ஈஸி சிக்கன் மசாலா

தேதி: December 13, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - ஒன்று
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
கசகசா - 2 தேக்கரண்டி
முந்திரி - 5
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு - 2
ஏலக்காய் – ஒன்று
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

சிக்கனை சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் கசகசா, முந்திரி மற்றும் தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து அதில் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்னர் வறுத்து எடுத்து வைத்திருக்கும் கசகசா, முந்திரி மற்றும் தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த விழுதை ஊற்றி கிளறி விடவும்.
அதன் பிறகு சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.
இந்த கலவையை நன்கு கிளறி பின்னர் மூடி வைத்து சிக்கனை வேக விடவும். சிக்கன் தண்ணீர் விடும் என்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
சிக்கன் வெந்ததும் திறந்து மிளகு தூள் சேர்த்து கிளறி விட்டு மேலும் 5 நிமிடம் வேக விடவும்.
இந்த சிக்கன் மசாலாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குருமாவை போல் வைத்தாலும் சுவையாக இருக்கும்.
சுவையான ஈஸி சிக்கன் மசாலா தயார். இந்த எளிமையான, சுவையான குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்புள்ள கீதா,
உங்கள் சிக்கன் மசாலா மிகவும் சுவையாக இருக்கும் என்பது நிச்சயம். செய்து பார்க்க வேண்டும்.
அன்புடன்,
செபா.

செபா,
மிகவும் நன்றி.
செய்து பாருங்கள் நன்றாக இருக்கும்.