மைக்ரோவேவ் அவன் கலாகண்ட்

தேதி: December 18, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

விஜி சத்யா அவர்களின் குறிப்பினை பார்த்து இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள் செய்து காட்டியுள்ள குறிப்பு இது. இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

பால் பவுடர் - ஒரு கப்
ரிக்கோட்டா சீஸ் - ஒரு டப்பா
நெய் - ஒரு தேக்கரண்டி
சீனி - ஒரு கப்
பாதாம் - ஒரு தேக்கரண்டி
பிஸ்தா - ஒரு தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பால் பவுடர், சீனி, சீஸ் எல்லாவற்றையும் போட்டு ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
தவாவில் நெய் ஊற்றி பாதாம் மற்றும் பிஸ்தாவை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் பால் பவுடர், சீனி, சீஸ் கலவையை அவன் ட்ரேயில் கொட்டி பரப்பி விடவும்.
அதன் மீது வறுத்த பாதாம், பிஸ்தாவை தூவி விட்டு அவனில் வைத்து 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
25 நிமிடங்கள் கழித்து வெளியில் எடுத்து வில்லைகளாக்கி பரிமாறவும். சுவையான, மிக எளிதில் செய்யக்கூடிய மைக்ரோவேவ் அவன் கலாகண்ட் ரெடி.

மைக்ரோ அவனை பொறுத்து பேக் செய்யும் நேரம் வேறுப்படும். 30 அல்லது 35 நிமிடங்கள் வைத்திருக்கலாம் அதற்கு மேல் வைத்திருக்கக் கூடாது. ரிக்கோட்டா சீஸில் செய்யகூடியதால் மிகவும் ரிச் ஆக இருக்கும். இதில் கொழுப்பு உள்ளது மற்றும் கொழுப்பு இல்லாதது என்று இரு வகை சீஸ்கள் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஓ விஜி உடைய காலாகண்ட்டா அருமையாக இருக்கு நர்மாத அ சூப்பர்.பார்த்ததும் சாப்ப்டனும் போல் உள்ளது.

ஜலீலா

Jaleelakamal

நர்மதா, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை நான் நிறய்ய தடவை செய்துட்டேன், இருந்தாலும் நிங்க படத்தோட செய்து அனுப்பியதை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. நர்மதா நிங்க எந்த ப்ராண்ட் பால் பவுடர் யூஸ் செய்திங்க.

மைக்ரோவேவில் நான் நிறய்ய சிம்பிள் ரெசிப்பிஸ் நிறய்ய செய்வேன் என்னோட நைய்பர் ஆண்டி மைக்ரோவேவில் நிறய்ய செய்வாங்க அவங்க ரொம்ப எக்ஸ்பர்ட் அவங்ககிட்ட இருந்து நான் கற்றுகொண்டது. டைம் கிடைக்கும் போது மைக்ரோவேவ் மில்க் பேட செய்து பாருங்க ரொம்ப நன்றாக இருக்கும். ரொம்ப ரொம்ப நன்றி.....

Hi Your recipe is looking great. 1. How many ounce Ricotta cheese box i should buy? 2 sizes are available. the one is 32 ounces. is that the one u are using?
2. Is it a plastic microwave tray u were using?
Please let me know. i am going to have a guest on 25th pl let me know before that.
Also let me know some more easy microwave sweets if possible. Thanks in advance!

geetha

ifzi
pls let me know the amount of ricotta cheese as quickly as possible. it looks delicious. anxiously waiting for your answer madam

ifzi

ஹாய் இலா, விஜி, நர்மதா,

இன்று மைக்ரோவேவ் கலாகண்ட் செய்யலாமென்று நினைத்து, அறுசுவையில் 'தேடுக'வில் போட்டேன். விஜி அவர்களின் குறிப்பான இதை, நர்மதா செய்து யாரும் சமைக்கலாமில் போட்டு இருப்பதை இன்றுதான் பார்த்தேன். விஜியின் ஒரிஜினல் குறிப்பு இங்க இருக்கு ‍http://www.arusuvai.com/tamil/node/8100.

இதுக்கு முன் நான் இந்த குறிப்பை செய்தபோது நன்றாகவே வந்தது, ஆனால் இத்தனை அழகாக வில்லை வில்லையாக வரவில்லை. ஏதோ ஓரளவுக்கு இருந்தது, ஆனால் டேஸ்ட் பிரமாதமாக‌ இருந்தது. அப்போ, எனக்கு இருந்த அளவுகள் ட‌வுட்ஸ் எல்லாம் விஜி குறிப்பின்கீழ் கேட்டு, நம்ம இலா க்ளியர் பண்ணாங்க. இன்னைக்கு இங்க நர்மதா செய்து காட்டியிருக்கிறத பார்த்ததும், எனக்கும் இதுமாதிரி செய்ய ஆசையா இருக்கு.

ஓகே, இலா, நீங்க இந்த டிஷ்ஷை நிறைய தடவை செய்திருக்கிங்க, உங்க பதிவுகளிலிருந்து தெரிந்துகொண்டது. (ஒரு பெரிய ஃபேன்ஸ் கூட்டமே சேர்ந்திருக்கு!) உங்களுக்கு இந்த மாதிரி அழகா கேக்காக வந்ததா இலா?

அப்படியானால் நான் என்ன தப்பா செய்தேன்?!, எனக்கு நிறைய ஹோல்ஸ் விழுந்து, கொஞ்சம் ப்ளேக்கியாக வந்தது கலாக்கண்ட். ஒரு வேளை நான் பேட் ஃபிரீ சீஸ் யூஸ் பண்ணதாலா?! மில்க் பவுடர் ‍ நான்‍பேட் ட்ரை மில்க் பவுடர் போட்டேன். இப்ப எனக்கும் இங்க கீதா கேட்ட அத்தனை டவுட்ஸ்ம் வருகிறது. ப்ளீஸ் யாராவது வந்து கொஞ்சம் தெளிவு படுத்திட்டு போங்களேன்.
இன்னைக்கு இரவு வரும் கெஸ்ட்ஸ்க்கு இதுதான் டெஸெர்ட் என்று ப்ளான்! : ) ப்ளீஸ் ஹெல்ப் மீ.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

சுஸ்ரீ! யெஸ்.. எனக்கு கேக் மாதிரி தான் வந்தது... ஒரு ஃபலாட் பானில் கொட்டி தட்டையாக அமுக்கி விட்டேன்... அப்புறம் கொஞ்சம் சூடு ஆறியதும் டையாக்னலா கட்செய்து.. பிஸ்டாவும் தூவி அமுக்கி விட்டேன்... மைக்ரோவேவில இருந்து எடுத்ததும் இப்படி உடனடியா அமுக்கினா சரியா வருது...

நானும் சீஸ் ( பார்ஷியலி ச்கிம்மெட் - வால்மார்ட் ) பயன் படுத்தினேன்

மில்க் பவுடர் ஃபுல் பேட்..

Good luck
"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா,
எப்படி இருக்கிங்க? ரொம்ப தேங்ஸ் இலா உங்க உடனடி பதி(வு)லுக்கு! சரி, அப்ப ஆபீஸ் முடிந்து போகும்போது ஃபுல் பேட் மில்க் பவுடர் வாங்கிக்கொண்டு போய் செய்து பார்க்கிறேன். அப்புறம் நீங்க சொன்ன சின்ன சின்ன டிப்ஸையும் ஃபாலோ பண்ணறேன். இன்னைக்கு நைட் செய்து பார்த்திட்டு சொல்றேன். தேங்ஸ் அகைன்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் இலா,
கலாக்கண்ட் முயற்சி, வெற்றி!. ok, feedback time!. என் ப்ளான் படி கலாக்கண்ட் லாஸ்ட் வீக்கென்ட் செய்தேன். நன்றாக வந்தது. ஆனாலும், கொஞ்சம் கன்ஃபூயுஷன் இருக்கு இலா.
Full fat Milk powder கிடைக்கலை, அதனால் Non-fat போட்டு செய்தேன். மில்க் பவுடர், சர்க்கரை, சீஸ் மூன்றும் சேர்த்து கலக்கும்போதே எனக்கு தோசா பேட்டர் பதத்திற்கு வந்துவிடுகிறது. இங்க போட்டோல பார்த்தா, திக்கா கிட்டத்தட்ட (செமி)சாலிட் பதத்திற்கு அல்லவா இருக்கு?! அப்புறம் இன்னொரு விஷயம், என்னோட மைக்ரோவேவ் உள்ளே இருக்கும் ப்ளேட் சுற்றிவராத டைப். அதனால்தானோ என்னவோ, எனக்கு பேட்டர் பேக் ஆகி திக் ஆகிவரும்போதே, நான்கு ஓரங்களிலும் முதலில் ஆகிறது, நடுப்பகுதியில் இருக்கும் மாவு மட்டும் தண்ணியா இருக்கு, அப்புறம் அந்த இடம் திக்காக மாறும்போது நான்கு ஓரங்களிலும் பர்ன் ஆக(தீஞ்சு போக) ஆரம்பிக்குது. நான் இந்தமுறை உஷாரா, இரண்டு மூன்று முறை இடையில் கலந்து விட்டு, ஒரு வழியா செய்து முடித்தேன். முடிவில் நெய்யில் வறுத்த பாதாம், பிஸ்தா தூவி, நீங்க சொன்னமாதிரி அழுத்திவிட்டு, நன்கு சூடு ஆறியபிறகு, கட் செய்து எடுத்தேன்.

என்னென்னவோ செய்து, கடைசியில் ஃபைனல் ப்ராடக்ட் அருமையா, வில்லைகள் போட்டு வைக்கும்படி வந்துவிட்டது. வந்திருந்த கெஸ்ட்டும் நல்லாருக்கு என்று சொல்லி, எப்படி செய்வதென ரெஸிப்பி கேட்டுட்டு போனாங்க! : )

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

நான் உங்களுக்கு mail அனுப்பியுள்ளேன்.பார்த்துவிட்டு பதில் சொல்லுங்கள்.

i replied already.... Hope you got it...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..