கீரை பருப்பு உசிலி

தேதி: December 9, 2008

பரிமாறும் அளவு: 5

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கீரை - 3 கப்
துவரம்பருப்பு - 1 கப்
மிளகாய் வற்றல் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
பெருங்காயதூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி


 

துவரம்பருப்பை 1/2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
கீரையை நன்றாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காய தூள், மஞ்சள் தூள் போட்டு அதில் அரைத்துள்ள பருப்பு கலவையை
போட்டு நன்றாக கிளறவும்.
அடிபிடிக்காமல் குறைந்த தீயில் வைத்து நன்றாக உதிரியாக வரும் வரை கிளறவும்.
உதிரியான பின் அதில் இந்த வெந்த கீரையை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதை இதோடு சேர்த்து மேலும் நன்றாக கிளறி 10 நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
இப்போது கீரை பருப்பு கலவையுடன் நன்றாக சேர்ந்து இருக்கும்.
இதை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.


கீரை சாப்பிட பிடிக்காதவர்கள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள்.
பருப்பு உசிலி செய்யும் போது கீரைக்கு நிறைய தண்ணீர் விட வேண்டாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

பருப்பை ஊற வைத்து அரைத்தால் போதுமா? வேக வைக்க வேண்டாமா?

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.