முந்திரி மசாலா

தேதி: December 6, 2008

பரிமாறும் அளவு: 3பேருக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முந்திரி - 100 கிராம்,
பெரிய வெங்காயம் - 3,
தக்காளி - 2 (அரைத்தது),
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
சீரகத்தூள் - 2 தேக்கரண்டி,
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி,
கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி,
சிவப்பு கேசரி கலர் - 1/4 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 2,
தேங்காய்த்துருவல் - 1கப் (100கிராம் அளவு),
சர்க்கரை இல்லாத கோவா - 50 கிராம்,
முந்திரி - 6 (அரைக்கவும்),
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி,
நெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி முந்திரியை கருகாமல், சிவக்க வறுத்து எடுத்து வைக்கவும்.
அதிலேயே எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, மிளகு தூள், உப்பு, கலர் எல்லாம் சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும், தக்காளி அரைத்த விழுது சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து, கோவா, அரைத்த முந்திரி விழுது, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் வறுத்த முந்திரி, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
ஹோட்டல் போல் ரிச்சாக வேண்டுமானால், 2 மேசைகரண்டி கிரீம், பொரித்த பனீர் துண்டுகள் சேர்க்கலாம். சப்பாத்தி, நான், புல்காவிற்கு நன்றாக இருக்கும்.


இங்கெல்லாம் ஒரு சீசனில் பச்சை முந்திரி கிடைக்கும். அதை உரித்தும் இதே போல் செய்யலாம். வறுக்க முடியாது. லேசாக நெய்யில் வதக்கி சேர்க்கணும். நிறைய கிரேவி வரவேண்டுமானால் தேங்காயை அரைத்தும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் செல்விம்மா,
எப்படி இருக்கீங்க?இப்போ உடம்பு எப்படி இருக்கு பரவாயில்லையா...
முந்திரி மசாலா ரெசிபி கொடுத்திடீங்க,thanks செல்விம்மா.ஆனா, கோவா போடனும்னு சொல்லி இருக்கீங்க, இங்க கிடைக்காதே. அது இல்லாம செய்தா நல்லா இருக்குமா.....கோவா வீட்லயே செய்ய முடியுமா செல்விமா?
அன்புடன்,
விஜி

அன்பு விஜி,
நான் நல்லா இருக்கேன், இப்ப பரவால்ல. நீ எப்படியிருக்கே?
கோவா இல்லைனா கால் லிட்டர் பாலை சுண்ட காய்ச்சினா கோவா போல வரும், அதை சேர்த்துக்கலாம். பாலும் கிடைக்காது, பவுடர் தான் கிடைக்கும்னா, தேங்காய் பாலோ, க்ரீம் கொஞ்சம் கூடவோ சேர்த்தால் போதும். எப்படினாலும் சரி, விடாம சமைச்சு பார்த்திடு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அம்மா, எனக்கு ஒரு சந்தேகம்.
//இரண்டு நிமிடம் கழித்து, கோவா, அரைத்த முந்திரி விழுது, ஒன்றரை டம்ளர் சேர்த்து கொதிக்க விடவும்.//
இதில் கோவா, அரைத்த முந்திரி
விழுது, ஒன்றரை டம்ளர் இருக்க வேண்டுமா?அல்லது
தண்ணீரை சேர்க்க வேண்டுமா?
ப்ரீதா

ப்ரீதா

அன்பு ப்ரீதா,
ஒன்றரை தம்ளர் தண்ணீர் தான் சேர்க்க வேண்டும். குறிப்பில் சரி செய்து விட்டேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்விமா,
நலமா ? நான் நல்லா இருக்கேன். நேத்து நைட் சப்பாத்தி,முந்திரி மசாலா செய்தேன். நல்லா இருந்தது.க்ரீம் சேர்க்கலை, கோவாவும் தேங்காய் பாலும் சேர்த்தேன்.நன்றி செல்விம்மா
அன்புடன்
விஜி

ஹாய் விஜி,
கடைசியா ஹோட்டல் டேஸ்ட் வந்ததா, இல்லையா? அதை சொல்லவே இல்லையே!க்ரீம் சேர்ப்பது நம் விருப்பம் தான். விருந்தினர் வரும் போது க்ரீம் சேர்த்தால் ரிச்சாக இருக்கும். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.