இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

எனது தோழி ஒருத்திக்கு குழந்தை பிறந்து 7, 8 மாதங்களில் மீண்டும் கருவுற்றிருக்கிறாள். இப்போது 2 மாதங்களாகிறது. அவளுக்கு இந்த குழந்தையை பெற்று வளர்க்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறாள். இரண்டு மாத கருவை களைக்க முடியுமா?

லலிதா
அது எப்படி நீங்கள் இவ்வளவு தோழிகள் கூறியும் மீண்டும் உங்கள் தோழிக்கே பரிந்துரைக்கிரீர்கள்...எனக்கும் குழந்தை பிறந்து 6 மாதங்கள் தான் ஆகின்றது....மீன்டும் கருவுற்றால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்தேன்.தளிகா,மர்லியா,அனைவரின் பதிலையும் படித்த பிறகு அது எவ்வளவு பெரிய பாவம் என்ட்று தெரிந்து கொண்டேன்,தயவு செஇது உங்கள் தோழியை இந்த பதிவுகளை படிக்க சொல்லுஙள் அவர் மனம் கரைன்து விடும்
இது வரை பதில் அளித்த தோழிகள் எப்படி கோபம் கொள்ளாமல் பதில் அளித்தார்கள் என்பது எதிசயம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

தயவு செய்து இது போல் தலைப்பின் மேல் இளகிய மனம் கொண்டவற்கள் படிக்க வேண்டாம் என்று எழுதவும்.மனதிற்கு மிகவும் கவலையாக உள்ளது......மேற்கண்ட என்னுடைய பதிவில் ஏதேனும் தவறு இருந்தால் அனைவரும் என்னை மன்னித்து விடுஙள்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

எனது பெரியம்மா 3 வது குழந்தயை கலைக்க ஏதோ மருந்து 3 முறை சாப்பிட்டார்களாம் ஆனால் கலையாமல் 3 வது தம்பி பிறந்தானாம். அவனே எங்களுக்கு கடைசி தம்பி. மிகவும் அழகாக அதி புத்திசாலியான பிள்ளை. ஆனால் அவன் நன்றாக நடக்க முடியவில்லை. சிறு படியில் ஏறும் போதும்(4 வயதில்) முழங்காலைப் பிடித்து வயதனவர்கள் போல் ஏறுவான். அவன் என்றால் எங்களுக்கு கொள்ளை ஆசை. கால் வீக் என்று டாக்டர் excercise ectசொல்லிக் கொடுத்தார். துரதிஷ்டம், 4 ம் வகுப்புக்கு மேல் அவனால் நடக்க முடியாமல் போய் விட்டது. பிறகு படுக்கையானான். 14 வயது வரை மற்றவரிகள் தான் பாத் ரூம் முதல் கொண்டு தூக்கிச் செல்லவேண்டும் பிறகு 14 வயது முடிவில கதறக் கதற , வலிக்கிறதே வலிக்கிறதே என்று கத்தி இறந்தான். என்னால் எழுத முடியவில்லை. அத்தனைக்கும் எனது பெரியம்மாவின் தவறான மருந்து உட்கொண்டதே காரணம். நான் அழுது கொண்டே எழுதுவது யாராவது தெரியாமல் dr கிட்டே போகாமல் தவறு செய்து குழந்தையையும் கஷ்டப்படுத்தி, புத்திர சோகத்துக்கும் ஆளாகதீர்கள் எனச் சொல்லத்தான்.

ப்ரியா நீங்கள் சொன்னதை நானும் ஒத்துக் கொள்கிறேன்...புரிகிறது ஆனால் ஒரு சில விஷயம் சட்டென ரொம்ப பாதிப்பு ஏற்படுத்திவிடும் மறுபுறத்தை பற்றி யோசிக்க மனசு இடம் தராது சிலருக்கு இருபக்கமும் யோசித்து ஆலோசனை வழங்கும் அளவு பக்குவமும் இருக்கும்..அது போல தான் சட்டென எழுதி விடுகிறோம்.
8 வார கருக்குழந்தை ஒரு சிறிய குழந்தையின் உருவில் இருக்கும்..உறுப்புக்கள் எல்லாம் செம்மையாக வளராவிட்டாலும் அதற்கான அமைப்பை பெற்றிருக்கும்..கை கால்களில் விரல்கள் கூட உருவாகியிருக்கும்..பல உட்பாகங்கள் கூட உருவாகியிருக்கும்..கருக்குழந்தந்தைக்கி வலிக்குமா இல்லையா என்று கண்டுபிடிக்கிறார்களாம்..அதெல்லாம் கடவுளுக்கு தான் தெரியும்.
இப்ப 2 முறை மருந்தை குடிச்சாச்சு இனி அபார்ஷன் பன்னிக் கொள்வது தான் உத்தமம் என படுகிறது.அல்லது ஸ்கேன் பன்னி பார்த்து மருத்துவர் ஆலொசனை படி கேட்டுக் கொள்ளலாம்.இம்மாதிரி மருந்துகளால் தாங்காத வயிற்று வலி வந்தால் முதல் பிள்ளை தனியாய் தவித்து விடும்.இம்மாதிரியான விபரீதமான முடிவுகளை ஒரு போதும் செய்ய கூடாது.விடை கிடைக்காத ப்ரச்சனை என்று ஒன்று இல்லவே இல்லை ..எதற்கும் ஒரு நல்ல முடிவு உண்டு

கருக்கலைப்பு மருந்து சாப்பிட்டு விட்டாலே அதன் வீரியத்தால் கரு முழுசும் கலையா விட்டாலும், அதன் ஏதோ ஒரு பகுதியாவது கலைந்து விடும். அது முழு வளர்ச்சி அடைந்து குழந்தையாகும் போது எந்த பகுதி கலைந்ததோ, அதைப் பொறுத்து ஊனமாக பிறக்கும். இந்தியாவில் (எனக்கு தெரிந்த டாக்டர்கள்) கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டும் கரு கலையலைன்னு வர்றவங்களை திட்டி விட்டாலும் அந்த கருவை வளர விடமாட்டார்கள்.
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணுக்கு குழந்தை ஆறு மாதமாக இருக்கும் போது கருவுற்று, கணவனே கருவை கலைக்க மாத்திரை வாங்கிக் கொடுத்தும் கலையாமல், டாக்டர் எவ்வளவோ சொல்லியும் அபார்சன் பண்ணிக்காமல் பெற்றுக் கொண்டாள். அது மூளை வளர்ச்சி இல்லாமல் பிறந்து அவள் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. 10 வயசாகியும் படுத்தேதான் இருக்கும். அந்த மாதிரி கொடுமைகள் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்திலேயே நான் சொல்ல நினைத்தேன். ரொம்ப எமோஷனலா எல்லோரும் சொல்லும் போது எப்படி சொல்றதுன்னு பேசாமல் இருந்துட்டேன். உங்கள் தோழி ஏற்கனவே வயிற்றில் இருக்கும் கருவுக்கு கெடுதல் செய்து விட்டார்கள். இனி புதியதாக செய்ய ஒன்றும் இல்லை. அதனால் நேரத்தை வீணாக்காமல் உடனே அபார்ஷன் செய்து கொள்ள சொல்லுங்கள். நாள் கூடகூட உங்கள் தோழியின் ஆரோக்கியத்திற்கும் கெடுதல்.
அதன்பிறகாவது ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள். எப்பவுமே 'குழிப்பிள்ளை வயிற்றில்' என்பார்கள். அப்பறம் அவர்களின் பாவச்சுமை கூடிக் கொண்டே போய்விடும்.
செல்வி.

அன்புடன்,
செல்வி.

இந்த பதிவை படித்ததும் என்னையும் மீறி அழுதுட்டேன்.ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.கவின் பதிவை படித்ததும் மனசு ரொம்ப வலித்தது.இத்தனை தோழிகள் கூறியும் நீங்கள் உங்க தோழிக்கு தான் பரிந்து பேசறீங்கப்பா.
அவங்க 2முறை மருந்து சாப்பிட்டதால் மருத்துவரின் ஆலோசனைப்படி[இந்த வார்த்தையை சொல்ல என்னால் டைப் பண்ண முடியலப்பா]அபார்ஷன் தான் நல்லது ஏனென்றால் அந்த குழந்தைக்குத்தான் பின்னால் பாதிப்பு வரும்.எவ்வள்வோ பேர் குழந்தைக்காக் தமிருக்காங்க ஆனால் உங்க தோழி கடவுளே கொடுத்த் வரத்தை.............. என்ன சொல்றதுன்னு தெரியல.படித்தவங்களே இப்படித் தானே மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்து சாப்பிடுவது தப்புன்னு அவ்ங்களுக்கு தெரியலயா.அந்த குழந்தை என்ன தப்பு செய்தது???????
தோழிகள் நான் ஏதாவது தப்பா கூறியிருந்தால் மன்னிக்கவும்.

anunissa
ellarum sollwathippol yoseththu nadakkaum please nanun 2boykku mather konjam kastam 2perum sesareyen yarum thuneikku kuda illa jeddala thaneya paththukkera ellaththaum manasala mudeu edukkanum enda 1st baby 3age 2nd baby only 4mounth theyaham than walkai athelthan santhosam

anunissa

லலிதா,
உங்கள் தோழிக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

Dear friends,

I agree 100% with Priya.

Everybody have their own problems and there cannot be a general solution. We do not know what the real situation is. So it is better to leave the decision to the concerned person and avoid any judgemental and emotional comments. Making someone feeing guilty is definitely not a real help.

Friends, Lalitha has asked us to help in this situation - the decision has already been made. If we could provide an answer to the original question, we should. I request everyone not to make any emotional comments.

As many friends suggested, it is high time your friend gets medical help, Lalitha. Please make sure she gets it.

The best help we could do is to pray for the person and the family. I wish them well.

Sorry if I offended anyone.
Latha.

உங்கள் அணைவரின் பதில்களுக்கும் நன்றி. எல்லாம் வாசித்ததில் நான் என் தோழிக்கு சொன்னேன் உடனடியாக ஒரு doctor ஐ பார்த்து அவரின் ஆலோசனைப்படி எதையுமே செய்ய சொன்னேன். தயவு செய்து இனியும் இந்த மாதிரி எதையும் செய்ய வேண்டாம் என்று நன்றாக திட்டினேன். எனக்கு mail அனுப்பியவர்கள் கூட நல்ல advise தந்தார்கள். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப்போல் நல்ல நன்பர்கள் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கிறேன். Thank you very much to all of you.

Lalitha

மேலும் சில பதிவுகள்