சாட் பேப்பரில் தாமரை மலர்கள் செய்வது எப்படி?

தேதி: December 9, 2008

4
Average: 3.7 (9 votes)

 

ஐஸ்க்ரீம் கப் - 2
சாட் பேப்பர்(வெள்ளை)
சம்கி
ஃபெவிக்கால்
பெயிண்ட்(வெள்ளை, சிவப்பு, பச்சை)
கத்திரிக்கோல்
பிரெஷ்
பென்சில்

 

தாமரைப்பூ செய்வதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு சாட் பேப்பரில் பூவின் இதழ் போல வரைந்துக் கொண்டு அதை நறுக்கி மற்றொரு பெரிய சாட்டில் வரைந்து 6 இதழ்கள் நறுக்கிக் கொள்ளவும். இதைப் போல் இலை வரைந்து அதை நறுக்கி அதை வைத்து 6 இலைகள் வரைந்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளை மற்றும் சிவப்பு நிற பெயிண்ட்டை கலந்தால் லைட் ரோஸ் நிறம் கிடைக்கும். ப்ரெஷ்ஷால் இந்த பெயிண்ட்டை நறுக்கி வைத்திருக்கும் இதழ் மேல் அடிக்கவும்.
அதன் பிறகு பச்சை நிற பெயிண்ட்டை ப்ரெஷ்ஷால் இலையில் அடிக்கவும்.
இதைப் போல் 6 இதழ்கள் மற்றும் 6 இலைகளிலும் பெயிண்ட் செய்துக் கொள்ளவும். பெயிண்ட் செய்த இதழ்கள் மற்றும் இலைகளை ஒரு மணி நேரம் காய வைக்கவும்.
ஐஸ்கிரீம் கப்பை தேவையான அளவு நறுக்கிக் கொள்ளவும். அதில் உள்பக்கம் மற்றும் வெளிபக்கங்களில் மஞ்சள் நிற பெயிண்டை அடித்து காய வைக்கவும்.
பெயிண்ட் அடித்து காய வைத்திருக்கும் இதழ்களை எடுத்து ஒரு இதழ் முனையின் மேல் மற்றொரு இதழிலின் முனையை வைத்து ஒட்டிக் கொள்ளவும்
மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து வைத்திருக்கும் ஐஸ்கிரீம் கப்பின் அடியில் பெவிக்காலை தடவி ஒட்டி வைத்திருக்கும் இதழ்களின் மேல் வைத்து அழுத்தி ஒட்டவும். விருப்பப்பட்டால் ஐஸ்கிரீம் கப்பின் வாய்ப்பகுதியில் சம்கிகளை வைத்து ஒட்டி அலங்கரிக்கலாம்.
பின்னர் இரண்டு இதழ்களுக்கும் நடுவில் ஒரு பச்சை நிற இலையை வைத்து ஒட்டவும். இதைப் போல் சுற்றிலும் 6 இலைகளையும் வைத்து ஒட்டவும்
இதைப் போலவே மற்றொரு கப்பிலும் இதழ்கள் மற்றும் இலைகளை ஒட்டி அலங்கரித்துக் கொள்ளவும்.
இந்த தாமரை பூவில் மஞ்சள் மற்றும் குங்குமம் போட்டு சுவாமி படங்களுக்கு முன் வைக்கலாம். அல்லது கொலுவின் போது இது போல் செய்து வருபவர்களுக்கு கொடுக்கலாம். வித்தியாசமாகவும் மற்றவர்களை கவரும் விதமாகவும் இருக்கும்
திருமதி. செண்பகா பாபு அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த பேப்பர் தாமரை மலரை செய்து காட்டியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வப்போது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார். தயாரிப்பில் உதவி: செல்வி. பத்மா மற்றும் செல்வி. ரேவதி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

இது யார் குறிப்பு? நன்றாக உள்ள்து...

அழகாக இருக்கிறது. செய்தவருக்கு வாழ்த்துக்கள்.

‍- இமா க்றிஸ்

இது பாப்பி, பத்மா மற்றும் ரேவதி ஆகிய மூவரின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டது :-)

HALF YEARLY விடுமுறையில் சொல்லித் தர ஏற்ற எளிமையான CRAFT. நிறைய கற்றுக் கொடுக்கவும்.பாராட்டுக்கள்.

always with you

சாட் பேப்பரில் தாமரை பூ பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. செய்வதற்கு எளிமையாக இருப்பது போல் தோன்றுகிறது. இதைச் செய்த பாப்பி, பத்மா மற்றும் ரேவதி மூவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

நிஷாந்தினி

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

"The best way to cheer yourself up is to
try to cheer somebody else up"

உங்கள் பெயரும் என் பெயரும் ஒரே மாதிரி உள்ளது
- நிஷாந்தி

நிஷா

hye papy badhma& revathy its nice. will you give me some variety dolls are house hou to make

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta