முட்டாப்பம்

தேதி: December 18, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

முட்டை - 4
மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - ஒரு பின்ச்
எண்ணெய், நெய் கலவை - 2 டேபிள் ஸ்பூன்


 

முட்டை, சர்க்கரை, பால், ஒரு பின்ச் உப்பு, மைதா சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் நெய் கலவை சிறிது விட்டு, ஆப்பம் போல் மூடி, திருப்பி போட்டு எடுக்கவும்.
விரைவில் வெந்து விடும். கருகாமல் பக்குவமாக சுட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான முட்டாப்பம் ரெடி.


மாலை நேரம் டிபனுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். மணம் பெரியோர்களையும் இழுக்கும். மைதா மாவு கொஞ்சம் அதிகம் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மிகவும் சுவையாக இருந்தது ஆசியா. மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி.நீங்கள் என் ரெசிப்பி தொடர்ந்து செய்வது மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.