சுவீட் சிக்கன் பாஸ்தா

தேதி: December 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வேகவைத்த பாஸ்தா - 2 கப்
வேகவைத்த ரெட் கிட்னி பீன்ஸ் - அரை கப்
ஆலிவ் காய்கள் விதை நீக்கியது - 10 என்னம்
சிக்கன் எலும்பில்லாமல் வேகவைத்து அரைத்த விழுது - 3/4 கப்
மயோனைஸ் - 4 தேக்கரண்டி
பால் - கால் கப்
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
வினிகர் - கால் தேக்கரண்டி


 

சிக்கன் எலும்பில்லாத துண்டுகளை குக்கரில் இட்டு 3 விசில் விட்டால் நல்ல வெந்து விடும். அதனை தண்ணீர் வடித்து அரைத்துக் கொள்ளவும்.
பின் அதில் மயோனைஸ், வினிகர், சர்க்கரை, பால் கலந்து வைக்கவும்.
பாஸ்தாவில் 2 துளி எண்ணெய் விட்டு வேக வைத்து எடுத்து குளிர்ந்த நீரால் அலசினால் தனித்தனியே கிடைக்கும். அதனையும் பீன்ஸ், ஆலிவ் காய்களையும் மேலே சொன்ன சிக்கன் கலவையில் பிரட்டி பரிமாறலாம்.


குழந்தைகளுக்கு ப்ரெட்டில் வெறும் சிக்கன் கலவையை மட்டும் பிரட்டி கொடுக்கலாம்.சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஸ்வீட் சிக்கன் பாஸ்டா தளிக்கா ம்ம் நல்ல குறிப்பு டிரை பண்ணுகிறேன்.

ரிமா நலமா?

ஜலீல

Jaleelakamal

தளிகா,இன்றிரவு சமையலுக்கு உங்களின் பாஸ்தா ரெடி செய்து வைத்துள்ளேன்.ஆலிவ் இல்லாததால் அது இல்லாமல் செய்து உள்ளேன்.நல்ல ரெசிப்பி.நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

நன்றி ஜலீலக்கா&ஷாதிகா

ஆமாம் பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.நோன்பு திறக்க வைப்பார்கள் இதை குட்டி பவுளில்.ஆலிவ் காய்கள் இல்லாவிட்டால் குழந்தைகளுக்கு இன்னும் பிடிக்கும்