க்ரிஸ்பி ஃபிரைட் சிக்கன்

தேதி: December 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

1. கோழி - 1 கிலோ
2. மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
3. மல்லி தூள் - 1 மேஜைக்கரண்டி
4. மிளகு தூள் - 2 தேக்கரண்டி
5. மைதா - 1 கப்
6. சோள மாவு - 1/2 கப்
7. உப்பு

(அ)

1. கோழி - 1 கிலோ
2. மிளகாய் வற்றல் - பொடியாக நுனுக்கியது 1 மேஜைக்கரண்டி
3. மல்லி - வறுத்து பொடித்தது 1 தேக்கரண்டி
4. மிளகு தூள் - 1 தேக்கரண்டி
5. சீரக தூள் - 1 தேக்கரண்டி
6. மைதா - 1 கப்
7. சோள மாவு - 1/2 கப்
8. உப்பு


 

கோழியை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்.
மாவு, பொடிகள், உப்பு எல்லாம் கலந்து வைக்கவும்.
ஒரு பாதி மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கரைக்கவும்.
அதில் சிக்கன் துண்டுகளை நன்றாக முக்கி, 4 - 6 மணி நேரம் ஃபிரிஜில் வைக்கவும்.
மீண்டும் எடுத்து மீதம் இருக்கும் கரைக்காத மாவில் பிரட்டி 10 - 15 நிமிடம் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.
இதை எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
மொறுமொறு கோழி ஃபிரை தயார்.


மேலே குடுத்திருக்கும் 2 மசாலா கலவையும் நன்றாக இருக்கும். எலும்பு இல்லாத கறி என்றால் தண்ணீரில் கரைக்காமலே 2 முறை பிரட்டி வைத்து செய்யலாம். ஆனால் கோழி கால் (அ) சிக்கன் விங்க்ஸ் [லாலிபாப் போல செய்தது] பயன்படுத்தினால் ஹோட்டலில் சாப்பிடுவது போலவே இருக்கும். * காரம் உங்கள் விருப்பத்திற்கு சேர்க்கவும்.

மேலும் சில குறிப்புகள்