ஆந்திரா சோமாஸ்

தேதி: December 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

1. மைதா – 250 கிராம்
2. எண்ணெய் (அ) நெய் – 2 மேஜைக்கரண்டி
3. உப்பு - 1 சிட்டிகை
4. தேங்காய் துருவல் – ¼ கப்
5. ரவை – ½ கப்
6. சர்க்கரை – ½ கப்
7. ஏலக்காய் – 2
8. முந்திரி – 2 மேஜைக்கரண்டி


 

மாவு, உப்பு, நெய் சேர்த்து மிருதுவாக பிஸைந்து 30 நிமிடம் வைக்கவும்.
கடாயில் ரவையை வறுத்து வைக்கவும்.
தேங்காயையும் வறுக்கவும்.
ஏலக்காய், முந்திரியை பொடிக்கவும்.
ரவை, முந்திரி, தேங்காய், ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
மாவை சின்ன உருண்டையாக எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக தேய்க்கவும்.
இதன் நடுவில் பூரணத்தை வைத்து மடித்து மூடி, ஓரத்தை விரலால் அழுத்தி ஒட்டவும்.
இவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்