சிக்கன் ஸ்பினாச் கறி

தேதி: December 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோழி - 1 கிலோ
2. ஸ்பினாச் - 250 கிராம்
3. பச்சை மிளகாய் - 2
4. தண்ணீர் - 1 கப்
5. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
6. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
7. உப்பு


 

ஸ்பினாச், பச்சை மிளகாய் நறுக்கி குக்கரில் தண்ணீரோடு 1 விஸில், பின் சிறுந்தீயில் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்.
இதை ஆர வைத்து ப்லென்டரில் போட்டு ஸ்மூத்தாக அடிக்கவும்.
கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இத்துடன் சிக்கன் சேர்த்து கலர் மாறும் வரை வதக்கவும்.
பின் அரைத்த கீரை, உப்பு சேர்த்து வேக விடவும்.
கோழி வெந்து, எண்ணெய் மேலே வரும், கீரை முழுதும் கோழியில் நன்றாக ஒட்டி இருக்கும். இப்போது இறக்கி விடவும்.


மேலும் சில குறிப்புகள்