கேளுங்கள்......சொல்லுங்கள்........

அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம்,

நாம் தினமும் நிறைய விஷயங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது,காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை செய்யும் வேலைகளில் ஏதெனும் ஒரு சிறு பிரச்சனையாவது இருக்கும்,அதற்க்கு தான் இந்த பதிவு...

நமக்கு என்ன சந்தேகம் என்றாலும் இங்கு கேட்போம்,தெரிந்தவர்கள் சொல்லுவார்கள்...

மளிகை பொருட்கள்,காய் கனிகள் எப்படி வாங்குவது அவற்றை எப்படி பாதுகாப்பது?

நாம் செய்யும் வேலைகளை எப்படி செய்தால் எளிதாக இருக்கும்,நேர்த்தியாக இருக்கும்,

குழந்தைகளை எப்படி சமாளிப்பது,அவர்களிடம் நாம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்?

எப்படி குறைந்த நேரத்தில் அதிக படியானா வேலைகள் முடிப்பது,டைம் மேனேஜ்மேண்ட்,முதலியவற்றை பற்றி இங்கே விவாதிக்கலாம்....

கேள்வி கேட்டால் தான் பதில் கிடைக்கும் பதில் கிடைத்தால் தான் நல்ல விஷயங்கள் நாலு தெரியும்...

அதனால் பல கேள்விகேட்டு பதில் சொல்லி நாலு நல்ல விஷயத்தை புரிஞ்சுக்குவோம்,,,

ஏ டூ இசட் சந்தேகம் கேட்டு தெளிவு பெற்றுக்கலாம் வாருங்கள்.......

ரோனுகா.. நல்ல ஒரு கருத்தை முன் வைத்ததர்க்கு நன்றி. ஏனெனில் என்னைமாதிரி அரை வெக்காடுக்கு இது உதவும்.

1. காய்கறிகளை குலிர்சதனப் பெட்டியில் வைத்தால் சில காய்கள் ஐஸ் பாறிக்கொல்கிரது. அதை தவிர்த்து எப்படி பாதுகாக்கிரது?

2. மீன் புதிது என எப்படி தெரிந்துக் கொள்வது?

3. சர்க்கரை வெள்ளை(அ) புரவுன் எது நல்லது?

எனக்கு இப்பொது இவ்வளவுதான் பிறகு கேட்ட்கிரேன்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ஹாய் பிரதாமு நலமா?கேள்வி கேட்டு இந்த தெரட்டை ஆரம்பித்து விட்டீங்க...

1. காய்கறிகளை குலிர்சதனப் பெட்டியில் வைத்தால் சில காய்கள் ஐஸ் பாறிக்கொல்கிரது. அதை தவிர்த்து எப்படி பாதுகாக்கிரது?

இது போல எனக்கும் இருக்கு,இத்தனை நாளா கானாம்.இப்ப மீண்டும் ஆரம்பம் ஆயிடுச்சு,இப்ப குளிர் காலம் அதனாலையா என்று தெரியல.கூலிங்கை கொஞ்சம் குறைத்து பாருங்க.நானும் அதை தான் முயற்சிக்கலாம் என்று இருக்கேன்...

மற்ற கேள்விக்கு வேறு யாராவது பதில் தருவார்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ப்ரபா காய்கறிளை அதற்கான பாஸ்கெட்டினுள் வைத்தால் ஐஸ் பற்றி கொள்ளது.அதை விட்டு மேலே வைக்கும் போதுதான் ஐஸ் ஏற்படும்.பாஸ்கெட்டில் இடம் இல்லைன்னா கவரில் போட்டு டோர்சைடில் உள்ள இடத்தில் வைக்கலாம்.
மீன்புதிது என தெரிந்து கொள்ள
1)மீனின் கண் தெளிவாக இருக்க வேண்டும்.கலங்கலாகவோ ரத்தம் போன்ற சிவப்பு நிறமாகவோ இருந்தால் பழைய மீன்
2)செவுள் பகுதி சிவப்பாக இருக்க வேண்டும்.
3)செதில்கள் மங்கலாக இல்லாமல் பளபளப்பாக இருக்க வெண்டும்
4)தொட்டுப் பார்த்தால் கெட்டியாக இருக்க வேண்டும்

வெள்ளை சர்க்கரையை விட பழுப்பு சர்க்கரை சிறந்தது.பழுப்பு சர்க்கரையை ப்ளீச் செய்துதான் நாம் சாதாரணமாக வாங்கும் வெள்ளை சர்க்கரை தயாரிக்கப் படுகிறது.நான் சொல்லும் பழுப்பு சர்க்கரை லேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்.அதைத்தானே கேட்டீங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி காய்கறி பாஸ்கெட்டிலுக்குள்ளும் ஐஸ் பிடிக்குதுப்பா...குளீர் என்பதனால் என்று நினைக்கிறேன்...இல்லையென்றால் வேறு எதனால் என்று தெரிந்தால் சொல்லுங்கள்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா, காய்கறியை அதற்குரிய பாஸ்கெட்டில் வைக்கும்போது அதனை ஒரு மெலிதான துணிக் கொண்டு சுற்றி வையுங்கள். இப்படி செய்தால் ஐஸ் பிடிக்காது.

இங்கு Brown Sugar என்பது வெல்லம் பொடி செய்தது.ப்ரபா சொல்வது வெல்லம் தான் என்று நினைக்கிறேன்.சர்க்கரையை விட வெல்லம் தான் உடம்பிற்கு நல்லது.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

புரவுன் சக்கரை வெல்லம் வாசம் தான் வருகிரது. அது உடலுக்கு நல்லது தானா.

தேவா மாம் சென்ன மஞ்சள் சக்கரை என்பது என்ன?

எது உடலுக்கு நல்லது.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

ரொம்ப நன்றி கவிசிவா,எனக்கு மீன் வாங்குவதில் பெரும் குழப்பம் பல நேரம் ஏமாந்து இருக்கேன் இப்போ தெளிவாகிவிட்டேன்.
எல்லாம் நன்மைக்கே.

எல்லாம் நன்மைக்கே...

சன்னாவை ஊற வைத்து பீரிசரில் வைக்கலாமா?வேக வைத்து வைக்கனுமா?அல்லது அப்படியே வைக்கனுமா?எத்த்னை நாள் வரை வைக்கலாம்.?எதில்/எப்படி வைத்தால் நன்றாக இரூக்கும்,இதே கேள்விகளுக்கு காய்ந்த பட்டாணிக்கும் விளக்கம் தாருங்கள்,

நான் பிரட் கிரம்ஸாக பிரஷ் பிரட்டை வாங்கி தூளாக்கி உபயோகிப்பேன்,இதே முறையில் செய்து பிரிஞ்சில் வைக்கலாமா?எத்தனை நாள் வரை வைக்கலாம்?

ப்ரட்டை எத்தனை நாள் வைத்து உபயோகிக்கலாம்?

செல்விக்காவின் பிரட்பால்ஸ் தாயாரித்து பீரிசரில் வைத்து வேணும் பொழுது பொறிக்கலாமா?இதே போல் வேறு என்ன உணவுகள் தயார் செய்து வைத்து வேனும் பொழுது சமைக்கலாம்.எத்த்னை நாள் வைக்கலாம்,எந்த முறையில் வைக்கனும்...

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணு,
சன்னாவை வேக வைத்து ஃப்ரீசரில் வைக்கலாம் ( ஒரு வாரம் வரை). ஊற வைத்து ஃப்ரீசரில் வைத்து பின் வேக வைத்தால் சரியாக வேகாது. ரொம்ப நேரமெடுக்கும். பட்டாணியும் அப்படியே.

ப்ரட் கிரம்ஸுக்கு ப்ரட்டை வெறும் தோசைக்கல்லில் சிறிது வாட்டி, பிறகு கிரம்ஸ் செய்து இரு வாரங்கள் ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம். ப்ரட்டை 2 அல்லது 3 நாட்கள் வைத்துக் கொள்ளலாம். ஒரு வாரம் வைத்திருந்தாலும் நன்றாக இருக்கும், ஆனால் காய்ந்தது போலிருக்கும். ப்ரட் பால்ஸ் தயாரித்து ஃப்ரீசரில் ஒரு வாரம் வைத்திருக்கலாம். பொரிக்கும் முன் ஒரு மணி நேரம் முன்பே வெளியில் எடுத்து வைத்து பின் பொரிக்கவும்.

இதே போல் கட்லெட், ரோல், தந்தூரி சிக்கன் போன்றவற்றை தயாரித்து ஃப்ரிஜரில் வைத்து வேண்டும்பொழுது பொரித்துக் கொள்ளலாம்.

புளிக்கரைசல், இஞ்சி-பூண்டு பேஸ்ட், தேங்காய் பேஸ்ட், மீன் மசாலா, சிக்கன் மசாலா எல்லாமே செய்து ஃப்ரீசரில் வைத்துக்கொண்டால் தேவைப்படும் போது உப்யோகிக்கலாம்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்