இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது தோழி ஒருத்திக்கு குழந்தை பிறந்து 7, 8 மாதங்களில் மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இப்போது 2 மாதங்களாகிறது. அவளுக்கு இந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

தோழிகளுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளீ போட்டால் ரொம்ப கவனமாக இருங்கள்.நீங்கள் செய்யும் தப்புக்கு ஒரு உயிரை கொல்லாதீர்கள்.எத்தனையோ பேர் குழந்தைக்காக தவம் இருக்ரார்கள் ( நானும் இருந்தேன் 5 வருஷமாக,) அதை அனுபவிபவர்களுக்கு தான் அதன் வேதனை புரியும்.

கரு தடை மாத்திரை பயன் படுத்தும் தோழிகளே மறக்காமல் ஒவ்வொரு நாளும் மாத்திரை எடுத்து கொள்லுங்கள் (டொக்ரரின் ஆலோசனையுடன் ) ஒரு நாள் மரந்தாலும் ரொம்ப கவனமாக இருங்க.
என் தோழி ஒருத்தி ஒரு நாள் மாத்திரை போட மரந்து விட்டாள் அந்த மாதமே கர்ப்பம் ஆகிவிட்டாள்.அவளும் கரு கலைக்க தான் இருந்தாள் இதை நான் கேட்டவுடன் ஜ யோஓஓஓ என்ரு அவர்கள் வீட்டில் இருந்தே கத்தி விட்டேன். அப்புறம் அவள் எதுவும் செய்யவில்லை. இப்போது அவளூக்கு அழ்கான ஆண் குழ்ந்தை 2 வயசு ஆகிரது.

பெரிய மனுசி போல இதை எழுதியதற்க்கு என்னை எல்லோரும் மன்னித்துக் கொள்ளுங்கள்.எனக்கு ரொம்ப கஷ்ரமா இருக்கு அது தான் எலுதிவிட்டேன்.
தாளிகா அக்கா,இலா அக்கா,மர்ழியா அக்கா,மற்றும் எல்லொரும் தான்

அன்புடன்
துஷி

நானும் இதே தவறை செய்து இருக்கிறேன்,இன்னும் மனது உறுத்திக்கொண்டிருக்கிறது.தயவு செய்து குழந்தை பெற்றுக்கொள்ள சொல்லுங்கள்.ஒன்றோடு ஒன்று சேர்ந்து வளர்ந்து விடுவார்கள்.ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும் பின்பு இலகுவாயிருக்கும்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

லலிதா,
கருக்கலைப்பு ஆரோக்கியமானதல்ல. நிறையப் பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. (முன்பே கவனமாக இருந்திருக்க வேண்டும்.) உங்கள் தோழியின் மனநிலை, உடல் நிலைக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூட வாய்ப்பிருக்கிறது.
மேலும், அவர் எடுக்கும் முயற்சியையும் தாண்டிக் குழந்தை வளருமாயின் அது குறைபாடுள்ள பிள்ளையாக வளரவும் வாய்ப்பிருக்கிறது.
அவசியம்தான் என்று பட்டால் ஒரு நல்ல வைத்தியரின் ஆலோசனையைக் கேட்கச் சொல்லுங்கள். ஆனால் தள்ளிப் போடாது உடனே சந்திக்கச் சொல்லுங்கள்.
உங்கள் தோழி எதோ பிரச்சினையில் இருக்கிறார். நீங்கள் அவருக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்றுதான் எதிபார்ப்பார். சொல்வது எதுவாயினும் அவரது மனம் நோகாதவாறு மெதுவாக எடுத்துச் சொல்லுங்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

Dear Admin,sorry for typing in English. I couldn't find time to type in Tamil and paste it here.
please friend, visit this link. I couldn't control me crying while seeing the pps file.
http://www.indusladies.com/forums/forward-messages-and-jokes/43057-abortion.html

1)இன்ன நாள் என்று குறித்துக் கொண்டு கவனமில்லாமல் இருப்பது...அது பெரும்பாலும் காலை வாரிவிடும்.It is not safe to have intercourse without contraception .அதற்கு ovulation, periods சரியாக(regular) நடக்க வேண்டும் அது நம் கைய்யில் இல்லை சின்ன மனவருத்தம் கூட காலை வாரிவிடும் இப்படி தான் பலரும் மாட்டுகிறார்கள்

2)withdrawal method - The primary cause of failure of the withdrawal method is the lack of self-control of those using it. Poor timing of the withdrawal can result in semen on the vulva, which can easily migrate into the female reproductive tract
It has been suggested that the pre-ejaculate emitted prior to ejaculation contains spermatozoa (sperm cells), which can easily pass into the upper female genital tract in the presence of cervical mucus
இதனாலும் பலர் கர்பமாகிவிடுவதுண்டு.கர்பமாகவே வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் பிறகு கண்டிப்பா ஏதாவது கான்ட்ராசெப்டிவ் உதவியுடன் கவனமாக இருக்க வேண்டும் அதில் கூட ஃபெஇலியர் ரேட் உண்டு இருந்தாலும் அதிகளவு பாதுகாப்பு

பதிலளித்த அணைவருக்கும் நன்றி. எனது தோழியின் நிலைமையில் அவளுக்கு இன்னொரு குழந்தையை வளர்க்க முடியாது. அவளது கணவரும் குழந்தை வளர்ப்பில் உதவுவதில்லை. அவளுடைய நிலையை விளக்க இந்த இணையத்தளம் போதாது.

இங்குள்ள doctors abortion செய்ய மாட்டார்கள். Pharmacy இல் கேட்டு Gynaecisic (spellings not sure) மருந்தை குடித்தாள். மருந்தால் எதுவும் செய்ய முடியாமல் போனால் மருந்தின் பாதிப்பால் குழந்தை ஊனமாகி விடுமோ என்று பயப்படுகிறாள்.

Lalitha

இந்த மருந்தை 2 தரம் குடித்தும் பயனில்லை. செய்வதறியாமல் தவிக்கும் அவளுக்கு நம்மால் ஆன் உதவியை செய்யவே உங்களின் உதவியை நாடுகிறேன். Please

Lalitha

ஹா ஏன் பா டாக்டர் கிட்ட கேட்காமல் குடித்தார்கள்.
ரொம்ப கழ்டமா இருக்கு. இங்கு இதில் அதற்குண்டான மருந்தை சொல்ல பயமா இருக்கு,

கணவர் உதவவில்லை என்றால் என்னபா அந்த காலத்தில் வருசையா ஏழெட்டு பிள்ளைகளை பெறவில்லையா கொஞ்சம் சிரம் பார்க்காமல் இரண்டு முன்று வருடம் கழ்ட பட்டு விட்டால் பிறகு ஈசியாகிடும்.
லலிதா உங்கள் மெயில் ஐடி கொடுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

உங்கள் தோழியின் நிலையை எண்ணி வருத்தப்படுகிறேன்.இதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.இருந்தாலும் இது போல் குடும்ப சூழ்நிலை காரணமாக கலைக்க வேண்டி, என் தோழியின் அம்மா மாத்திரை சாப்பிட்ட பின்னும், என் தோழி பிறந்து விட்டதால் இன்னும் கூட எவ்வளவு weak ஆக இருக்கிறாள்.So plz consult a Doctor as soon as possible.

Patience is the most beautiful prayer!!

Patience is the most beautiful prayer!!

போங்க லலிதா என்ன தான் சொல்லுங்க கவனக் குறைவு தான் காரணம்..முன்னயே இதனை யோசிச்சிருக்கலாம்..கணவரின் உதவியும் இல்லையென்றால் வெறும் 500 ரூபாய்க்கு காப்பெர் டி பொருத்தி தருவார்கள் அதை செய்திருந்தால் இன்னும் 3 வருஷத்திற்கு பயமில்லாமல் இருந்திருக்கலாம்..
மருத்துவரை அனுகாமல் இந்த மாதிரி மருந்து குடிப்பது ரொம்ப ஆபத்து .சில சமயம் உயிருக்கே உலை வைத்து விடும்.
குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்பட வாஇப்பு அதிகம்..முதல்லயே ஒரு டாக்டரைக் கண்டு பேசியிருக்கலாம்.சரி இப்பவும் ஒன்னும் குறைந்து விடாது 2 மாதம் தானே மருந்தையும் குடித்து விட்டு திக் திக் நு இருப்பதற்கு அபார்ஷன் செய்து விடுவார்கள் என நினைக்கிறேன் இன்னமும் காத்திருக்காமல் உடனடி மருத்துவரை சென்று காண சொல்லுங்க.
எனக்கு நம்பவும் முடியல நம்பாமல் இருக்கவும் முடியல..இப்படியெல்லாம் கூட ரிஸ்க் எடுக்கிறார்களா?மருந்தை 2 முறை குடித்தாரா ?எலிக்கு பயந்து விட்டை கொளுத்தின கதையா அகிடக் கூடாது..இம்மாதிரி மருந்துகளால் நமது உடல்நலனும் பாதிக்கும்.கண்டிப்பா இதை படித்த அடுத்த நொடி கைனகாலஜிஸ்டிடம் துரத்துங்கள்...அவர்கள் தீர்மானிக்கட்டும்.நிக்காமல் ப்லீடிங் ஆனால் பெரும் ஆபத்தில் முடிந்து விடும்

மேலும் சில பதிவுகள்