குர்பானி கறி வறுவல்

தேதி: December 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தனிக்கறி - 1 கிலோ
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மிளகாய் வற்றல் - 8
மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்


 

சிறு துண்டுகளாக்கிய கறியை 5- 7 தண்ணீர் விட்டு கழுவி வடிகட்டி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வைக்கவும்.
அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றலை கிள்ளி போடவும். கறியை போட்டு மூடி போடவும். தண்ணீர் ஊறிக்கொண்டேயிருக்கும். தண்ணீர் வற்றி வேக வைத்து எடுக்கவும்.
வறுத்த கறியை ஆற வைத்து கைப்படாமல் ஒரு பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். ஸ்பூன் போட்டு எடுத்து சாப்பிடவும். வெளியே வைத்தால் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம். ஃப்ரிட்ஜில் என்றால் ஒரு மாதம் வைக்கலாம்.
சிம்பிலான ருசியான வறுவல் எல்லோருக்கும் பிடிக்கும்.


புனித தியாகப்பெருநாளாம் ஹஜ்ஜுப்பெருநாளில் இஸ்லாமியர்கள் ஆடு,மாடு,ஒட்டகம் குர்பானி கொடுப்பது வழக்கம். அந்த சமயம் எல்லோர் வீட்டிலும் இறைச்சி நிறைய இருக்கும். உறவினர்களும் ஒருவருகொருவர் பகிர்ந்து கொள்வார்கள். அதனை இவ்வாறு செய்து வைத்துக்கொண்டால் சில நாட்கள் சாப்பிட்டு மகிழலாம்.
இது தயிர் சாதம், ரசம் சாதம் மற்றும் அனைத்து சாதத்திற்கும் தொட்டுக்கொள்ளலாம். வெளிநாடு செல்பவர்கள் இப்படி செய்து எடுத்துச் செல்லலாம்.

மேலும் சில குறிப்புகள்