பூண்டு முட்டை குழம்பு

தேதி: December 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

முழுப்பூண்டு - 1 (15 பல் இருக்கலாம்)
வெங்காயம் - 1
தக்காளி - 2
மிளகாய் - 1
குழம்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்.
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - அரை ஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - கொஞ்சம்
முட்டை - 2
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு.


 

பூண்டுப்பல் பெரியதாக இருந்தால் நீளவாக்கில் கட் பண்ணிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி சிறியதாக கட் பண்ணிக்கொள்ளவும். மிளகாய் கீறிக்கொள்ளவும். தேங்காய் அரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வெந்தவுடன் தக்காளி சேர்த்து மசிந்தவுடன், உப்பு, குழம்பு மிளகாய்த்தூள் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
மசாலா வாடை அடங்கியவுடன் தேங்காய் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைத்து கொதி வந்தவுடன் முட்டை உடைத்து ஊற்றி முட்டை வெந்தவுடன் இறக்கவும். கொத்தமல்லி இலை சிறியதாக கட் பண்ணி தூவவும்.
சுவையான பூண்டு முட்டைக்குழம்பு ரெடி.


இந்தக்குழம்பு ப்ளைன் சாதத்திற்கு மிக நன்றாக இருக்கும். அவசரத்திற்கு வீட்டில் இருப்பதை வைத்து இந்த குழம்பு செய்து அசத்தலாம். குழம்பு மிளகாய்த்தூள் இல்லாதவர்கள், மிளகாய்த்தூள் 1 ஸ்பூன், மஞ்சள்தூள் கால் ஸ்பூன், அரை ஸ்பூன் சீரகத்தூள், மல்லித்தூள் 1 ஸ்பூன் சேர்த்து செய்யலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

நன்றி,,,

நன்றாக இருந்தது ,,,,, தேங்காய் சேர்க்காமல்,,,, காய் சேர்த்துகொண்டேன். (கத்தரிக்காய், உருளை)

பாலா குறிப்பு முழுமையானதாக இல்லை தயவு செய்து முழுமைப்படுத்தவும் நன்றி...

பாலா

குறிப்பு முழுமையாக இருக்கிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி..... பாலா

பாலா