி பத்தைகளாகவும். ஒரு பகுதியை மிக்சியில் துருவியும், மற்றொரு பகுதியை அதில் முந்திரி, பாதம் சேர்த்து அரைத்தும் பீரிஜரில் போடு விடுங்கள்.

தேவை படும் போது செய்வதற்கு அரை மணி நேரம் முன் எடுத்து வைத்து கொள்ளுங்கள் கரண்டியால் தேவைக்கு எடுத்து போட்டு கொண்டு மீதியை மறுபடி பீரிஜரிலேயே வைத்து கொள்ளுங்கள்.
அந்த தேங்காய் தண்ணீரை வடிகட்டி கடற்பாசி செய்து கொள்ளுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

குழம்பு கொதிகும் பொது மிலகு துள் கொஞ்சம் பொடலாம், அல்லது தெங்காய் அரைகும் பொது பெரும்சிரகம் செர்து அரைகவும் சுவை மட்ரும் காரமும் கிடைகும்.

மிக்க நன்றி,இரண்டு நாட்களாக அறுசுவை பக்கம் வரமுடியவில்லை தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்,இனிமேல் நீங்கள் சொன்ன முறைகளில் முயற்சி செய்கிறேன்,நன்றி செல்வி மேடம்,ஜலீலா மேடம்,சாரா மேடம்,அசியா மேடம்.
சுதாஸ்ரீ

sudhasri

மேலும் சில பதிவுகள்