மட்டன் கிச்சடி

தேதி: December 15, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசி - 2 டம்ளர் (400 கிராம்),
பாசிப்பருப்பு - 1 டம்ளர் (200 கிராம்),
மட்டன் - 250 கிராம்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1 (நடுத்தரம்),
பச்சைப்பட்டாணி - 1 கைப்பிடி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
ஏலக்காய் - 1,
பிரிஞ்சி இலை(பிரியாணி இலை) - 1,
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
நெய் - 1 மேசைக்கரண்டி,
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.


 

அரியையும், பாசிப்பருப்பையும் ஒன்றாக கழுவி வைக்கவும்.
மட்டனை சின்ன துண்டுகளாக்கி, கழுவி வைக்கவும்.
வெங்காயத்தை சன்னமாக, நீளமாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளிக்கவும்.
நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பட்டாணி, மட்டன் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
வதங்கிய பின், ஐந்தரை டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதித்ததும் கழுவிய அரிசி, பருப்பு, உப்பு சேர்த்து கலக்கி மூடவும்.
வெயிட் போட்டு ஒரு விசில் வந்தவுடன் இறக்கி, மெதுவாக கேஸை வெளியேற்றி திறந்து, நெய் விட்டு கலக்கி நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சூடாக கத்தரிக்காய் கிரேவியுடன் நன்றாக இருக்கும்.


சாதமோ, பருப்போ குழையாமல் பிரியாணி போல் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்க வேண்டும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

qqqq

aaaa