கிறிஸ்துமஸ் அலங்கார வளையம்

தேதி: December 18, 2008

Average: 5 (1 vote)

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழரான செல்வி. விசா தற்போது முதுகலை அறிவியல் பயின்று வருகின்றார், கூடவே சமையலும். சமைக்க ஆரம்பித்தது மூன்று வருடங்களுக்கு முன்புதான் என்றாலும், அதீத ஈடுபாட்டின் காரணமாக இன்று பல்வேறு உணவுகளை சுவைபட தயாரிப்பதில் திறன்பெற்றவராய் இருக்கின்றார். கேக், குக்கீஸ் செய்வதை தனது தனித்திறமையாக குறிப்பிடும் இவர், வரைதல், கைவினைப்பொருட்கள் செய்தல் போன்றவற்றை கொண்டு ஓய்வுப் பொழுதினை செலவு செய்கின்றார்

 

கம்பி
கம் டேப்
ரிப்பன்
செயற்கை இலைகள்/ கிளைகள்
கிறிஸ்மஸ் ஆர்ணமெண்ட்ஸ்

 

பழைய கிறிஸ்துமஸ் மரம், பூச்செண்டுகளிலிருந்து விடுப்பட்ட இலைகள், கொத்துகளை பயன்படுத்தலாம். பூக்கள் செய்யும் கம்பிகளை உபயோகித்தால் வளைப்பதற்கு எளிதாக இருக்கும்.
மூன்று அல்லது நான்கு கம்பிகளை ஒன்றாக இணைத்து நன்கு முறுக்கி வைத்துக் கொள்ளவும். சிறிய கம்பிகளாக இருந்தால், இரண்டு அல்லது மூன்று செய்துக் கொள்ளவும்.
முறுக்கி வைத்திருக்கும் கம்பிகளைக் கொண்டு ஒரு வளையம் போல் செய்துக் கொள்ளவும்.
கம்பிகளின் முனைகள் கையில் குத்தாமல் இருக்க வளையத்தின் மேல் கம் டேப்பை சுற்றிக் கொள்ளவும்.
செயற்கை இலைகளை அந்த வளையத்தில் சுற்றிக் கொள்ளவும். இங்கே பயன்படுத்திருக்கும் செயற்கை இலைகள் ஏற்கனவே கம்பி தண்டுகளை கொண்டிருப்பதால் வளையத்தில் சுற்றுவது எளிது.
தனித்தனி இலைகளாக இருந்தால் அதன் மேல் கம் டேப்பை வைத்து சுற்றிக் கொள்ளவும். விரும்பிய வண்ணத்தில் இலைகளை சேர்த்து அலங்கரிக்கவும்.
இதேப் போல் வளையத்தின் முழுவதும் இலைகளை சுற்றி வைத்து அலங்கரித்துக் கொள்ளவும்.
மேலே ஹூக் வைத்திருக்கும் ஒரு பாலை(கிறிஸ்துமஸ் ஆர்னமெண்ட்) எடுத்து அதன் துளையில் படத்தில் காட்டியுள்ளது போல் கம்பியை சுற்றிக் கொள்ளவும்.
இந்த கம்பி கோர்த்து வைத்திருக்கும் பாலை வளையத்தில் வைத்து சுற்றிக் கொள்ளவும்.
வளையத்தை சுற்றிலும் விரும்பிய இடங்களில் எல்லாம் பாலை வைத்து சுற்றிக் கொள்ளவும். விதவிதமான, வித்தியாசமான நிறங்களில் கிறிஸ்துமஸ் ஆர்னமெண்ட்ஸ், வண்ண பூக்கள், ரிப்பன் போஸ் போன்றவற்றை வைத்து அலங்கரிக்கலாம்.
வளையத்தின் ஓரிடத்தில் கதவுகளில் மாட்டுவதற்கு எளிதாக ரிப்பனைக் கட்டிக் கொள்ளவும். கிறிஸ்துமஸ் அலங்கார வளையம் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

விசா.. ரொம்ப நல்லா இருக்கு..இதுக்கு ஒரு 20 டாலர் செலவு செய்யாம வீட்டிலே செய்யலாம் போல... கம்பி கைல குத்திடாதா??
"If you want things to be different, perhaps the answer is to become different yourself." - Not mine someone else's

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஆஹா! இதெல்லாம் நீங்களே செய்வீங்களா? பார்த்து வால்மார்ட் காரங்க கோவிச்சுக்க போறாங்க.:)

உன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.

அன்பு விசா,
பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. நான் தெர்மகோலை வளையம் போல் வெட்டி செய்வேன். இது வித்தியாசமாக இருக்கு. நாளைக்கே வேண்டியதையெல்லாம் வாங்கி செய்துடணும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

விசா,
சுபர்ப்.:-)
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ இலா மேடம், நன்றி :-) கம்பி கையில் குத்தாமல் இருப்பதற்காக கம் டேப்பால் நன்றாக சுத்திக்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் கம்பி முனைகள் கூராய் இருக்கின்றதோ அங்கெல்லாம் கம்டேப்பால் சுத்திக்கொள்வதால் குத்தாது.

ஹலோ அம்பிகா , நன்றிகள் :-) கடைகளில் வாங்குவதை விட நாங்களே செய்து கொள்ளும் போது ஒரு திருப்திதானே ... வீட்டில் இருப்பவற்றைக் கொண்டு இப்படி எதாவது செய்வதுதான் :-).

ஹலோ செல்வி மேடம், நன்றி :-) நீங்கள் சொல்வதும் இலகுவாய் இருக்கும் போலிருக்கிறது . நேரம் கிடக்கும் போது செய்துபார்க்கவேண்டும். நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.

ஹலோ இமா மேடம், நன்றிகள் :-)

அன்புடன்,
விசா

விசா,
கிறிஸ்மஸ் அலங்கார வளையம் கண்ணைக்கவர்கிறது. அழகோ அழகு. மேலும் உங்கள் திறமை வளர வாழ்த்துக்கள்
செபா.

ஹலோ செபா, ரொம்ப நன்றி :-)
அன்புடன் விசா.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta