உருளைக்கிழங்கு வறுவல்

தேதி: December 15, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் <b> திருமதி. அதிரா </b> அவர்கள் திருமதி. செந்தமிழ் செல்வி அவர்களின் குறிப்பினை பார்த்து செய்த உருளைக்கிழங்கு வறுவல் இது.

 

உருளைக்கிழங்கு - 500 கிராம்
காய்ந்த மிளகாய் - 2
பூண்டு - நான்கு பற்கள்
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கறித்தூள் - 2 தேக்கரண்டி
தேங்காய் பால் அல்லது பசும்பால் - முக்கால் டம்ளர்
எண்ணெய் - நான்கு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டு
உப்பு - 2 தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு மற்றும் மிளகாய் வற்றலை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு போட்டு பொரிய விடவும்.
அதன் பின்னர் பூண்டு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
இவை அனைத்தும் வதங்கியதும் நறுக்கின உருளைக்கிழங்கை சேர்த்து கறித்தூள், உப்பு போட்டு பிரட்டி விடவும்.
கறித்தூள், உப்பு சேர்த்து பிரட்டியதும் அதனுடன் பாலை ஊற்றி நன்கு கிளறி விடவும்.
பின்னர் வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும்.
உருளைக்கிழங்கு வெந்ததும் மூடியை திறந்து சிறிது நேரம் அடுப்பில் வைத்திருக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க இடையிடையே கிளறி விடவும்.
சிறிது நேரம் கழித்து வறுவலாக ஆனதும் இறக்கி பரிமாறவும். சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார். விரும்பினால் பாதி எலுமிச்சைபழ சாறு சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கறித்தூள் என்றால் என்ன?

அன்பு அதிரா,
தெளிவான படங்களுடன், அருமையாக இருக்கு. இப்படியே எல்லாக் குறிப்பையும் நீ படம் எடுத்து அனுப்பிட்டா நல்லா இருக்கும்:-)
பாராட்டுக்களும், நன்றியும் அதிரா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு அரசி,
கறிமசாலா தூளைத்தான் அதிரா கறித்தூள்னு போட்டிருக்காங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

THANKS SELVI AKKA

ஹலோ செல்வி & அதிரா அக்கா உருளைகிழங்கு வறுவல் செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. பிள்ளைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி அக்காஸ். அதிரா அக்கா சிலோனில் அப்பமிற்கு சைட் டிஷ் ஆக மஞ்சள் கலரில் ஒரு குழம்பு வைப்பார்களே (உருளை கிழங்கு சேர்த்து இருக்கும்) அது மிகவும் நன்றாக இருக்கும். அந்த ரெசிபி என்க்கு அனுப்புங்களேன் பிளீஸ்

அன்பு அரசி,
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இன்று இந்த ரெஸிபியை செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது தேங்ஸ்க்கா..என்னிடம் கரிமசாலா இல்லை அதனால் வத்தல் தூலை வைத்து செய்தேன்..சூப்பரா காரசாரமா இருந்தது/..அழகா படத்துடன் அனுப்பிய அதிராக்கும் நன்றிகள் கலர் புல்லா இருக்கு அதிரா

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்பு மர்ழி,
நலமா? உடம்பு எப்படி இருக்கு? கறிமசால் சேர்த்தால் வாசனையாக இருக்கும். ரொம்ப நன்றிப்பா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,
நலமா?பாலக் கீரை கடைந்து, உருளைக்கிழங்கு வறுவல் செய்தேன், நல்லா இருந்தது.கோபி மஞ்சூரியன் குறிப்பு நீங்க கொடுத்திருக்கீங்களா,என்னவர் கேட்டுட்டே இருக்கார்,கொஞ்சம் சொல்றீங்களா செல்விம்மா?

நேர்று பிரதீபாலா போன் செய்தாங்க இந்தியா வந்தாச்சு உங்க போனுக்கும் பல முறை டிரை செய்தாங்களாம் ஆவுட் ஆப் ஏரியான்னே வருதாம் அவங்க செல் நம்பரை உங்களுக்கு எஸ் எம் எச் பண்ணவா? இதில் போட்டால்தானே படிப்பீங்க அதுக்குதான் இப்படி பாவம் பிள்ளைசாச்சி பொண்ணு என்னை திட்டாதீங்க :D

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு