ஷாஹி சிக்கன் குருமா

தேதி: December 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. கோழி - 1 கிலோ
2. எண்ணெய் - 1/2 கப்
3. இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
4. பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. உப்பு
6. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. தயிர் - 1/2 கப்
9. பச்சை மிளகாய் - 4
10. புதினா - 1 மேஜைக்கரண்டி
11. கொத்தமல்லி - 1 மேஜைக்கரண்டி
12. குங்குமப்பு - 1/4 தேக்கரண்டி
13. பால் - 2 மேஜைக்கரண்டி
14. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி

அரைக்க:

1. கசகசா - 1 மேஜைக்கரண்டி
2. பாதாம் - 5
3. முந்திரி - 5
4. 1 குழிக்கரண்டி எண்ணெயில் பொரித்து எடுத்த வெங்காயம் - 1/2 கப்


 

அரைக்க வேண்டிய அனைத்தையும் சேர்த்து நைசாக அரைக்கவும்.
பச்சை மிளகாய் கீரி வைக்கவும்.
குங்குமப்பு பாலில் போட்டு ஊற வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, கோழியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.
இதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கவும்.
உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், அரைத்த விழுது, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா கலந்து மூடி போட்டு நன்றாக வேக விடவும்.
கோழி வெந்து எண்ணெய் பிரிந்து வரும்போது குங்குமப்பு கலந்த பால், கரம் மசாலா கலந்து 2 நிமிடம் விட்டு இறக்கி விடவும்.


இந்த குருமா சாதம், பரோட்டா, ரொட்டி'க்கு பொருத்தமாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா உங்க ஷாஹி சிக்கன் குருமா செய்தேன். குங்குமப்பூ மட்டும் இல்லை. அதனால் சேர்க்கல. நல்ல மணமா சுவையா சூப்பரா இருந்தது. நன்றி அக்கா.

மிக்க நன்றி அரசி. :) இது விருந்துக்குலாம் நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

I tried this kurma and it really came out well with original taste.v all enyoyed it.thanks for ur recipe.

செய்து பார்த்து பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா