மாங்காய் (மீன்) குழம்பு

தேதி: December 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

மாங்காய் - ஒன்று
புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு
தக்காளி - ஒன்று
வறுத்து அரைக்க தேவையானவை :
வரமிளகாய் - 5
மல்லி விதை - 4 தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - அரை கப்
தாளிக்க :
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவடகம் - ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் 5 தேக்கரண்டி ஊற்றி தாளிப்பு சாமான்களை போட்டு தாளித்து தக்காளியையும் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலாவை போடவும். புளியை கரைத்து ஊற்றவும்.
நறுக்கிய மாங்காயை போட்டு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விட்டு எண்ணெய் தெளிந்ததும் இறக்கவும்.


இந்த குழம்பு மீன் சேர்க்காமலேயே மீன் குழம்பு போல நல்ல சுவையுடன் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அப்பா மாலதி யக்காவ் வந்தாச்சா
ஓ மீன் சேர்க்காத மாங்காய்மீன் குழம்பா. எப்படியும் வரம் ஒருமுறை புளிகுழம்பு அடுத்த முறை இது
இப்ப என்ன மாங்காய் கிடைக்குதா?
சூப்பர் ரொம்ப படிக்க ஈசியாக இருக்கு.

ஜலீலா

Jaleelakamal

மாங்காய் கிடைக்குது ஜலீலா..! கார்காலத்தில் கிடைக்குமே அந்த காய்கள் கிடைக்கிறது. (கார்காய் என்று சொல்வார்களே) இந்த குழம்புக்கு நல்லெண்ணெய் யூஸ் பண்ணுங்க.
மெயில் அனுப்பி இருந்தேனே பார்த்தீங்களா?

மாங்காய் (மீன்) குழம்பு செய்தேன் இன்று. மாங்காய் இல்லை, அத‌னால் முருங்கைக்காய் போட்டேன்.

இதை நாங்கள் தீயல் என்று சொல்வோம். வறுத்து அரைப்பதில் சிறு துண்டு இஞ்சி, பூடு சேர்த்துக் கொள்வோம்.

மாலதி மேடம்,
உங்க மாங்காய்/மீன் குழம்பு செய்தேன். ரொம்ப சுவையாக இருந்தது. டிபஃரென்ட்டான ஒரு குறிப்புக்கு நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

உங்கள் மாங்காய் மீன் குழம்பில் மீன் சேர்த்து செய்தேன் சுவை அபாரம்
வாழ்த்துக்களும் நன்றியும் உங்களுக்கு ..நன்றி ருக்சானா

வாழு, வாழவிடு..

மீன் சாப்பிடாதவர்களுக்கு மாங்காய்குழம்பு நல்ல மாற்றாக இருக்கும். முருங்கைகாய் போட்டு நான் செய்ததில்லை. நீங்க ட்ரைப்பண்ணி இருக்கிறீர்கள்...நன்றி ஹுஸைன்..!!