கார்த்திகை ஸ்பெஷல் - கார அவல் பொரி

தேதி: December 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் - அரை கிலோ
வெள்ளை எள்ளு - 25 கிராம்
வேர்க்கடலை - 50 கிராம்
பெருங்காயத் தூள் - கால் தேக்கரண்டி
மிளகு சீரகத் தூள் - 3 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 6
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
கடுகு - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொரித்த அவலை போட்டு அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, எள் மூன்றையும் தனித்தனியாக வறுத்து சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.
பின்னர் அதில் பெருங்காயத்தூள், மிளகு சீரக தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு முறை வதக்கி விடவும்.
இந்த மசாலா கலவையை வதக்கிய உடனேயே பொரித்த அவல் கலவையுடன் சேர்க்கவும்.
வறுத்து சேர்த்த பொட்டுக்கடலை, வேர்க்கடலை, மசாலா கலவை எல்லாம் அவலுடன் ஒன்றாக சேரும்படி நன்கு கிளறி விடவும்.
கார்த்திகையன்று செய்யும் கார அவல் பொரி ரெடி. காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் அதிக நாட்கள் கெடாமல் மொறுமொறுப்பாகவே இருக்கும்.
அறுசுவை நேயர்களுக்காக இந்தக் குறிப்பினை வழங்கி செய்து காட்டியவர் திருமதி. சுமதி திருநாவுக்கரசு அவர்கள். சமையல் கலையில் நீண்ட அனுபவமும், நிறைய ஆர்வமும் கொண்ட இல்லத்தரசி இவர். ஏராளமான சமையல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பல பெற்றுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதை பார்த்ததும் செய்யவேண்டும் போல்வுள்ளது.