எலும்பு ஈரல் சூப்

தேதி: December 17, 2008

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டு எலும்பு - கால் கிலோ
நுரை ஈரல் - 150 கிராம்
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
சீரகத்தூள்- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கு.


 

எலும்பு, ஈரலை சிறிய துண்டுகளாக்கி கழுவிக்கொள்ளவும்.
குக்கரில் எலும்பு, ஈரல் மேலேயும் கொஞ்சம் அதிகம் தண்ணீர் இருக்குமாறு வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.
அரைத்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு, மல்லி, சீரகம், மஞ்சள் தூள்களை சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.
குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் வைத்து அரைமணி நேரம் வேக வைக்கவும்.
வெந்த பின்பு, சிறிது வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக்கொட்டவும்.
பரிமாறும் போது கொத்தமல்லி இலை சிறியதாக கட் செய்து போடவும்.
சுவையான எலும்பு ஈரல் சூப் ரெடி.


சூப்பில் உள்ள ஈரல் சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும். விருப்பப்பட்டால் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் அரைத்து சேர்த்துக்கொள்ளலாம். சிறு குழந்தை முதல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். சத்தான இந்த சூப் வாரம் ஒரு முறை வைத்து சாப்பிட்டு வந்தால் நல்லது.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஆசியா ஓமர் நல்ல குறிப்பு இரத்த சோகை உள்லவர்கலுக்கு இது ரொம்ப நல்லது. நாங்க தனித்தனியா செய்வோம் நீங்க இரண்டும் சேர்த்து செய்வீர்களா?
ஜலீலா

Jaleelakamal

நீங்க கூட எலும்பு சூப் குறிப்பு கொடுத்து இருக்கீங்க,ஒரு மாறுதலுக்கு இதை கொடுத்தேன்.உங்க குறிப்புக்கள் அனைத்தையும் படிப்படியாய் பார்த்து வருகிறேன்.எங்க மாமா கடைக்குப்போனால் இப்படி வாங்கி வருவாங்க,சேர்த்து வைத்ததில் நன்றாக இருந்தது.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.